High blood pressure symptoms when sleeping: இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக இரத்த அழுத்த அதிகரிப்பு பிரச்சனை அமைகிறது. இது உயர் இரத்த அழுத்தம் என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது, இரத்த நாளங்களின் சுவர்களில் இரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகரிப்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இவ்வாறு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக உழைக்க வேண்டும். பொதுவாக, சாதாரண இரத்த அழுத்தம் 120/80 mmHg க்கும் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது அதிகமாக இருக்கும் போது உயர் இரத்த அழுத்தம் உண்டாகிறது.
இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை உயர் இரத்த அழுத்தத்திற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. சில சமயங்களில், உயர் இரத்த அழுத்தம் உயிருக்கே ஆபத்தானதாக இருக்கலாம். ஏனெனில், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது. எனவே தான் இதை ஒரு அமைதியான கொலையாளி என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் மக்கள் பகல் நேரங்களில் இரத்த அழுத்தத்தை சரிபார்க்கின்றனர். ஆனால், இரத்த அழுத்தம் இரவில் கூட அதிகரிக்கலாம்.
ஆம், இரவில் இரத்த அழுத்தம் அதிகரித்தால் சில பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதில் இரவில் இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நொய்டாவின் இந்திய குடும்ப மருத்துவரின் தலைவர் டாக்டர் ராமன் குமார் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: உயர் இரத்த அழுத்தத்தைக் கன்ட்ரோலில் வைக்க தினமும் நைட் தூங்கும் முன் இத மட்டும் செய்யுங்க
உயர் இரத்த அழுத்தத்தால் இரவில் தோன்றும் அறிகுறிகள்
தலைவலி இருப்பது
தலைவலி என்பது பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். ஒவ்வொரு நபரும் தங்கள் வாழ்க்கையின் எதாவதொரு கட்டத்தில் தலைவலியை எதிர்கொள்கின்றனர். ஆனால், இரவில் அடிக்கடி தலைவலி வந்தால் அதைப் புறக்கணிக்கக் கூடாது. ஏனெனில் இரவில் தலைவலி இருப்பது உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். உண்மையில், இரவில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது தலைவலியை ஏற்படுத்தலாம். சில நேரங்களில் காலையில் எழுந்தவுடன் கூட தலைவலி ஏற்படலாம்.
முக்கிய கட்டுரைகள்
குறட்டை
குறட்டை என்பது தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான அறிகுறியைக் குறிக்கிறது. ஆனால், இதய நோய்களால் கூட தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே தூங்கும் போது சத்தமாக குறட்டை விட்டால், இந்த அறிகுறியை புறக்கணிக்கக் கூடாது. இந்த சூழ்நிலையில், இரத்த அழுத்தத்தை சரிபார்ப்பது அவசியமாகும். மேலும் குறட்டை வேறு பல நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். அதாவது சில சந்தர்ப்பங்களில், எந்த நோயும் இல்லாமல் கூட குறட்டை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
கைகள் அல்லது கால்களில் எரியும் உணர்வு
கைகள் அல்லது கால்களில் எரியும் உணர்வை பிரச்சனையும் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இரவில் எரியும் உணர்வு இருப்பின், அவர்கள் கட்டாயம் இரத்த அழுத்தத்தை சரிபார்ப்பது அவசியமாகும். ஏனெனில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, உடலில் வெப்பம் அதிகரித்து காணப்படும். இதுவே எரியும் உணர்வை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில், இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது மக்கள் கால்களில் கூச்ச உணர்வை சந்திக்கின்றனர். இந்த அறிகுறியை புறக்கணிக்காமல், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Blood Pressure: ஹை BP-யை கட்டுப்படுத்த மாத்திரை மட்டும் போதாது... கட்டாயம் இந்த உணவுகளையும் சாப்பிடுங்க!
தூங்குவதில் சிரமம்
இரவில் நல்ல தூக்கத்தைப் பெறுவதில் சிரமம் ஏற்படுவதும் உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். உண்மையில், உயர் இரத்த அழுத்தமானது தூக்க சுழற்சியை சீர்குலைக்கிறது. இது தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது. எனவே தான் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கின்றனர். எனவே இரவில் தூங்குவதில் சிக்கல் இருந்தால், கண்டிப்பாக ஒரு முறை இரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும். நல்ல தூக்கம் பெற, மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும். இதற்கு காலையில் தியானம் செய்யலாம்.
மன அழுத்தம் அல்லது பதட்டமாக உணர்வது
மன அழுத்தம் அல்லது பதட்டம் உண்டாவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இரவில் அதிக மன அழுத்தத்தை உணர்ந்தால் அது உயர் இரத்த அழுத்தத்தைக் குறிக்கலாம். இதனால், எப்போதாவது தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம். உண்மையில், உயர் இரத்த அழுத்தம் காரணமாக உடலில் கார்டிசோல் ஹார்மோனின் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே, ஒருவர் மன அழுத்தத்தை உணர்கின்றனர். எனவே இரவில் மன அழுத்தத்தையோ அல்லது அமைதியின்மையையோ உணர்ந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: உயர் ரத்த அழுத்தம் இருக்குறவங்க தப்பித் தவறக்கூட இதை செய்யக்கூடாது.. மீறினால் இந்த 3 உறுப்புகளுக்கு ஆபத்து!
Image Source: Freepik