Foods During Periods: மாதவிடாயின் போது அதீத சோர்வா? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க

  • SHARE
  • FOLLOW
Foods During Periods: மாதவிடாயின் போது அதீத சோர்வா? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க


Foods To Eat During Menstruation: மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். குறிப்பாக பெண்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் சோர்வை அனுபவிப்பர். இது தவிர, கால்வலி, வயிற்று வலி, தசைப் பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த மாதவிடாய் பிரச்சனையைத் தவிர்த்து உடல் ஆற்றலைப் பெற சில ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதில் மாதவிடாயின் போது சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து காணலாம்.

மாதவிடாய் சோர்வு ஏற்பட காரணம்

மாதவிடாய் காலத்தில் சோர்வு ஏற்படுவது பொதுவானதாக இருப்பினும், இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மாதவிடாய்க்கு சற்று முன்பு அல்லது அதன் போது ஏற்படும் உணர்வே சோர்வாகும். இதன் முக்கிய காரணி ஹார்மோன் சூழலில் ஏற்படும் மாற்றமாகும். இது தவிர மன அழுத்தம், மனநலப் பிரச்சனைகள் போன்றவை காரணமாகலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Menopause Effects On Health: மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இது தான்.!

மாதவிடாய் சோர்வைத் தடுக்க முடியுமா?

மாதவிடாயின் போது ஏற்படும் சோர்வைத் தடுக்க சில ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களைக் கையாள்வது அவசியமாகும். இதற்கு போதுமான தூக்கத்தைப் பெறுவது அவசியமாகும். மேலும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் உடல் சோர்வு மற்றும் நீரிழப்புகளைத் தடுக்க முடியும்.

மாதவிடாய் சோர்வைத் தவிர்க்க உதவும் உணவுகள்

சில குறிப்பிட்ட வாழ்க்கை முறை மாற்றங்களை பராமரிப்பதுடன், ஆரோக்கியமான உணவுகளைக் கையாள வேண்டும். இதில் மாதவிடாய் சோர்வைத் தவிர்க்க உதவும் உணவுகளைக் காணலாம்.

இஞ்சி

இஞ்சியானது அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த உணவுப்பொருளாகும். இதனை மாதவிடாய் காலத்தில் உட்கொள்வது அதீத நன்மைகளைத் தருகிறது. இது மாதவிடாய் பிடிப்பைக் குறைப்பதுடன், சோர்வைக் குறைக்கவும் உதவுகிறது.

டார்க் சாக்லேட்

மாதவிடாயின் போது இனிப்பு சாப்பிட வேண்டும் என்பது எல்லா பெண்களின் விருப்பமாகும். அதிலும் டார்க் சாக்லேட் சிறந்த நன்மையைத் தரும். இது பசியை அடக்க உதவுவதுடன், உற்சாகமாக வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Menstrual Cramps: மாதவிடாய் வலியை போக்க இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!!

தயிர்

இது ஒரு சிறந்த புரோபயாடிக்குகள் நிறைந்த உணவாகும். மாதவிடாய் காலம் மட்டுமல்லாமல், மற்ற காலங்களிலும் இதை தவறாமல் உட்கொள்ள வேண்டும். இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

நட்ஸ் மற்றும் விதைகள்

பல்வேறு வகையான நட்ஸ் மற்றும் எண்ணெய் விதைகளைச் சேர்ப்பதன் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வழிப்படுத்தலாம். இது உடலின் ஆற்றலை ஊக்குவிக்க உதவுகிறது. மேலும் இந்த கொட்டைகள் மற்றும் விதைகளில் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை மாதவிடாய் பிடிப்பைக் குறைக்க உதவுகிறது.

பெர்ரி

மாதவிடாயின் போது பெர்ரி எடுத்துக் கொள்வது சிறந்த தேர்வாகும். இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் உடல் சோர்வை நீக்குகிறது.

இந்த உணவுகளை மாதவிடாய் காலத்தில் உட்கொள்வதன் மூலம் மாதவிடாய் சோர்விலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Period Cravings: மாதவிடாய் காலத்தில் இனிப்பு சாப்பிட ஆசைப்படுவது ஏன்? இதோ காரணம்!

Image Source: Freepik

Read Next

Vitamin C For Women: வைட்டமின் C பெண்களுக்கு ஏன் முக்கியம் தெரியுமா? டாக்டர்கள் கூறுவது இங்கே!

Disclaimer