கருவாடு தமிழர்களின் சுவைமிக்க உணவாக இருந்தாலும், அனைவருக்கும் பாதுகாப்பானதல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கருவாட்டை அதிகமாக உட்கொள்வது சில நோயாளிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
மருத்துவர் ஐசக் அப்பாஸ் கூறுவதாவது, “கர்ப்பிணி பெண்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சிறுநீரக கோளாறு உள்ளவர்கள், சரும நோய்கள், மூட்டு வலி மற்றும் சுவாச பிரச்னைகள் கொண்டவர்கள் கருவாட்டைத் தவிர்க்க வேண்டும்” என்றார். மேலும் அவர் பகிர்ந்த தகவல்கள் பின்வருமாறு..
கருவாடு சாப்பிடுவதன் பக்க விளைவுகள்
உப்புச் சத்து அதிகம்
கருவாட்டில் இருக்கும் அதிக உப்பு உடலில் நீரை தக்கவைத்து, இரத்த அழுத்தத்தை உயர்த்துகிறது. இதனால் இதய நோயாளிகளும், சிறுநீரக நோயாளிகளும் ஆபத்தில் சிக்கக்கூடும்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்து
கர்ப்பிணிகளில் அதிக இரத்த அழுத்தம் (Preeclampsia) ஏற்பட்டால், கருவின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: வாரம் ஒரு முறை உங்க உணவில் கருவாடு சேர்த்துக்கணும்.. ஏன் தெரியுமா?
மூட்டு வலி அதிகரிப்பு
கருவாட்டில் இருக்கும் Purine, யூரிக் அமிலமாக மாறி, மூட்டு வலியை அதிகரிக்கிறது.
Histamine பக்கவிளைவுகள்
கருவாடு நாள்பட நாள்பட, அவற்றில் எஞ்சி இருக்கும் புரதம், Histamine என்ற கலவையினை வெளியேற்றும். இந்த கலவை மூச்சுத்திணறல், முகத்தில் வீக்கம், அரிப்பு, முகப்பருக்கள் போன்ற பல பிரச்னைகளை அதிகரிக்கும்.
View this post on Instagram
மருத்துவர்கள் எச்சரிக்கை
கருவாடு சாப்பிடுவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் உள்ளனர். மற்றவர்களும் குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். இல்லையெனில் அது உடலுக்கு தீங்காக மாறும் அபாயம் உள்ளது என்று மருத்துவர் ஐசக் அப்பாஸ் கூறினார்.