Winter high BP causes: குளிர்காலத்தில் இரத்த அழுத்தம் உயர்ந்தால் இந்த அறிகுறிகள் எல்லாம் தோன்றும்

High blood pressure in winter: குளிர்காலத்தில் பல்வேறு சுகாதார பிரச்சனைகள் எழுகிறது. இதில் உயர் இரத்த அழுத்தமும் அடங்கும். ஏனெனில், இந்த காலகட்டத்தில் உயர் இரத்த அழுத்தம் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த கடுமையான குளிர்காலத்தில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக சில அறிகுறிகள் தென்படலாம். இதில் குளிர்ந்த காலநிலையின் போது அதிகரிக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Winter high BP causes: குளிர்காலத்தில் இரத்த அழுத்தம் உயர்ந்தால் இந்த அறிகுறிகள் எல்லாம் தோன்றும்


Symptoms of high blood pressure: குளிர்காலம் வந்துவிட்டாலே பலரும் பருவகால பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக மாரடைப்பு பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம் போன்றவை இந்த காலகட்டத்தில் அதிகரிக்கிறது. கடுமையான குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு குளிர்காலம் தனித்துவமான சவால்களை ஏற்படுத்துகிறது. குளிர்ந்த காலநிலையில் இரத்த நாளங்கள் சுருங்குவதால், இரத்த அழுத்த அளவு அதிகரித்துக் காணப்படும்.

கடுமையான சந்தர்ப்பங்களில், இந்த சுருக்கம் காரணமாக மாரடைப்பு அபாயம் மற்றும் இன்னும் பிற பிரச்சனைகள் ஏற்படலாம். எனினும், சரியான நேரத்தில் இரத்த அழுத்தத்தைக் கண்டறிவது அனைத்து வகையான ஆபத்தையும் குறைக்கலாம். இந்நிலையில், இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான அறிகுறிகளைக் கண்டறிவது அவசியமாகும். இதில், குளிர்ந்த காலநிலையில் உயர் இரத்த அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இதை ஃபாளோ செய்யவும்

குளிர்காலத்தில் உயர் இரத்த அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்

மூச்சுத்திணறல்

உடல் செயல்பாடு அல்லது ஓய்வு நேரத்தில் கூட மூச்சுத்திணறல் ஏற்படுவது உயர் இரத்த அழுத்தத்தின் குறிப்பிடத்தக்க எச்சரிக்கையாக அமைகிறது. குறிப்பாக, குளிர்ந்த காற்று காற்றுப்பாதைகளை சுருக்கி, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சுவாசத்தை கடினமாக்கலாம். எனவே, குளிர்கால சூழ்நிலையின் போது வழக்கத்திற்கு மாறாக மூச்சுத்திணறலை உணர்ந்தால், இரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டியது அவசியமாகும்.

மார்பு வலி

மார்பு வலி அல்லது அசௌகரியமானது எப்போதும் புறக்கணிக்கப்படாத ஒன்றாகும். குறிப்பாக, உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்களுக்கு இது ஒரு கடுமையான சூழலாகத் தென்படலாம். குளிர்காலத்தில், குளிர்ந்த காலநிலையால் இருதய அமைப்பில் ஏற்படும் கூடுதல் அழுத்தம் இதயம் தொடர்பான பிரச்சனைகளின் ஆபத்தை அதிகரிக்கிறது. இதனால், மார்பில் வலி, அழுத்தம் அல்லது இறுக்கம் போன்ற பல்வேறு அறிகுறிகள் தென்படுகிறது. இவையே உயர்ந்த இரத்த அழுத்தம் அல்லது பிற தீவிர நிலைகளைக் குறிக்கிறது. இந்த அறிகுறிகளைச் சந்தித்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

தலைவலி

உயர் இரத்த அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று தலைவலி ஏற்படுவதைக் குறிக்கிறது. அதிலும் குறிப்பாக, குளிர்ந்த காலநிலையின் போது அடிக்கடி அல்லது மோசமான தலைவலியை சந்திக்கும் நிலை ஏற்படலாம். இது உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணியாக அமைகிறது. மேலும், குளிர்ந்த காலநிலையின் போது அதிகரித்த மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தலாம். இதனால், தலைவலி மீண்டும் அதிகமாகலாம். எனவே இந்த சூழ்நிலையில் தலைவலிகள் தொடர்ந்து அல்லது கடுமையானதாக இருப்பின், இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்க சுகாதார நிபுணரின் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: High BP Control: உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்!

சோர்வு அல்லது பலவீனம்

குளிர்காலம் வந்துவிட்டாலே சோர்வு அல்லது பலவீனம் பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. எனினும், இந்த காலகட்டத்தில் வழக்கத்திற்கு மாறான சோர்வு அல்லது பலவீனத்தை சந்தித்தால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதைக் குறிக்கிறது. மேலும் இது உடல் வெப்பநிலையைப் பராமரிக்க அதிக வேலை செய்வதால், குளிர்ந்த வெப்பநிலையின் போது அதிக ஆற்றல் செலவிற்கு வழிவகுக்கலாம்.

மூக்கில் இரத்தம் வடிதல்

குளிர்ந்த காலநிலையின் போது, எந்த காரணமும் இல்லாமல் மூக்கில் இரத்தம் வருவது உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறியாக காணப்படலாம். ஏனெனில், குளிர்ச்சியான காலநிலையில் வறண்ட, குளிர்ந்த காற்றானது நாசி சவ்வுகளை உலர் மற்றும் உடையக்கூடியதாக மாற்றுகிறது. இதுவே இரத்தப்போக்கிற்கு வழிவகுக்கிறது. எனினும், மற்ற சில அறிகுறிகளுடன் அடிக்கடி மூக்கில் இரத்தம் வருவதைக் கண்டால், இரத்த அழுத்தம் இயல்பை விட அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது.

பல்வேறு காரணங்களால், குளிர்ந்த காலநிலையில் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்தம் பல்வேறு அறிகுறிகளைத் தோற்றுவிக்கிறது. எனவே, இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றைக் கவனித்தால், இரத்த அழுத்தத்தை மதிப்பிடவும், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சில தேவையான மாற்றங்களைச் செய்வதற்கும் சுகாதார நிபுணரை அணுகி பலன் பெறுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: High BP: உயர் இரத்த அழுத்தம் பார்வையை மங்களாக்குமா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

Image Source: Freepik

Read Next

தூங்காமல் இருப்பது இதய ஆரோக்கியத்தைப் பாதிக்குமா? அதை எப்படி தவிர்ப்பது?

Disclaimer