Top nutritious fish for children’s health and development: குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு பெற்றோர்கள் கவனமாக இருப்பது அவசியமாகும். குறிப்பாக, உணவுமுறையில் சீரான, சரியான மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியம். அந்த வரிசையில், குழந்தைகளின் நன்மைக்கு அவர்களின் உணவில் என்ன வகையான மீன்கள் கொடுப்பது என்பது குறித்து பெற்றோர்கள் பலருக்கும் தெரிவதில்லை. ஆம். உண்மையில் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மீன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
பொதுவாக மீனில் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் தாதுக்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மீன்களை உட்கொள்வது குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் குழந்தைகளுக்கு என்ன வகையான மீன்கள் நன்மை பயக்கும் என்பது குறித்து ஃபரிதாபாத், செக்டார் 8 இல் உள்ள சர்வோதயா மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் மீனா குமாரி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
குழந்தைகளுக்கு எந்த மீனை உணவாகக் கொடுக்க வேண்டும்?
நிபுணர் மீனா குமாரி அவர்களின் கூற்றுப்படி, சந்தையில் கிடைக்கக்கூடிய அனைத்து உண்ணக்கூடிய மீன்களும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருக்காது. சில மீன்களில் பாதரம் காணப்படும். குழந்தைகள் அதிகளவு பாதரசத்தை உட்கொண்டால், அது கடுமையான நோய்களை ஏற்படுத்தும் சூழல் உண்டாகலாம். எனவே, லேசான, சத்தான மற்றும் குறைந்த பாதரசம் கொண்ட மீன்களை மட்டுமே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Fish For Heart Health: கண்ட கண்ட மீன் வாங்காம இந்த மீன் வாங்கி சாப்பிடுங்க! இதயம் ஹெல்த்தா இருக்கும்!
சால்மன்
சால்மன் மீன் குழந்தையின் மன வளர்ச்சியை மேம்படுத்த உதவுகிறது. இந்த மீனில் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை குழந்தைகளின் செரிமான நரம்பை மேம்படுத்தி மலச்சிக்கல், வயிற்று வலி மற்றும் அமிலத்தன்மையைக் குறைக்க உதவுகிறது. மேலும் சால்மன் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் ஆற்றலை அதிகரிக்க வழிவகுக்கிறது.
ரோகு மீன்
பீகார், வங்காளம் மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் ரோகு மீன் மிகவும் பிரபலமான மீன் வகையாகும். இதில் மிகக் குறைந்த அளவிலான பாதரசம் உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, டி மற்றும் கால்சியம் போன்றவை காணப்படுகின்றன. நிபுணரின் கூற்றுப்படி, ரோகு மீனை உட்கொள்வது குழந்தைகளில் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கவும், உடலில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உடலில் கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் இதய பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கலாம்.
கெளுத்தி மீன்
இது கெளிறு அல்லது மங்கூர் மீன் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வகை மீன்களில் அதிகளவிலான புரதச்சத்து உள்ளது. இவை குழந்தைகளின் தசைகளை வலுப்படுத்தவும், காயத்திலிருந்து விரைவாக மீள்வதற்கும் உதவுகிறது. எனினும், கெளுத்தி மீனின் பாதரச அளவு சற்று அதிகமாக உள்ளது. எனவே கெளுத்தி மீனை 2 வயதுக்குப் பிறகு தான் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: வாரம் ஒரு முறை உங்க உணவில் கருவாடு சேர்த்துக்கணும்.. ஏன் தெரியுமா?
ஹில்சா
ரோகு, சால்மன் மற்றும் மங்கூர் மீன்களை விட, ஹில்சா மீனில் அதிகளவு எலும்புகள் உள்ளன. மேலும் இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது குழந்தைகளின் மூளை திறனை அதிகரிக்க உதவுகிறது. இவை விஷயங்களை நினைவில் கொள்ளும் திறனை அதிகரிக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை ஹில்சா மீனை உட்கொள்வது விஷயங்களை நினைவில் கொள்ள உதவுவதாக நிபுணர் கூறுகிறார். இதில் உள்ள DHA (டோகோசாஹெக்ஸெனாயிக் அமிலம்) குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
குழந்தைகளுக்கு மீன் உணவளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- மீன்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் மன வளர்ச்சியை மேம்படுத்த உதவுகின்றன
- மீன்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி பளபளப்பு மற்றும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகின்றன
- மீனில் உள்ள புரதம் மற்றும் துத்தநாகம் போன்றவை நோயெதிர்ப்புச் சக்தியை பலப்படுத்துகிறது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
- பல்வேறு வகையான மீன்களில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கண் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், கண் பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது.
முடிவுரை
குழந்தைகளுக்கு சரியான மீன்களை உணவாகக் கொடுப்பதன் மூலம் அவர்களின் வளர்ச்சியை மேம்படுத்தலாம். அதே சமயம், குழந்தை திட உணவை உண்ணத் தொடங்கிய பின்னரே மீன்களைக் கொடுப்பது பாதுகாப்பானது. ஆனால், மீன்களின் எலும்புகள் மிகவும் மெல்லியவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு மீன்களை உணவாகக் கொடுப்பதற்கு முன்பாக, அதன் எலும்புகளை சரியான முறையில் அகற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், குழந்தையின் தொண்டையில் மீன் எலும்பு சிக்கிக்கொண்டால், உடனடியாக மருத்துவரிடம் உதவி பெறுவது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: மீன் நல்லதுதான்... ஆனா மழைக்காலத்தில் சாப்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?
Image Source: Freepik