எச்சரிக்கை.. தூக்கம் இல்லனா அழகே போய்டும்.!

  • SHARE
  • FOLLOW
எச்சரிக்கை.. தூக்கம் இல்லனா அழகே போய்டும்.!

தூக்கமின்மை காரணமாக உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. மேலும் இது அழகை கெடுக்கிறது. ஒரு நாளில் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்? தூக்கமின்மையால் அழகு எப்படி குறைகிறது? இதற்கான விளக்கத்தை இங்கே காண்போம். 

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க தினமும் குறைந்தது 7 முதல் 8 மணிநேரம் தூங்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், இன்றைய காலத்தில் பலர் வேலை அழுத்தம், உடல்நலக் கோளாறுகள், செல்போன் பயன்பாடு போன்றவற்றால் தங்கள் பொன்னான தூக்கத்தை இழந்து வருகின்றனர். இதனால் உடலில் பல ஆரோக்கியமற்ற மாற்றங்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இது அழகையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: ஆஸ்துமா நோயாளிகள் இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும் வீட்டு வைத்தியம்

தூக்கமின்மை அழகை அழகை எவ்வாறு பாதிக்கிறது? 

பொலிவிழந்த சருமம்

போதிய தூக்கம் வரவில்லை என்றால் சருமம் வறண்டு காணப்படும் என்கின்றனர் நிபுணர்கள். மேலும், உடலில் உள்ள pH அளவு பாதிக்கப்பட்டு, சருமம் பொலிவிழந்து காணப்படும். இதன் காரணமாக, இளையவர்கள் கூட வயதானவர்களாகத் தோன்றுகிறார்கள். நீண்ட நேரம் தூக்கமின்மை முகத்தில் பருக்களை ஏற்படுத்தும். மேலும் இதனால் சருமத்தில் சுருக்கங்கள் தோன்றும்.

டார்க் சர்க்கிள்ஸ்

இன்றைய காலகட்டத்தில் பலரையும் தொந்தரவு செய்யும் பிரச்னைகளில் ஒன்று டார்க் சர்க்கிள்ஸ். முழு இரவு தூக்கம் வரவில்லை என்றால் கண்களுக்குக் கீழே கருவளையம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நாம் தூங்கும் போது உடலில் உள்ள அனைத்து சேதமடைந்த செல்களும் மீண்டும் உருவாகின்றன. தூக்கம் இல்லாமல் போனால் கண்களுக்குக் கீழே கருவளையம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

கண்களுக்குக் கீழே வீக்கம்

தூக்கத்தை அலட்சியப்படுத்தினால், கண்களுக்குக் கீழே வீங்கிவிடும் என்கின்றனர் நிபுணர்கள். இது முகத்தின் அழகைக் கெடுக்கும். கண்கள் சிவப்பாக மாறும் என்றும் கூறப்படுகிறது. அத்தகைய அறிகுறிகள் உள்ளவர்கள் தூக்கம் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சருமத்தில் சுருக்கங்கள்

நாம் தூங்கும்போது கொலாஜன் என்ற ஹார்மோன் உடலில் வெளியாகும். இது சருமத்தின் பளபளப்பு மற்றும் ஈரப்பதத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், தூக்கமின்மை கொலாஜன் ஹார்மோன் உற்பத்தியை நிறுத்துகிறது. இதன் விளைவாக, இரத்தத்தில் கார்டிசோலின் அளவு அதிகரிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

முடி கொட்டுதல்

ஆரோக்கியமான தூக்கத்தை பராமரிக்கவில்லை என்றால், சருமம் தொடர்பான பிரச்னைகளுடன் உங்கள் கூந்தலும் உயிரற்றதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

Image Sorce: Freepik

Read Next

Copper Water: செப்பு பாட்டிலில் இருந்து தண்ணீர் குடிப்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?

Disclaimer

குறிச்சொற்கள்