Sat Sep 12, 2026 | 12:22 AM IST

Postpone Periods Tips: மாதவிடாய் தள்ளிப் போக இயற்கை வீட்டு வைத்தியங்களை ஃபாலோ பண்ணுங்க

How To Postpone Periods Naturally: பெண்கள் பலரும் மாதந்தோறும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக மாதவிடாய் பிரச்சனை அமைகிறது. சில காரணங்களால், பெண்கள் மாதவிடாய் தாமதத்தை விரும்புகின்றனர். இதற்கு பலரும் மாத்திரைகளை எடுத்துக் கொள்வர். ஆனால் இது பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக அமைகிறது.

இந்த நேரத்தில் மாதவிடாய் தாமதத்திற்கு மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இயற்கையான முறையில் மாதவிடாய் தாமதத்தை ஏற்படுத்த சில வழிகள் உள்ளன. இதில் மாதவிடாய் சுழற்சியை தாமதப்படுத்த உதவும் சில இயற்கை வைத்தியங்கள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Turmeric Benefits: பெண்கள் மஞ்சளை சாப்பிட்டால் இந்த முக்கிய பிரச்சனைகள் காணாமல் போகும்!

இயற்கையான முறையில் மாதவிடாஐ தள்ளிப்போகச் செய்வது எப்படி?

எலுமிச்சைப்பழம்

மாதவிடாயைத் தாமதப்படுத்தும் பழமையான மற்றும் சிறந்த முறையாக எலுமிச்சைப்பழம் அமைகிறது. மாதவிடாய் தள்ளிப்போக மிதமான அளவில் எலுமிச்சைச் சாற்றை எடுத்துக் கொள்ளலாம். எனினும், இதற்கு சான்றுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஒரு கிளாஸ் நீரில் இரண்டு ஸ்பூன் அளவு எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கலாம் அல்லது தேநீரில் சர்க்கரை கலக்காமல் எலுமிச்சைச் சாறு சேர்த்து குடிக்கலாம்.

உளுத்தம்பருப்பு சூப்

உளுத்தம்பருப்பை நன்றாக பொடியாக்கி, அதில் 2 டீஸ்பூனை ஏதேனும் ஒரு சூப்பில் கலந்து குடிக்கலாம். எதிர்பார்க்கப்படும் மாதவிடாய் தேதிக்கு 10 நாள்களுக்கு முன்பு, இந்த கலவையை உட்கொள்ள வேண்டும். இந்த சூப்பை சில நாள்களுக்கு மட்டும் சிறிய அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆப்பிள் சைடர் வினிகர்

இது மாதவிடாய் காலத்தை தாமதப்படுத்த உதவும் சிறந்த இயற்கையான தீர்வாகும். இது PMS-ன் அறிகுறிகளுக்கு நிவாரணம் தருகிறது. ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வது, இரத்தம் உறைதல் மற்றும் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் இன்சுலின் அளவு குறையலாம். ஆனால் இரத்த ஓட்டம் முற்றிலும் நின்றுவிடும் என்பது அர்த்தம் அல்ல.

இந்த பதிவும் உதவலாம்: Black Pepper Benefits: பெண்கள் கருமிளகு சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்

ஜெலட்டின்

ஜெலட்டின் நீர் இயற்கையான மாதவிடாய் தாமதத்திற்கு சிறந்த அற்புதமான தீர்வாகும். எதிர்பார்க்கப்படும் மாதவிடாய் தேதிக்கு 3 முதல் 4 நாள்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறை இந்த நீரைக் குடிக்கலாம். இது மாதவிடாய் சுழற்சியை சிறிது தாமதப்படுத்தலாம். எனினும், ஜெலட்டினை அதிகப்படியான எடுத்துக் கொள்வது அஜீரணம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.

தர்பூசணி

இது பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், வயிற்றுக்கு இதமாகவும் அமையக் கூடியதாகும். மாதவிடாய் தாமதத்திற்கு எதிர்பார்க்கப்படும் நாளுக்கு 7 நாள்கள் முன்னதாக கிண்ணத்தில் புதிய மற்றும் குளிர்ந்த தர்பூசணியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இலவங்கப்பட்டை டீ

இது மாதவிடாயைத் தாமதப்படுத்த உதவும் சிறந்த தீர்வாகும். இது உடல் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இரத்தப்போக்கு, மாதவிடாய் பிடிப்புகள் அதிகமிருப்பின் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே மாதவிடாய் தாமதத்திற்கு இலங்கப்பட்டை தேநீர் சிறந்த சுவை கொண்ட ஆரோக்கியமான ஒன்றாக அமைகிறது.

இவ்வாறு இயற்கையான முறையில் மாதவிடாயை தாமதமாக்கலாம். மேலும், காரமான உணவுகளிலிருந்து விலகி இருப்பது அவசியமாகும். ஏனெனில், இது கடுமையான இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Bone Health Strengthening Tips: மாதவிடாய் நிற்கும் முன் ஏற்படும் மூட்டு வலி. எப்படி தவிர்ப்பது?

Image Source: Freepik

Read Next

அச்சச்சோ… மது அருந்துவதால் பெண்களுக்கு இவ்வளவு ஆபத்தா.?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content