வாரம் ஒரு முறை உங்க உணவில் கருவாடு சேர்த்துக்கணும்.. ஏன் தெரியுமா?

Health benefits of eating karuvadu: உலர்ந்த மீன்கள் பல்வேறு ஆரோக்கியமிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதை உட்கொள்வது உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் உலர்ந்த மீன்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்
  • SHARE
  • FOLLOW
வாரம் ஒரு முறை உங்க உணவில் கருவாடு சேர்த்துக்கணும்.. ஏன் தெரியுமா?


Health benefits of eating dry fish: அசைவ உணவு சாப்பிடுவதென்றால் யாருக்குத் தான் விருப்பம் இருக்காது. அசைவ உணவில் பெரும்பாலும் ஆடு, கோழி, மீன் உள்ளிட்டவற்றையே அதிகம் சாப்பிடுவர். இதில் அனைத்துமே உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் குறிப்பாக, மீன் ஆனது நாட்டின் அனைத்து கடலோர மாநிலங்களிலும் கிடைக்கக்கூடிய பல நூற்றாண்டுகளாக விருப்பமான உணவாக அமைகிறது. மீன்களில் ஏராளமான வகைகள் உள்ளன. அதே போல், மீனின் ஒரு முக்கிய பகுதியாக உலர்ந்த மீனும் அடங்கும்.

இது நீண்ட காலமாக பாதுகாக்கப்படும் திறன் காரணமாக, அனைத்து வகை மக்களின் முதன்மையான தேர்வாக அமைகிறது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உலர்ந்த மீன் ஒரு சூப்பர்ஃபுட்டாகவே அமைகிறது. இது கருவாடு என்று பரவலாக பெயர் பெற்று அனைத்து மக்களாலும் நன்கு விரும்பப்படும் உணவாகும். இதில் கருவாடு அல்லது உலர்ந்த மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்.

உலர்ந்த மீனில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பொதுவாக, புதிய மீன்களிலிருந்து ஈரப்பதத்தை நீக்கி இந்த உலர் மீன்கள் தயாரிக்கப்படுகிறது. 100 கிராம் அளவிலான கருவாட்டில் சுமார் 50 முதல் 60 கிராம் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் - 1-3 கிராம், கால்சியம் - 500-900 மி.கி, இரும்பு - 5 முதல் 10 மி.கி மற்றும் சோடியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் அதிகளவிலான ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், உலர்ந்த மீன்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Karuvadu Benefits: கருவாடுக்கு மிஞ்சிய சூப்பர் ஃபுட் எதுவும் இல்லை என உங்களுக்கு தெரியுமா?

உலர்ந்த மீனின் தரம்

கருவாடு அல்லது உலர்ந்த மீனில் நல்ல சுவை மற்றும் சரியான அளவு ஊட்டச்சத்துக்களைப் பெறலாம். மேலும், இது உலர்ந்த மீனின் தரத்தைப் பொறுத்ததாகும். நீண்ட காலப் பாதுகாப்பிற்காக, மீன்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் உலர்ந்த மீன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வழியில், அதிகப்படியான மீன்களை வீணாக்காமல் தவிர்க்கலாம். மேலும் மீன்களை எவ்வாறு முறையாக சேமிப்பது என்பது பற்றி கவலைப்படாமல் நீண்ட நேரம் பாதுகாக்கலாம்.

உலர்ந்த மீன்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

இதய ஆரோக்கியத்திற்கு

உலர்ந்த மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலில் கொழுப்பை சமப்படுத்த உதவுகிறது. உலர்ந்த மீனைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.

