$
மாதவிடாய் நேரம் பெண்களுக்கு பயத்தையும், வலியையும் உண்டாக்கக்கூடிய காலம் ஆகும். இந்த நேரத்தில் பெண்கள் மன அழுத்தத்திற்கும், மற்ற உடல் நல பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சில காரணங்களால், பெண்கள் மாதவிடாயை முன்னரே சந்திக்க நினைப்பர். இந்த நேரங்களில் மருந்து, மாத்திரைகளையே அதிகம் சாப்பிட விரும்புவர். இதில், இயற்கை முறையில் மாதவிடாய் காலத்திற்கு முன்னதாகவே அதனைச் சந்திக்க முடியும். இதில், மாதவிடாய் காலம் சீக்கிரம் வர பெண்கள் சாப்பிட வேண்டிய சில உணவுகளைக் காணலாம்.
மாதவிடாய் சீக்கிரம் வரவைப்பதற்கான உணவுகள்
இஞ்சி டீ
மாதவிடாய் காலத்தை நெருங்குவதற்கு இஞ்சி டீ ஓர் அற்புத தேர்வாகும். இஞ்சி டீ ஆனது கருப்பையைச் சுற்றி வெப்பத்தை உருவாக்கும். இதனால் மாதவிடாய் விரைவில் வருவதற்கான வாய்ப்பு அதிகம். மாதவிலக்கு ஏற்படுவதற்கு இஞ்சி டீ அருந்தலாம் அல்லது தேன் கலந்த இஞ்சி சாற்றை பருகுவதன் மூலமும், மாதவிடாய் ஏற்படக்கூடிய காலத்திற்கு முன்னதாகவே ஆகலாம். எனினும், இது உடல் சூட்டை அதிகரிப்பதால், வயிற்றுப்புண் இருப்பவர்களுக்கு வயிற்று வலி ஏற்படும் அபாயம் உண்டு. எனவே, இதனைக் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எள்
உடலின் வெப்பத்தை அதிகரிப்பதில் எள்ளும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, எள்ளை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடும் போது மாதவிடாய் விரைவாக வருவதை உணரலாம்.
வைட்டமின் சி சார்ந்த பழங்கள்
மாதவிடாய் தூண்டுதலில் வைட்டமின் சி நிறைந்த பழங்கள் பெரிதும் உதவுகின்றன. வைட்டமின் சி சார்ந்த பழங்களில் பப்பாளி, அன்னாச்சிப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி போன்ற பழங்கள் அடங்குகிறது. பப்பாளிப்பழமானது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைத் தூண்டக்கூடிய கரோட்டின் பழமாகும். இந்த பழங்களைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், மாதவிடாய்க் காலத்தை முன்னதாகவே அடையலாம்.

கொத்தமல்லி விதை
உடல் வெப்பத்தை அதிகரிக்க கொத்தமல்லி விதைகளும் பயன்படுகின்றன. கொத்தமல்லி டீ அருந்துவதன் மூலம் மாதவிடாய்க் காலத்தை நெருங்க முடியும். அதாவது தேவையான அளவு கொத்தமல்லி விதைகளை எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் கொதிக்க விட்டு, அதனை மிதமான சூட்டிலோ, நன்கு ஆறிய பின்னரோ அருந்தலாம். கொத்தமல்லி கலந்த நீரைக் குடிக்கும் போது, மாதவிலக்கு நெருங்குவது எளிதாக அமைகிறது.
பீட்ரூட்
பீட்ரூட்டில் கால்சியம், இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. மாதவிடாயைத் தூண்டக்கூடிய வகையில், பீட்ரூட் பழம் அமைகிறது.
மேலே கூறப்பட்டவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம், மாதவிடாக் காலத்திற்கு முன்னதாகவே அதனை நெருங்க முடியும்.

Image Source: Freepik