How to Get Rid Of Period Bloating: பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாயின் காரணமாக பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். ஆனால், பல சமயங்களில் மாதவிடாய்க்கு முன்னதாகவோ அல்லது காலப்போக்கில் வயிற்று வலி, உடல்வலி, சோம்பல், வீக்கம், அமைதியின்மை மற்றும் சோர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். பெரும்பாலும் பெண்கள் இந்தப் பிரச்சனைகளைக் குறைக்க பல்வேறு வகையான வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வர். ஆனால், வலி நிவாரணிகள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதுடன் நீண்ட நாள் பயன்பாடு பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
இந்த சூழ்நிலையில், மருந்துகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம், மாதவிடாய் காலத்தில் பெண்கள் அடிக்கடி வயிற்று உப்புசம் பிரச்சனை ஏற்படலாம். இந்த பிரச்சனை காரணமாக, பெண்களால் சரியாக சாப்பிடவோ, தூங்கவோ முடியாது. வீக்கம் காரணமாக, வயிற்றில் வாயு உருவாவதுடன், வயிறு வீக்கமடையலாம். எனினும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க சில வீட்டு வைத்திய முறைகளைக் கையாளலாம். இதில் மாதவிடாய் கால வயிறு உப்புசத்தைக் குறைக்கும் முறைகள் குறித்து சாரதா கிளினிக்கின் மருத்துவர் டாக்டர் கே.பி.சர்தானா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Period Cravings: மாதவிடாய் காலத்தில் உணவின் மீது அதிக ஆசை வருவது ஏன் தெரியுமா?
மாதவிடாய் கால வயிறு உப்புசத்தைக் குறைக்க உதவும் வழிகள்
ஏரோபிக் உடற்பயிற்சி
மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க ஏரோபிக் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த வகை உடற்பயிற்சிகள் PMS அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. மேலும், ஏரோபிக் உடற்பயிற்சி செய்வது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இவை வயிறு உப்புசம் தொடர்பான பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது.
வீட்டில் சமைத்த உணவு உண்ணுதல்
மாதவிடாய் காலம் மட்டுமல்லாமல், மற்ற காலங்களிலும் வெளியில் சாப்பிடுவதையே அதிகம் விரும்புவர். ஆனால் வெளி உணவுகள் பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கலாம். குறிப்பாக, மாதவிடாய் காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகள் வயிற்று உப்புசத்தை நேரடியாகப் பாதிக்கலாம். மாதவிடாயின் போது பெண்கள் பெரும்பாலும் வெளியிலிருந்து உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவதையே அதிகம் விரும்புவர். ஆனால், இதனால் வயிற்றில் வீக்கம் ஏற்படுவதுடன் உடலிலும் வீக்கம் அதிகரிக்கலாம். இந்த சூழ்நிலையில், மாதவிடாய் காலத்தில் வெளி உணவுகளை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
அதிக நார்ச்சத்துக்களைத் தவிர்ப்பது
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் நார்ச்சத்துக்கள் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது. ஆனால், மாதவிடாய் காலத்தில் பெண்கள் குறைந்த அளவிலான நார்ச்சத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், அதிகளவிலான நார்ச்சத்து உட்கொள்ளல், உடலில் வீக்கத்துடன், வயிறு வீக்கம்பிரச்சனையையும் அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: PCOS Cause Acne: உங்களுக்கு அடிக்கடி முகப்பரு வருகிறதா?… உஷார் இந்த நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்!
புரத உணவுகளை உண்ணுதல்
பொதுவாக புரத உணவுகளை உண்ணுவது வீக்கத்தைத் தவிர்க்க உதவுகிறது. எனவே மாதவிடாய் காலங்களில் வீக்கம் ஏற்படாமல் இருக்க புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். மேலும், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவை உட்கொள்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், மாதவிடாயின் போத் பெண்கள் கோழி, மீன் மற்றும் டோஃபுவுடன் வாழைப்பழம், முலாம்பழம் மற்றும் தக்காளி போன்றவற்றைத் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
காஃபின், ஆல்கஹால் உட்கொள்ளலைக் குறைப்பது
மாதவிடாயின் போது பெண்கள் காஃபின் மற்றும் ஆல்கஹால் நுகர்வைக் குறைக்க வேண்டும். ஏனெனில், இந்த காலகட்டத்தில் இது போன்ற உணவுகளை உட்கொள்வதால் செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், குடலில் எரிச்சல் உண்டாகலாம். இந்த சூழ்நிலையில் காஃபின் மற்றும் ஆல்கஹால் போன்றவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்துவதுடன், வயிறு உப்புசம் பிரச்சனையை அதிகரிக்கலாம்.
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதற்கு, இந்த வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தலாம். எனினும், ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை இருப்பின், இந்த முறைகளைப் பின்பற்றுவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Swimming During Period: மாதவிடாய் காலத்தில் நீச்சல் அடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?
Image Source: Freepik