World Sleep Day 2024: உலக தூக்க தினம் மார்ச் 15 அன்று உலக அளவில் கொண்டாடப்படுகிறது. தூக்கத்தின் முக்கியத்துவம், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இது அனுசரிக்கப்படுகிறது.
வேர்ல்ட் ஸ்லீப் சொசைட்டி மருத்துவ சங்கம் (WASM), உலகளவில் தூக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக 2008 இல், World Sleep Day கொண்டாட்டத்தைத் தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் மூன்றாவது வெள்ளியன்று World Sleep Day கொண்டாடப்படும். அந்த வகையில் இன்று World Sleep Day கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் தூக்கமின்மை காரணம் குறித்து தெரிஞ்சிக்கலாம் வாருங்கள்.
இதையும் படிங்க: World sleep day 2024: படுத்ததும் தூக்கம் வர.. இந்த உணவுகள சாப்பிடுங்க!
தூக்கமின்மை காரணம் (Reasons For Not Getting Enough Sleep)
ஆரோக்கியமாக இருப்பதற்கு ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தூக்கமும் முக்கியம். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் பலர் நிம்மதியான உறக்கத்தை இழக்கிறார்கள். தூக்கமின்மையால், அதிக எடை, பிபி மற்றும் சுகர் போன்ற பல வகையான உடல்நலப் பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். தூக்கமின்மை காரணம் குறித்து இங்கே காண்போம்.
ஆரோக்கியமற்ற உணவு
தினசரி அடிப்படையில் சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது தூக்கத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். மேலும் மசாலாக்கள் அதிகம் உள்ள ஜங்க் ஃபுட், பாஸ்ட் புட் போன்ற உணவுகளை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் மற்றும் தூக்கம் குறையும்.
தூங்குவதற்கு சரியான நேரமின்மை
இப்போதெல்லாம் பல பணியாளர்கள் மற்றும் பல்வேறு வேலைகளைச் செய்பவர்கள் Night Shift செய்து காலையில் தூங்குகிறார்கள். நல்ல தூக்கம் இல்லாததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள். தூங்கும் அறையில் சத்தம், வெளிச்சம் போன்றவற்றால் தூக்கமின்மை பிரச்னை வேட்டையாடுவதாகவும் கூறப்படுகிறது.
மனஅழுத்தம் மற்றும் பதட்டம்
வேலை அழுத்தம், நிதிப் பிரச்னைகள், மோதல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் பலர் வாழ்க்கையில் அதிக மனஅழுத்தத்தையும் கவலையையும் கொடுக்கிறது. இதனால் தூக்கத்தை இழக்கின்றனர். நீண்டகால மன அழுத்தம் தூக்கமின்மைக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மாலை நேர பயிற்சிகள்
சிலர் மாலையில் அதிக உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும், அவ்வாறு செய்வது இதயத் துடிப்பை அதிகரிக்கிறது. இதனால் இரவில் தரமான தூக்கம் இல்லாமல் போய்விடுகிறது என்கின்றனர் நிபுணர்கள். உடற்பயிற்சிகள் காலையில் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
Image Source: Freepik