$
Halim Seeds Benefits For Periods: பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றே மாதவிடாய் ஆகும். மாதவிடாய் காலத்திற்கு முன்போ அல்லது மாதவிடாய் காலத்திலோ ஏற்படும் வலி பெண்களை அதிகம் பாதிக்கலாம். இதில் சிலருக்கு லேசான பிடிப்புகள் இருக்கலாம். மற்றவர்களுக்கு அதிகமாக இருக்கலாம். இந்த மாதவிடாய் பிடிப்புகளைக் குறைக்கும் விதமாக ஹலீம் விதைகள் உதவுகிறது. இவை மாதவிடாய் அசௌகரியத்தை குறைக்க உதவுகிறது.
ஹலீம் விதைகள்
லெபிடியம் சாடிவம் என்ற தாவரத்திலிருந்து வரும் சிறிய பழுப்பு விதைகளே ஹலீம் விதைகள் ஆகும். இவை பெரும்பாலும் மிளகு சுவைக்காக சாலட்கள், சாண்ட்விச்கள், மற்றும் சூப்கள் போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது. மேலும் இந்த விதைகள் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதை ஊக்குவிக்கவும், செரிமான பிரச்சனைகளை போக்கவும் பயன்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Menopause Effects On Health: மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இது தான்.!
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு ஹலீம் விதைகள் தரும் நன்மைகள்
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளைக் கையாள ஹலீம் விதைகள் உதவுகிறது.
மாதவிடாய் வலி நீங்க
ஹலீம் விதைகளில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இவை மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இவை வீக்கத்தைக் குறைக்கவும், மாதவிடாய் தொடர்பான வலியைக் குறைக்கவும் உதவுகிறது.

இரும்புச்சத்து வழங்குதல்
உடலில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து மிக அவசியமாகும். அதன் படி ஒரு தேக்கரண்டி ஹலீம் விதைகளில் தோராயமாக 12 மிகி அளவு இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைகிறது. எனவே இரும்புச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
சீரான மாதவிடாய் சுழற்சிக்கு
ஹலீம் விதைகளை உட்கொள்வது மாதவிடாய் சுழற்சியை சீராக வைக்க உதவுகிறது. இந்த ஹலீம் விதைகளில் ஹார்மோன் சமநிலையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கலவைகள் நிறைந்துள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Foods During Periods: மாதவிடாயின் போது அதீத சோர்வா? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க
மாதவிடாய்க்கு ஹலீம் விதைகளை எவ்வாறு எடுத்துக் கொள்வது?
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்க பெண்கள் தங்களது அன்றாட உணவில் ஹலீம் விதைகளை பின்வரும் வழிகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஹலீம் விதை தூள்
ஹலீம் விதைகளை நன்றாட பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை தயிர், சாலட்கள் அல்லது சூப்களில் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
ஹலீம் விதை தேநீர்
இதில் முதலில் கொதிக்கும் நீரில் ஹலீம் விதைகளைச் சேர்த்து அவற்றை ஊற வைக்க வேண்டும். பின் இந்த விதைகளை வடிகட்டி, இதனுள் சேர்க்கப்பட்ட நீரை தேநீராக குடிக்கலாம்.
ஹலீம் விதை நீர்
இதற்கு ஹலீம் விதைகளை இரவு முழுவதும் நீரில் ஊற வைக்க வேண்டும். பின் அடுத்த நாள் காலை எழுந்தவுடன் விதைகளை வடிகட்டி ஹலீம் விதை நீரைக் குடிக்கலாம்.

குறிப்பு
ஹலீம் விதைகள் எடுத்துக் கொள்வது பாதுகாப்பான மற்றும் சத்தான உணவாக இருப்பினும், சில பெண்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம். இவை ஒவ்வாமை எதிர்வினைகள், கர்ப்பம் தொடர்பான பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
மாதவிடாய் வலிக்கு ஹலீம் விதைகளை எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், சீரான உணவைப் பராமரிப்பது அவசியமாகும். மேலும் மாதவிடாய் ஆரோக்கியம் உட்பட ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பங்களிக்க உதவும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கையாள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Period Twice a Month: மாதத்தில் இருமுறை மாதவிடாய் வருவது நல்லதா.? என்னனு தெரிஞ்சிக்கோங்க.
Image Source: Freepik