Foods Not To Keep In Fridge: அவ்வப்போது சந்தைக்குச் சென்று புதிய காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி வந்து சாப்பிடுவது எளிதான காரியம் அல்ல. அதனால்தான் நமக்குத் தேவையானதை ஒரே நேரத்தில் அதிக அளவில் பெற்று, ஃபிரிட்ஜில் சேமித்து, தேவைப்படும்போது பயன்படுத்துகிறோம்.
இரவில் மீதம் இருக்கும் சாதம், கறி முதல் வார இறுதியில் பயன்படுத்தும் காய்கறிகள் வரை அனைத்தையும் ஃபிரிட்ஜில் வைக்கிறோம். சிலர் சமையலறையில் வைக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் ஃபிரிட்ஜில் நிரப்புகிறார்கள். அவை நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்காக அவ்வாறு செய்கிறார்கள். ஆனால் அது தவறு. எந்த பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது என்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.

வாழைப்பழம்
பலர் வாழைப்பழங்களை சந்தையில் இருந்து வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைப்பார்கள். ஆனால் இப்படிச் செய்வது நல்லதல்ல. வாழைப்பழங்களை சாதாரண அறை வெப்பநிலையில் வைத்திருப்பது சிறந்தது. குளிர்சாதனப்பெட்டியில் வைப்பதால் பழங்கள் கெட்டிப்படுவதோடு மட்டுமல்லாமல் அதன் சுவையும் குறைந்துவிடும்.
தக்காளி
தக்காளியை அனைவரும் ஃப்ரிட்ஜில் வைத்திருப்பார்கள். இப்படி செய்வதால் வாரம் முழுவதும் புத்துணர்ச்சியுடனும், பளபளப்பாகவும் இருக்கும். இருந்தாலும், ஃப்ரிட்ஜில் ஓரிரு நாட்கள் சேமித்து வைத்தாலும் பரவாயில்லை. ஆனால் நீண்ட நாட்களுக்கு அல்ல. இதனால் தக்காளி இயற்கையான சுவையை இழக்கிறது.
வெங்காயம்
வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது. அவை சாதாரண அறை வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும்.
இஞ்சி-பூண்டு
இஞ்சி-பூண்டு விழுதுகள் ஃப்ரிட்ஜில் வைத்தால் மற்ற பொருட்களின் சுவை மற்றும் நறுமணத்தை பாதிக்கும். தவிர முளைகள் விரைவில் வரும். அதனால்தான் அவை வெளியில் வைத்திருந்தால் அதிக நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
உருளைக்கிழங்கு
இதனை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது. சேர்த்தால் இவற்றில் உள்ள மாவுச்சத்து சர்க்கரையாக மாறும். சர்க்கரைகள் சூடுபடுத்தப்படும் போது ஆபத்தான இரசாயனங்களாக மாறும்.
எண்ணெய்
ஆலிவ், தேங்காய் மற்றும் பிற சமையல் எண்ணெய்கள் குளிர்சாதன பெட்டியில் விரைவாக திடப்படுத்துகின்றன. அதனால் அவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது.
தர்பூசணிகள்
தர்பூசணிகளை வாங்கும் போது, அவற்றை நேரடியாக ஃப்ரிட்ஜில் சேமிக்க வேண்டாம். இதனை துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்தால் ஆபத்து இல்லை என கூறப்படுகிறது.
அவகேடோ
வெண்ணெய் பழத்தை ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது என்கின்றனர் நிபுணர்கள். அவற்றை வழக்கமான அலமாரிகளில் வைத்தால் போதும்.
Image Source: Freepik