Expert

Black Pepper Benefits: பெண்கள் கருமிளகு சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்

  • SHARE
  • FOLLOW
Black Pepper Benefits: பெண்கள் கருமிளகு சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்

பெண்கள் தொடர்ந்து கருப்பு மிளகை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தில்லியைச் சேர்ந்த பாக்யா ஆயுர்வேதாவின் ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உணவியல் நிபுணருமான பூஜா சிங் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கூடுதலாக, கருப்பு மிளகை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பது குறித்தும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Halim Seeds During Periods: மாதவிடாய் வலி பிரச்சனைக்கு உதவும் ஹலீம் விதைகள். எப்படி தெரியுமா?

பெண்களுக்கு கருப்பு மிளகு தரும் நன்மைகள்

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைக்கு

ஆரோக்யா ஹெல்த் சென்டரின் மருத்துவ உணவியல் நிபுணரான டாக்டர் வி.டி.திரிபாதி அவர்களின் கூற்றுப்படி, “கருப்பு மிளகில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களில் தேனுடன், கருமிளகை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மாதவிடாயைச் சீராக்க முடியும். கருமிளகில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உடல் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. தேனிலும் உடல் வீக்கத்தைக் குறைக்க உதவும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் பெற

கருப்பு மிளகில் வைட்டமின் சி, ஃபிளவனாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், பாக்டீரியா எதிர்ப்புக் கூறுகள் போன்றவை நிறைந்துள்ளன. இது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் தருகிறது. மாதவிடாய்க்கு முன் பிடிப்புகள் மற்றும் வயிற்று வலி பிரச்சனை உள்ள பெண்கள் கருமிளகு பொடியை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குடிக்கலாம். இது தவிர, கருமிளகை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

செரிமானத்தை மேம்படுத்த

பெண்கள் பலரும் சந்திக்கும் மாதவிடாய் வலியானது உணவு மற்றும் வேறு சில காரணங்களால் ஏற்படலாம். இதனால் வயிற்று வலி, பிடிப்புகள் மற்றும் மலச்சிக்கல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற கருமிளகு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. மேலும் கருமிளகில் உள்ள ஊட்டச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Period Twice a Month: மாதத்தில் இருமுறை மாதவிடாய் வருவது நல்லதா.? என்னனு தெரிஞ்சிக்கோங்க.

உலர்ந்த முடிக்கு

பல்வேறு அழகு சாதனப் பொருள்களால் முடி வறண்டு போகலாம். இதற்கு கருமிளகு சிறந்த தேர்வாகும். கருமிளகில் வைட்டமின் ஏ சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை உலர்ந்த கூந்தல் பிரச்சனையைத் தீர்க்க உதவுகிறது. இதற்கு, 2 ஸ்பூன் கருமிளகு பொடியை 1 ஸ்பூன் தேனுடன் கலந்து பயன்படுத்தலாம். மேலும், கருமிளகு பேஸ்ட்டை வாரத்திற்கு 2 முதல் 3 முறை தடவி வர முடியின் வறட்சியை நீக்கலாம்.

முகப்பருவை போக்க

கருமிளகு சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. தவறான அழகு சாதனப் பொருள்களின் பயன்பாடு அல்லது வேறு சில காரணங்களால் முகப்பரு தோன்றலாம். கருமிளகில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் முகப்பருவை நீக்க உதவுகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க, ஒரு சிட்டிகை அளவிலான கருப்பு மிளகை ஃபேஸ் பேக்கில் கலந்து தடவி வர நிவாரணம் கிடைக்கும்.

இந்த வழிகளில் கருமிளகை எடுத்துக் கொள்வது பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. எனினும் ஏதேனும் உடல் நல பிரச்சனைகள் இருப்பின், கருமிளகை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Drinks During Periods: மாதவிடாய் வலி சீக்கிரம் குறைய இந்த பானங்களை குடிங்க

Image Source: Freepik

Read Next

Woman Danger Signs: உடலில் ஏற்படும் இந்த அறிகுறிகளை பெண்கள் புறக்கணிக்கவேக் கூடாது!

Disclaimer