Home Remedies To Treat Delay Periods: பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாயில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. இதில், பொதுவான பிரச்சனையாக மாதவிடாய் தாமதம் நிகழ்தல் நடைபெறுகிறது. இதற்கு தைராய்டு கோளாறுகள், கருச்சிதைவு, மாதவிடாய் நிறுத்தம், உணவுக் கோளாறுகள், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் இன்னும் பிற உடல் நலப் பிரச்சனைகள் மாதவிடாய் தாமதம் நிகழ காரணமாக அமைகின்றன.
இவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தருவதாகும், அமைதியின்மை உணர்விற்கும் வழிவகுக்கிறது. மேலும், இவை வயிறு அல்லது கீழ் முதுகில் பிடிப்பு ஏற்படுதல், மனநிலை மாற்றங்கள், எரிச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் இந்த தாமதமான மாதவிடாய்க்கு வீட்டிலேயே இயற்கையான சில வைத்தியங்களைப் பின்பற்றலாம். இன்னும் சிலருக்கு முறையான மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இதில், தாமதமான மாதவிடாய்க்கு சிகிச்சையளிக்க உதவும் சில பயனுள்ள வீட்டு வைத்திய முறைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Back Pain: தீராத முதுகு வலியால் அவதியா? உடனடியாக நிவாரணம் பெற இந்த ஒரு சமையல் பொருள் போதும்!
தாமதமான மாதவிடாய்க்கு சிகிச்சையளிக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்
மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள், சில காரணங்களால் தாமதமாகலாம். இந்த தாமதமான மாதவிடாய் சிகிச்சைக்கான சில வீட்டு வைத்தியங்களைக் காண்போம்.
இஞ்சி டீ
இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இவை உடலில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கவும், மாதவிடாய் காலத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகிறது. இந்த டீ தயாரிக்க, தேவையான அளவு இஞ்சி எடுத்து, அதை நசுக்கி சில நிமிடங்கள் நீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன், சர்க்கரை, தேன் அல்லது வேறு இனிப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த டீயை ஒரு நாளைக்கு இரு முறை குடித்து வர, மாதவிடாயைத் தூண்டலாம்.
மஞ்சள்
மஞ்சள் ஒழுங்கற்ற அல்லது தாமதமான மாதவிடாய்க்கு சிறந்த சிகிச்சையளிப்பதற்காக பயன்படுகிறது. இது ஹார்மோன்களை சமநிலைப்படுத்த மற்றும் மாதவிடாய் சுழற்சியை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது வலி மற்றும் பிடிப்புகள் உள்ளிட்ட மாதவிடாய் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கக் கூடிய அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகளைக் கொண்டுள்ளது.
கொத்தமல்லி மற்றும் வோக்கோசு
காலதாமதமான மாதவிடாயினால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, உணவில் கொத்தமல்லி மற்றும் வோக்கோசு போன்ற மூலிகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்பட்ட கஷாயத்தை எடுத்துக் கொள்ளலாம். இவை மாதவிடாயை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும், ஒழுங்கற்ற மாதவிடாயைக் குணப்படுத்த வோக்கோசு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Knee Pain: ஊறவைத்த திராட்சையை மட்டும் இப்படி சாப்பிட்டு பாருங்கள்!
பழுக்காத பப்பாளி
பொதுவாக மாதவிடாய் தள்ளிப்போகும் நேரத்தில் பப்பாளி எடுத்துக்கொள்வது மாதவிடாயைத் தூண்டும் எனக் கூறுவர். பழுக்காத பப்பாளியை எடுத்துக் கொள்வது மாதவிடாய் தாமதத்திற்கு இயற்கையான மருந்தாக செயல்படுகிறது. எனினும், கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவது பரிந்துரைக்கப்படவில்லை.
மன அழுத்தத்தைக் குறைப்பது
ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு மன அழுத்தம் ஏற்படும் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. மேலும், மன அழுத்தம் உண்டாவதால் தாமதமான மாதவிடாய் குறித்த பதட்டம் உண்டாகலாம். மாதவிடாய் தாமதம் மிகவும் பொதுவானதாகும். எனவே, இந்த காலகட்டத்தில் மன அழுத்தத்தைக் குறைப்பது நல்லது
ஒழுங்கற்ற மற்றும் தவறான மாதவிடாய்க்கு, இது போன்ற பல்வேறு வீட்டு வைத்தியங்கள் சிகிச்சையளிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Acid Reflux Drink: நெஞ்செரிச்சலுக்கு காலையில் இந்த ஒரு ஜூஸ் குடிங்க போதும்
Image Source: Freepik