What are the side effects of lack of sleep: இன்றைய பிஸியான வாழ்க்கையில், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், சரியான தூக்கத்தையும் நாம் மறந்து விடுகிறோம். ஆனால், மக்கள் பொதுவாக இது ஒரு சிறிய பிரச்சனை என்று கருதி புறக்கணிக்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் இது ஒரு பெரிய பிரச்சனையாக மாறும் என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
தி ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் அகாடமி ஆஃப் நியூராலஜியில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 30 முதல் 40 வயதில் தூக்கமின்மை எதிர்காலத்தில் மன ஆரோக்கியத்தை பாதிப்பதாக கண்டறிந்துள்ளது. இது குறித்த தகவலை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Lung Disease: இந்த அறிகுறிகள் தென்பட்டால் லேசுல விடாதீங்க? உயிருக்கே ஆபத்தாகலாம்!
ஆய்வு கூறுவது என்ன?

ஆய்வு ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, உங்கள் இளமை அல்லது நடுத்தர வயதில் உங்களுக்கு போதுமான தூக்கம் வரவில்லை என்றால், எதிர்காலத்தில் உங்கள் நினைவாற்றல் பாதிக்கப்படலாம். இந்த பழக்கத்தை நீண்ட காலம் கடைப்பிடிப்பது வயதாகும்போது உங்கள் நினைவாற்றலை பலவீனப்படுத்தும் மற்றும் பிற மனநலம் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும். இந்நிலையில், மூளையின் சிந்திக்கும் மற்றும் புரிந்துகொள்ளும் திறன் படிப்படியாக பாதிக்கப்படலாம். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தூக்கமின்மை உடலை வேறு பல வழிகளில் பாதிக்கும்.
தூக்கம் குறித்த இந்த ஆய்வில் மொத்தம் 526 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் 11 ஆண்டுகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டனர். இவர்களில் 239 பேர் அல்லது 46 சதவீதம் பேரின் தூக்க நேரமும் தரமும் போதுமான அளவு இருந்துள்ளது. அதே நேரத்தில், 175 பேர் மிகக் குறைந்த தூக்கம் கொண்டவர்கள். போதிய அளவு தூங்காதவர்களை விட, போதுமான அளவு தூங்குபவர்களுக்கு நினைவாற்றல் பாதிக்கப்படும் அபாயம் குறைவாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம் : Stress Ulcer: உங்களுக்கு ஸ்ட்ரெஸ் அல்சர் பற்றி தெரியுமா? அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை இங்கே!
குறைவாக தூங்குவதால் ஏற்படும் தீமைகள்
- இரவில் போதுமான அளவு தூங்காமல் இருப்பது உடலை பல வழிகளில் பாதிக்கும்.
- தூக்கமின்மை இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது, இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
- தூக்கமின்மை மூளையை பாதிக்கிறது, இது மனநல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- இதனால் நீரிழிவு நோய் வருவதோடு, விரைவில் நோய்வாய்ப்படும் அபாயமும் உள்ளது.
- தூக்கமின்மை சருமத்தையும் பாதிக்கிறது. இதனால் சுருக்கங்கள், முகப்பரு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
Pic Courtesy: Freepik