மாதந்தோறும் பெண்களுக்கு இயற்கையான முறையில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் நிகழ்வதே மாதவிடாய் ஆகும். இந்த மாதவிடாய் காலங்களில் பெண்கள் பல்வேறு உடல் உபாதைகளை அனுபவித்து வருகின்றனர். மேலும், இந்த சமயத்தில் பெண்கள் வெளியில் செல்வதை விரும்ப மாட்டார்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களுக்கு, மாதவிடாயைத் தள்ளிப் போட நினைப்பர். மாதவிடாயைத் தள்ளிப் போவதற்கு கடைகளில் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், இவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக அமையும். எனவே, இம்மாதிரியான சூழலில் இயற்கையான முறையில் மாதவிடாயைத் தள்ளிப்போக சில வழிகள் உள்ளன.
இயற்கை முறையில் மாதவிடாய் தள்ளிப் போக செய்ய வேண்டியவை
சில வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி இயற்கை முறையில் மாதவிடாயைத் தள்ளிப் போக வைக்கலாம். அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
எலுமிச்சை பழச்சாறு
எலுமிச்சை பழச்சாறு மாதவிடாயைத் தள்ளிப் போக வைக்கக்கூடிய பழமையான முறைகளில் ஒன்றாகும். இதற்கு எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சார்ந்த பண்புகளே ஆகும். இதில் உள்ள சிட்ரஸ் அமிலங்கள் மாதவிடாயைத் தாமதப்படுத்த உதவுகிறது. மேலும், இவற்றை மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் சிக்கல்களில் இருந்து விடுபடவும் உதவும். இருப்பினும் அதிகப்படியான சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வது வயிற்றில் எரிச்சல் உண்டாக்கும். மாதவிடாய் தள்ளிப்போக எலுமிச்சைச் சாற்றை மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே தினமும் குடித்து வரலாம்.

இந்த பதிவும் உதவலாம்: கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தை சமாளிக்க இதை செய்யுங்கள்!
உடற்பயிற்சி
தினந்தோறும் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உடலில் என்டோர்பின் என்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஹார்மோன் உற்பத்தியாகிறது. அதிலும், குறிப்பாக கார்டியோ உடற்பயிற்சிகள் சரியானதாக இருக்கும். இவ்வாறு உடலில் என்டோர்பின் சுரக்கப்படும் போது, மனதில் மகிழ்ச்சி உண்டாகும். மேலும், இது மாதவிடாய் ஏற்படுவதைத் தள்ளிப் போக வைக்கும். இருப்பினும் கடுமையான உடற்பயிற்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகரில் அதிக அளவிலான அமிலத்தன்மை உள்ளது. இதுவே, மாதவிடாய் காலத்தைத் தாமதப்படுத்த உதவுகிறது. மேலும், இது உடலில் உள்ள நச்சுப் பொருள்களை நீக்கி உடல் எடையைக் குறைப்பதற்கான பானமாக பயன்படுகிறது. மாதவிடாய் நாள் வரப்போவதற்கு 10-12 நாள்கள் முன்னதாக, ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக் கொள்ளும் போது மாதவிடாய் ஏற்படுவதை முன்னதாக தடுக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் காலங்களில் உங்கள் சருமத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ்
ஜெலட்டின்
மாதவிடாய் தள்ளிப் போக நினைப்பவர்களுக்கு ஜெலட்டினும் ஒரு தீர்வாக அமைகிறது. வெதுவெதுப்பான நீரில் இரண்டு ஸ்பூன் ஜெலட்டினைக் கலந்து குடிக்கும் போது, மாதவிடாய் சுழற்சியின் வேகத்தைக் கட்டுப்படுத்தி தள்ளிப் போடுகிறது. ஜெலட்டின் ஆனது ஒரு நாள் முதல் ஒரு வாரம் வரை மாதவிடாய் ஏற்படாமல் தள்ளி வைக்க உதவுகிறது.
வெந்தயம்
பொதுவாக வெந்தயம் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளைத் தரக்கூடியதாக அமைகிறது. மாதவிடாய் தள்ளிப் போக வைப்பதில் வெந்தயம் முக்கியம் பங்கு வகிக்கிறது. இது வயிற்றுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியவை ஆகும். மாதவிடாய் வரப்போகும் ஐந்து தினங்களுக்கு முன்பு இருந்து வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் தள்ளிப் போகும். மேலும், வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளிக்க உடல் சூட்டைத் தணிந்து மாதவிடாய் தள்ளிப் போகும்.
இந்த பதிவும் உதவலாம்: Tips To Improve Fertility: ஆண்மையை மேம்படுத்தும் 10 குறிப்புகள் இங்கே