Foods to avoid when you are bloated: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் வயிறு உப்புசம் என்பது பொதுவாக இன்று பலரும் அனுபவிக்கும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. வயிறு உப்புசத்தின் போது சில உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் வயிறு உப்புசத்தைக் குறைக்கலாம். அதே சமயம், வயிறு உப்புசம் ஏற்படும் சமயத்தில் சில ஆரோக்கியமற்ற உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியமாகும். அதன் படி, வயிறு வீக்கத்தின் போது நாம் தவிர்க்க வேண்டிய சில உணவுகளைக் காணலாம்.
வயிறு வீக்கத்திற்கான காரணங்கள்
வயிறு வீக்கம் இருப்பதைக் கண்டறிவது சவாலானதாகும். எனினும், வயிறு வீங்குவதற்கு சில காரணங்கள் உள்ளன. அதன் படி, உடலில் குடலில் அதிகப்படியான வாயு இருப்பது, குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் ஒழுங்கற்ற அளவு, உணவுக்கு உணர்திறன் கொண்டிருப்பது, செரிமான மண்டலத்திற்கு உணர்திறன் கொண்டிருத்தல், கவலை, மனச்சோர்வு போன்றவை வயிறு வீக்கத்திற்கான காரணங்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Bloated Stomach During Period: மாதவிடாய் காலத்தில் வயிறு உப்புசமா? இதெல்லாம் டிரை பண்ணுங்க
முக்கிய கட்டுரைகள்
வயிறு உப்புசத்தின் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்
பருப்பு வகைகள்
சோயாபீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுகள் வாயுவை உண்டாக்கும் உணவுகளாகக் கூறப்படுகிறது. இது போதுமான அளவு புரதத்தைக் கொண்டிருப்பினும், இது உடலால் உறிஞ்ச முடியாத சர்க்கரைகள் மற்றும் நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இந்த உறிஞ்சுதல் குறைபாடு காரணமாக வாயு மற்றும் வீக்கம் ஏற்படலாம். எனினும், அரிசி மற்றும் குயினோவா போன்ற எளிதில் ஜீரணிக்கக்கூடிய முழு தானியங்களுடன் பருப்பு வகைகளைச் சேர்த்து நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலானது நார்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் எளிதில் பழக அனுமதிக்கிறது. மேலும், அறிகுறிகளைக் குறைக்கிறது.
சிலுவை காய்கறிகள்
ப்ரோக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை சிலுவை காய்கறிகள் வகையைச் சேர்ந்ததாகும். இதில் வைட்டமின்கள் சி, ஈ, மற்றும் கே, கால்சியம், ஃபோலேட், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுகிறது. மேலும், இந்த காய்கறிகளில் போன்ற ஊட்டச்சத்துக்கள் என்ற சர்க்கரையும் நிறைந்துள்ளது. இந்த ரஃபினோஸ் ஆனது உடலில் வாயுவை உற்பத்தி செய்து வயிற்றை வீங்க வைக்கிறது.
ஆப்பிள்கள்
இது நார்ச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். மேலும், இதில் பிரக்டோஸ் மற்றும் சர்பிடால் போன்றவையும் உள்ளது. இந்த சர்க்கரைகள் பலரால் சகித்துக்கொள்ள முடியாத பழங்களில் காணப்படக் கூடியதாகும். நிபுணர்களின் கூற்றுப் படி, இந்த சர்க்கரைகள் வாயு மற்றும் தவிர்க்க முடியாத வீக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே வயிறு உப்புசம் பிரச்சனை கொண்டவர்கள் ஆப்பிளைத் தவிர்ப்பது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Bloating Home Remedies: வயிறு உப்புசம் பிரச்னைக்கு சூப்பர் தீர்வு
தர்பூசணி
சில பழங்களில் அதிக பிரக்டோஸ் உள்ளடக்கம் நிறைந்துள்ளது. இது அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறது. பிரக்டோஸ் என்பது இயற்கையாக நிகழும், உடல் எளிதில் ஜீரணிக்க முடியாத சர்க்கரையாகும். இதுவே சில நேரங்களில் அதிகப்படியான வாயுவை ஏற்படுத்துகிறது. அதன் படி, தர்பூசணியில் அதிகளவு பிரக்டோஸ் நிறைந்துள்ளது. சிலருக்கு பரம்பரை பிரக்டோஸ் சகிப்புத்தன்மை நிலைகள் இருக்கலாம். இதன் காரணமாக பிரக்டோஸை எடுத்துக் கொண்ட பிறகு வயிறு வீக்கத்தை மேலும் அதிகரிக்கலாம்.
பசையம் கொண்ட உணவுகள்
பசையம் ஆனது பார்லி, கம்பு மற்றும் கோதுமை போன்றவற்றில் காணப்படக்கூடிய ஒரு வகை புரதமாகும். இது பெரும்பாலும் கேக்குகள், ரொட்டிகள் அல்லது பாஸ்தா போன்ற உணவுகளிலேயே சேர்க்கப்படுகிறது. செலியாக் நோய் உள்ளவர்கள் மற்றும் பசையம் உணர்திறன் உள்ளவர்கள் போன்றோர் வீக்கம் உட்பட செரிமான பிரச்சனைகளை அனுபவிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Stomach Bloating: மேல் வயிறு உப்பிக் கொண்டு வலிக்கிதா.? இத மட்டும் பண்ணுங்க.. சரி ஆகிடும்.!
Image Source: Freepik