How does lack of sleep affect heart rate: இன்றைய காலகட்டத்தில் பலரும் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கும் நிலை ஏற்படலாம். அதிலும் குறிப்பாக, நீண்ட நேர உட்கார்ந்த வாழ்க்கை முறை பல்வேறு நாள்பட்ட நோய்களைச் சந்திக்கும் சூழல் உண்டாகலாம். அதிலும் குறிப்பாக, பகல், இரவு என பாராமல் நாள் முழுவதும் வேலை செய்கின்றனர். இது தவிர, இரவு நேரத்தில் தூங்காமல் அதிக நேரம் லேப்டாப் பயன்படுத்துவது, செல்போன் பயன்படுத்துவதிலேயே அதிக நோக்கம் கொண்டுள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒருவர் 8 முதல் 9 மணி நேரம் இரவு தூக்கத்தை எடுத்துக் கொண்டாலும், சீரற்ற நேரங்களில் கொடிய நிலைமைகளின் அபாயமானது ஐந்தில் ஒரு பங்கிற்கு மேல் அதிகரிக்கிறது. கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு ஒன்றில் 70,000-க்கும் மேற்பட்ட நபர்களின் தூக்கத்தணிக்கையை நடத்தியதில் இருதய நிகழ்வு ஆபத்தை மாற்றியமைப்பதில் போதுமான தூக்க நேரத்தை விட தூக்கத்தை ஒழுங்கமைப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று முடிவுகளில் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஏற்படுமா.?
மேலும், இந்த ஆய்வின் முடிவில் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயங்கள் ஒழுங்கற்ற தூக்க முறைகளுடன் வலுவாக தொடர்புடையவை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும், உறக்கம் இதயத்திற்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும், சீர்குலைந்த தூக்கம் CRP என்ற புரதத்தின் உயர் மட்டத்துடன் தொடர்புடையதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. இது வீக்கத்தின் அறிகுறியாக அமைகிறது. இது இதய பாதிப்புடன் இணைக்கப்பட்டதாகும்.
ஒழுங்கற்ற தூக்கத்தால் இதய பாதிப்பு
நமது வாழ்க்கை முறைத் தேர்வுகளில் தூக்கமின்மை இதய ஆரோக்கியத்தில் மறைமுக தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அதன் படி, ஒவ்வொரு நாள் இரவும் 90 நிமிடங்கள் தாமதமாக தூங்குவது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
UK Biobank ஆல் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், 70,000 க்கும் மேற்பட்ட நபர்களின் தரவு ஆய்வு ஒன்று செய்யப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்ற 40-79 வயது கொண்டவர்களுக்கு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற குறிப்பிடத்தக்க இதய பிரச்சனைகளின் வரலாறு இல்லை. மேலும் டிராக்கரை அணிந்து, அவர்களின் தூக்க முறைகள் ஏழு நாள்களுக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் வல்லுநர்கள் ஒவ்வொரு நபருக்கும் ஒரு தூக்க ஒழுங்குமுறை குறியீட்டு மதிப்பெண்ணைக் கணக்கிட்டனர். இதில் 0 என்பது மிகவும் ஒழுங்கற்ற தூக்கத்தைக் குறிக்கிறது. அதன் படி, சரியான வழக்கமான தூக்க-விழிப்பு முறைக்கு 0 முதல் 100 வரை மதிப்பெண்கள் குறிப்பிடப்படுகிறது.
இதயம் மற்றும் தூக்கத்திற்கும் உள்ள தொடர்பு
ஒழுங்கற்ற தூக்கத்தால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் 26% அதிகமாகலாம். அதன் பிறகு, 8 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டதில், அவர்களின் உடல்நல விளைவுகள் கண்காணிக்கப்பட்டது. இதில் அவர்கள் பக்கவாதம் அல்லது இதய செயலிழப்பு போன்ற நிலைகளில் கவனம் செலுத்தினர். மேலும் அவர்களின் இதய பாதிப்பை தூக்க முறைகளுடன் தொடர்புபடுத்தி ஆய்வு செய்தனர். மேலும், உடற்பயிற்சி அளவுகள் மற்றும் காபி போன்ற மாறிகளை சரி செய்த பிறகும், ஒழுங்கற்ற தூக்கம் உள்ளவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து 26% அதிகரித்ததாகக் கண்டுபிடிப்புகளில் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: வார இறுதியில் இப்படி தூங்கினால் இதய நோய் ஆபத்து குறையுமாம்!
தூக்க ஆரோக்கியத்திற்கான வழிகள்
ஒழுங்கற்ற தூக்கத்தினால் ஏற்படும் இதய பாதிப்பைத் தவிர்க்க, தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகளைக் கையாள வேண்டும்.
தினமும் உடற்பயிற்சி செய்வது
பொதுவாக வழக்கமான உடல் செயல்பாடுகள் நன்கு தூங்குவதற்கு உதவுகிறது. எளிய வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்வது தூக்கத்தைத் தவிர மற்ற சில ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது. உடற்பயிற்சி செய்யும் போது, தசைகள் சர்க்காடியன் தாளத்துடன் இணைந்து, அதிக மெலடோனினை உற்பத்தி செய்கிறது. இது தூக்க ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியதாகும்.
தளர்வு பயிற்சி
நீண்ட நேரம் வேலையில் இருக்கும் பட்சத்தில் ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குவது அவசியமாகும். இந்நிலையில் உறங்குவதற்கு முன் பதட்டத்தை போக்க வேண்டும். ஏனெனில் அதிகளவிலான மன அழுத்தம், தூக்க ஆரோக்கியத்தை சீர்குலைக்கலாம்.
சீரான உணவுப்பழக்கம்
சர்க்காடியன் ரிதம் உணவுப்பழக்கத்திற்கு நன்றாக பதிலளிக்கிறது. அதற்கு தூக்கத்தை தாமதப்படுத்தாமல் இருக்க, இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். ஏனெனில், தூங்கும் நேரத்தில் உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன் தூக்கத்தைக் கெடுக்கலாம். ஆனால், முன்னதாகவே உட்கொள்வது உணவை செரிமானம் அடைய உடலுக்குப் போதுமான நேரத்தைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Heart Disease: தினமும் இரவு லேட்டாக தூங்குபவரா நீங்க? கவனம் இதய நோய் வருவதற்கான ஆபத்து அதிகம்!
Image Source: Freepik