Healthy Foods To Eat In Empty Stomach For Children: குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு சரியான அளவிலான ஊட்டச்சத்துக்களைக் கொடுப்பது அவசியமாகும். ஆனால், பல குழந்தைகள் காலை நேரங்களில் சில ஆரோக்கியமற்ற பொருள்களை உட்கொள்கின்றனர் அல்லது நீண்ட நேரம் பசியுடன் இருப்பார்கள். இவை இரண்டுமே குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இந்த சூழ்நிலையில் குழந்தைகளின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, அவர்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் சில சத்தான உணவுகளைக் கொடுக்கலாம். இவை அவர்களின் உடலை ஆரோக்கியமாக வைப்பதுடன், பல்வேறு பருவகால நோய்களிலிருந்தும் காக்கிறது. குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்காக அவர்களுக்குக் காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டிய உணவுகள் சிலவற்றைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Peanut Powder Benefits: குழந்தைகளுக்கு வேர்க்கடலை பொடி தருவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
குழந்தைகள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவுகள்
வாழைப்பழம்
இது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் பழமாகும். வாழைப்பழத்தில் துத்தநாகம், சோடியம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. இதை குழந்தைகளுக்குக் காலையில் வெறும் வயிற்றில் கொடுப்பது, குழந்தையின் உடல் எடையை அதிகரிப்பதுடன், எலும்பு வலுவாக இருக்கவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே குழந்தைகளுக்கு தினமும் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தைக் கொடுக்கலாம்.
ஆப்பிள்
ஆப்பிள் பழம் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மிகுந்த ஆரோக்கியம் மிக்க பழமாகும். இதில் உள்ள கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிளைக் கொடுப்பது அவர்களின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மேலும், குழந்தைகளின் கண் பார்வை மேம்பாட்டிற்கும், ஆரோக்கியமிக்கதாகவும் இருக்க காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிளைத் தரலாம்.
பாதாம்
புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நார்ச்சத்து உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பாதாம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை தருவதாகும். குழந்தைகளுக்கு பாதாம் கொடுப்பது, அவர்களின் நினைவாற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது. கூடுதலாக, குழந்தைகளுக்குத் தேவையான நோயெதிர்ப்புச் சக்தியை பலப்படுத்துகிறது. எனவே குழந்தைகளுக்கு காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பாதாம் கொடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Child Calcium Deficiency: குழந்தைக்கு கால்சியம் சத்து குறைவா இருக்க இது தான் காரணமாம்
ஆம்லா முராப்பா
ஆம்லா முராப்பா என்பது நெல்லிக்காயை பதப்படுத்தி இனிப்பு மற்றும் காரம் என இரு சுவையுடனும் தயாரிக்கப்படும் உணவுப் பொருளாகும். இதில் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு ஆம்ல முராப்பா கொடுப்பது அவர்களின் கண்பார்வை மேம்பாட்டிற்கும், வயிறு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. மேலும், இது குழந்தைகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தியை அளிப்பதால், பருவகால நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
மிதமான சுடுநீர்
குழந்தைகளுக்குக் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் கொடுப்பது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். இவ்வாறு காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரைக் கொடுப்பது அவர்களின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பருவகால நோய்களில் இருந்து விடுபடவும் உதவுகிறது. மேலும் இது நீண்ட காலத்திற்கு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலே கூறப்பட்டவற்றை, குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுக்கலாம். எனினும், குழந்தைகளுக்கு ஒவ்வாமை அல்லது வேறு ஏதேனும் நோய்வாய் பிரச்சனைகள் இருப்பின், மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே இவற்றைக் கொடுக்க வேண்டும். குறிப்பாக மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இந்த உணவுகள் பரிந்துரை செய்யப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Weak Children Foods: உங்க குழந்தை பலவீனமா இருக்கா? அப்ப ஸ்ட்ராங்கா இருக்க இந்த உணவெல்லாம் கொடுங்க.
Image Source: Freepik