எலும்புகளை பலப்படுத்த

உலர்ந்த மீனில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன. இந்த உலர்ந்த மீனை எலும்புகள் பலவீனமாக இருக்கக்கூடிய வளரும் குழந்தைகளின் எலும்பு பிரச்சினைகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். பொதுவாக மாதவிடாய் நின்ற பிறகு, பெண்களின் எலும்புகள் பலவீனமடையத் தொடங்குகிறது. இந்நிலையில் உலர்ந்த மீன் சாப்பிடுவது அவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

தசைகளை பலப்படுத்துவதற்கு

உலர்ந்த மீனில் அதிகளவிலான புரதம் நிறைந்துள்ளது. இது தசை வளர்ச்சியை ஆதரிக்க உதவுகிறது. மேலும், பலவீனமான தசைகள் உள்ளவர்களுக்கு அல்லது ஜிம்மில் அதிக உடற்பயிற்சி செய்ய விரும்புவோர்க்கு, கருவாடு நல்ல புரதங்கள் நிறைந்த சிறந்த மூலமாகும்.

இரத்தக் குறைபாட்டை சரி செய்ய

உலர்ந்த மீனில் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இவை இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. எனவே இதை இரத்த சோகை உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்குக் கொடுப்பதன் மூலம் அவர்களின் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Karuvattu Kulambu: ஒரு முறை இப்படி கருவாட்டு குழம்பு வையுங்க.. தெருவே மணக்கும்!

சரும பிரச்சனைகளை நீக்குவதற்கு

உலர்ந்த மீனில் ஒமேகா-3 மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளது. இதன் சரியான சமநிலை சருமத்தின் பளபளப்பை மேம்படுத்த உதவுகிறது. தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், உலர்ந்த மீன் சாப்பிடுவது முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் போன்றவற்றைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. உலர்ந்த மீனில் உள்ள புரதம் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இது சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

image

how-to-get-rid-of-dry-skin-1750162894345.jpg

மூளை சக்தியை அதிகரிக்க

உலர்ந்த மீன்களில் போதுமான அளவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகிறது. இவை மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஆகும். இதை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாணவர்கள் எடுத்துக் கொள்வது, மூளை சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இது சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் சக்தியை அதிகரிக்கிறது.

உலர்ந்த மீனை சாப்பிடும் முறை

  • உலர்ந்த மீனில் அதிக அளவிலான சோடியம் நிறைந்திருக்கும். எனவே உப்பை நீக்குவதற்கு சாப்பிடுவதற்கு முன் 1 மணி நேரம் சாதாரண நீரில் ஊற வைக்க வேண்டும்.
  • எனவே ஊறவைத்த பிறகு, மீனை 2-3 முறை சுத்தமான தண்ணீரில் கழுவலாம். இது மீனில் உள்ள சோடியம் அளவைக் குறைக்க உதவுகிறது
  • உலர்ந்த மீனை வறுப்பதற்கு பதிலாக, ஆவியில் வேகவைக்க வேண்டும்.
  • உலர்ந்த மீனை தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயுடன் சேர்த்து சமைக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், இதன் செரிமான செயல்முறை அதிகம் பாதிக்கப்படாது.

உலர்ந்த மீன்களை சாப்பிடும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

உலர்ந்த மீனை சாப்பிடுவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். எனினும், இதை உலர்த்தி சேமிக்கும்போது, அதில் அதிக அளவு உப்பு சேர்க்கப்படுகிறது. இதனால், உலர்ந்த மீனின் சோடியம் உள்ளடக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, அன்றாட உணவில் அதிக அளவு சோடியம் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது சிறுநீரகப் பிரச்சனைகள் மற்றும் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே ஏற்கனவே இரத்த அழுத்தம் அல்லது சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளைக் கொண்டிருப்பவர்கள், இதை சாப்பிடுவதற்கு முன்னதாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Dry Fish Benefits: கருவாடு சாப்பிட்டால் உடம்புக்கு இவ்வளவு நல்லதா? ஆனா இவங்க எல்லாம் சாப்பிடக்கூடாது?

Image Source: Freepik

Read Next

வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை ஒருவர் எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.? இங்கே காண்போம்..

Disclaimer