$
How To Stop Menstrual Bleeding Immediately: மாதவிடாயின் போது பெண்கள் ஒவ்வொருவரும் பல்வேறு விதமான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அவர்கள் மூட் ஸ்விங் அதிகமாக இருக்கும். சில பெண்களுக்கு அதிகளவிலான உடல்வலி, வயிற்று வலி, முதுகு வலி, இடுப்பு வலி என பல உடல் உபாதைகள் காணப்படும். இன்னும் சிலருக்கு மாதவிடாய் சில உள் பிரச்சனைகளின் காரணமாக, அதிக ஓட்டம் காணப்படலாம்.
மாதவிடாயின் போது ஏற்படும் இந்த அதிகப்படியான இரத்த ஓட்டத்தைத் தாங்குவது என்பது கடினமான ஒன்று. எனினும், வாழ்க்கைமுறையில் சில ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதிகப்படியான மாதவிடாய் இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த முடியும். இதில் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள் குறித்து டாக்டர் ஸ்மிதா போர் பாட்டீல் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Postpone Periods Naturally: இயற்கையான முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்?
மாதவிடாய் காலத்தில் அதிக இரத்த ஓட்டம் ஏற்படுவதற்கான காரணங்கள்
டாக்டர் ஸ்மிதா அவர்களின் கூற்றுப்படி, பொதுவாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக இரத்த ஓட்டத்திற்கான முக்கிய காரணம் ஈஸ்ட்ரோஜனின் ஆதிக்கமே ஆகும். அதாவது அதிக ஈஸ்ட்ரோஜன் அளவைக் கொண்டிருப்பது, அதிகப்படியான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கலாம். இந்நிகழ்வு மெனோராஜியா என்றும் அழைக்கப்படுகிறது.
உண்மையில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆனது கருப்பையின் புறணி (எண்டோமெட்ரியம்) வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவக்கூடியதாகும். உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கும் போது, எண்டோமெட்ரியம் தடிமனாக மாறி கடுமையான மாதவிடாய்களை ஏற்படுத்தலாம். இந்த பிரச்சனையானது PCOS, இனப்பெருக்க பாதை தொற்று அல்லது ஹைப்போ தைராய்டிசத்திலும் ஏற்படலாம்.

அதிக மாதவிடாய் இரத்தப்போக்குக் குறைப்பது எப்படி?
நம் வாழ்க்கைமுறையில் கொண்டு வரக்கூடிய சில ஆரோக்கியமான மாற்றங்களின் மூலம் அதிக மாதவிடாய் இரத்தப்போக்கைக் குறைக்க முடியும்.
ஈஸ்ட்ரோஜெனிக் உணவுகளைத் தவிர்ப்பது
மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தி, இரத்த ஓட்டத்தை சமநிலைப்படுத்துவதற்கு உணவுமுறை மிகவும் முக்கியமானதாகும். எனவே இந்த காலகட்டத்தில் ஈஸ்ட்ரோஜெனிக் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதன் படி, அதிக ஓட்டம் இருந்தால், பால் பொருட்கள், சோயா, சர்க்கரை மற்றும் சந்தை சோடா பானங்கள் போன்ற ஈஸ்ட்ரோஜெனிக் உணவுகளை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில், இவை மேலும் ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கத்தை அதிகரிப்பதுடன், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதற்கு மாற்றாக, பழங்கள், கொட்டைகள், விதைகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!
ஒமேகா-3 நிறைந்த உணவுகள்
அதிக ஓட்டத்தை கட்டுப்படுத்த ஒமேகா -3 ஒரு சிறந்த மிகவும் அத்தியாவசிய கனிமமாக கருதப்படுகிறது. எனவே, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளான சால்மன், கானாங்கெளுத்தி மீன், ஆளிவிதை அல்லது வால்நட்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும், இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கருப்பையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
அதிக காய்கறி உட்கொள்ளல்
சில காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் அதிகளவிலான மாதவிடாய் இரத்தப்போக்கைக் குறைக்க முடியும். இந்த சூழ்நிலையில், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற சிலுவை காய்கறிகளை சாப்பிட வேண்டும். இந்த காய்கறிகளில் சல்போராபேன் மற்றும் இண்டோல்-3 கார்பினோல் போன்ற கலவைகள் நிறைந்துள்ளது. இந்த காய்கறிகளை உட்கொள்வது ஈஸ்ட்ரோஜனைக் கட்டுப்படுத்த கல்லீரலுக்கு உதவுகிறது. இதன் மூலம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகளவிலான இரத்த ஓட்டத்தைக் குறைக்க முடியும்.
தினசரி உடற்பயிற்சி
தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம், உடல் எடை மற்றும் ஹார்மோன்களைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதே சமயம், உடல் எடை அதிகமாக இருக்கும் போது, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆனது அதிகளவு இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைக் கட்டுக்குள் வைக்க சிறந்த தேர்வாக தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பல்வேறு இயற்கையான வழிகளின் உதவியுடன், மாதவிடாயின் போது ஏற்படும் அதிகளவிலான இரத்தப்போக்கைக் குறைக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Periods Pain Relief Tips: இயற்கையான முறையில் மாதவிடாய் வலியை எவ்வாறு குறைப்பது?
Image Source: Freepik