$
Sweets Craving During Periods Causes: மாதவிடாய் காலத்தில் இயற்கையாகவே பெண்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பல பெண்களுக்கு இந்த நாட்களில் நிறைய மனநிலை மாற்றங்கள் மற்றும் இனிப்புகள் சாப்பிட ஆசை வரும். சில நேரங்களில் அவர்கள் மிகவும் பசியாக உணர்வார்கள். இதனால், அவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள்.
மாதவிடாய் காலத்தில் இனிப்பு சாப்பிடுவதற்காக ஆசை ஏன் வருகிறது என எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? மாதவிடாய்கும் இனிப்புக்கும் என்ன தொடர்பு? ஏன் இனிப்பின் மீது ஆசை வருகிறது என இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Menstrual Cramps: மாதவிடாய் வலியை போக்க இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!!
மாதவிடாய் காலத்தில் ஏன் இனிப்பு சாப்பிட ஆசைப்படுகிறோம்?

மாதவிடாய் வரும்போது பெண்களின் உயிரியல் மற்றும் உளவியல் காரணங்களால் சில வகையான உணவுகளின் மீது ஆசை அதிகரிக்கிறது என்பது உண்மைதான். இது குறித்து சி.கே.பிர்லா மருத்துவமனை டாக்டர் பிரியங்கா சுஹாக் கூறுகையில், “மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பசியின் காரணமாக, பெரும்பாலான பெண்களில் கலோரிகளின் உட்கொள்ளல் 500-க்கும் அதிகமாக அதிகரிக்கும். இனிப்பு உண்ணும் ஆசையின் காரணமாகவும் இது நிகழ்கிறது.
நிபுணர்களின் கூற்றுப்படி, மாதவிடாய் காலத்தில் இனிப்புகளுக்கு ஏங்குவது மிகவும் பொதுவானது என்பது உண்மைதான். மேலும், மாதவிடாய்க்கு முன் 150-க்கும் மேற்பட்ட அறிகுறிகள் நமது உடலில் தோன்றும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், அது உண்மை தான். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உணவுப் பசியும் இதில் அடங்கும். இந்த நிகழ்விற்கு முக்கியமாக ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களே காரணமாகும்.
இந்த பதிவும் உதவலாம் : Periods Pain Relief Tips: இயற்கையான முறையில் மாதவிடாய் வலியை எவ்வாறு குறைப்பது?
ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நரம்பியக்கடத்திகள் பாதிக்கப்படுகின்றன. இந்நிலையில், உடலில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் சர்க்கரையின் தேவை அதிகரிக்கிறது. சில சமயங்களில், செரோடோனின் அளவு குறைவதால் இது நிகழ்கிறது. செரோடோனின் என்பது மனநிலையை பாதிக்கும் ஹார்மோன் ஆகும்.
மாதவிடாய் காலத்தில் இந்த ஹார்மோன் இல்லாததால், ஒரு பெண் அலட்சியமாக உணர்கிறோம், சில சமயங்களில் மந்தமாக காணப்படுவோம். அதே நேரத்தில், ஒரு பெண் பசியை கட்டுப்படுத்த இனிப்புகள் அல்லது கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடும்போது, அவர் நிறைவாக உணர்கிறார்.
இந்த பதிவும் உதவலாம் : Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!
மாதவிடாய் காலத்தில் பசியை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

மாதவிடாய் காலங்களில் உணவு பசியை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால், கட்டுப்படுத்தவில்லை என்றால் அது பல விளைவுகளை ஏற்படுத்தும். குடிப்பாக இது உங்கள் எடையை அதிகரிக்கலாம். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பசியைக் கட்டுப்படுத்த என்ன செய்வது? என்பதை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.
- மாதவிடாய் காலங்களில் இனிப்புகள், சாக்லேட்கள் போன்றவற்றை வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்க்கவும். ஏனென்றால், இந்தக் காலக்கட்டத்தில் இனிப்புகளின் மீது ஆசை ஏற்பட்டால், உடனே அவற்றைச் சாப்பிட ஆரம்பித்துவிடுவீர்கள். இந்த பொருட்கள் வீட்டில் இல்லாத போது, நீங்கள் அதை உட்கொள்ள முடியாது மற்றும் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம் : Postpone Periods Naturally: இயற்கையான முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்?
- உங்கள் பசியை திருப்திப்படுத்தவும் இரத்த சர்க்கரையை பராமரிக்கவும் புரதத்தை உட்கொள்ள வேண்டும். இதனால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.
- நொறுக்குத் தீனி போன்றவற்றை வீட்டில் வைக்காதீர்கள். மாறாக கரடுமுரடான தானியங்கள், வேகவைத்த தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை உண்ண வேண்டும். இவை பசியை போக்க உதவும்.
- மாதவிடாய் காலத்தில், நீங்கள் கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை குறைந்த அளவு உட்கொள்ள வேண்டும். இருப்பினும், மாதவிடாய் காலத்தில் உங்கள் பசியைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால், முயற்சி செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம் : மாதவிடாய் காலங்களில் உங்கள் சருமத்தை பராமரிப்பதற்கான டிப்ஸ்
- இந்த நாட்களில் கால்சியம் உட்கொள்ளலை அதிகரிக்கவும். இது செரோடோனின் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும். இதற்கு பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்து, பால் பொருட்களை சாப்பிடுங்கள்.
Pic Courtesy: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version