How to use ginger for early periods: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையால் பலரும் பல வகையான பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை அமைகிறது. இதில் மாதவிடாய் தாமதமாக வருவது அல்லது சரியான நேரத்தில் வராமல் போவது போன்றவை பொதுவானதாகும். இது பெண்களின் உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையின்மையால் ஏற்படக்கூடியதாகும். பெண்களில் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மைக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
இதற்கு உட்கார்ந்த வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு, PCOS மற்றும் PCOD போன்றவை காரணமாக ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். இந்த ஹார்மோன் சமநிலையின்மையால் பெண்கள் சரியான நேரத்தில் மாதவிடாய் வராமல் இருப்பது மட்டுமல்லாமல், மாதவிடாய் காலத்தில் கடுமையான பிடிப்புகள் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர். மாதவிடாய் சுழற்சியை சரியான நேரத்தில் கொண்டு வரவும், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையிலிருந்து விடுபடவும் சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Papaya During Periods: பப்பாளி சாப்பிட்டால் பீரியட்ஸ் சீக்கிரம் வருமா? உண்மை இங்கே!
மாதவிடாய் சரியான நேரத்தில் வர இஞ்சி உதவுமா?
மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உணவியல் நிபுணர் கரிமா கோயலின் கூற்றுப்படி, ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் சரியான நேரத்தில் வரவில்லை எனில், அவர்கள் இந்த விஷயத்தில் ஒரு மருத்துவரை அணுக வேண்டும். அப்போது தான் அடிப்படைக் காரணங்களைத் தெரிந்து கொள்ள முடியும். சிகிச்சைக்காக, மருத்துவர் சில மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை பரிந்துரைப்பர்.
மேலும், சிகிச்சையுடன் உணவில் சில உணவுகளைச் சேர்ப்பதன் மூலம், மாதவிடாய் சரியான நேரத்தில் வருவதற்கு பெரிதும் உதவுகிறது. அவ்வாறு ஒழுங்கற்ற மாதவிடாயைச் சரிசெய்ய உதவும் ஒரு சிறந்த உணவாக இஞ்சி அமைகிறது. இதில் மாதவிடாய் விரைவில் வர இஞ்சியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த தகவல்களைக் காணலாம்.
மாதவிடாய் வருவதற்கு இஞ்சி எவ்வாறு உதவுகிறது?
உணவியல் நிபுணர் கரிமா அவர்கள், “பெண்கள் இஞ்சியை தொடர்ந்து உட்கொள்வதால், அது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இஞ்சியில் இஞ்சிரோல் உள்ளது. மேலும் இது அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, உடலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் இது பெரிதும் நன்மை பயக்கும். இது தவிர, இஞ்சியை உட்கொள்வது கருப்பையின் தசைகள் சுருங்கவும், ஹார்மோன்களின் சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது என்று கூறியுள்ளார்.
மாதவிடாய் விரைவில் வர இஞ்சியை சாப்பிடும் முறைகள்
உணவில் சேர்ப்பது
அன்றாட உணவில் இஞ்சியை ஒரு மசாலாவாக சேர்க்க முயற்சிக்க வேண்டும். இது தவிர, இஞ்சி செதில்களை சாலட்டாக உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவது உணவின் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!
இஞ்சி மற்றும் தேனை நேரடியாக சாப்பிடுவது
ஒரு அங்குல இஞ்சியை நசுக்கி, அதை தேனுடன் சேர்த்து நேரடியாக உட்கொள்ளலாம். இந்த வழியில் இஞ்சியை எடுத்துக் கொள்வது ஹார்மோன் சமநிலையை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. இவ்வாறு எடுத்துக் கொள்வது மாதவிடாயை விரைவில் வர வழிவகுக்கிறது.
இஞ்சி தேநீராக அருந்துவது
உணவில் இஞ்சியைச் சேர்ப்பதற்கான மிகவும் எளிதான வழிகளில் ஒன்றாக இஞ்சி தேநீர் அமைகிறது. இஞ்சி தேநீர் தயார் செய்ய ஒரு நாளைக்கு 2-3 முறை தேன் கலந்து இஞ்சி டீ அருந்தலாம். ஆனால், பால் மற்றும் தேயிலை இலைகளுடன் கூடிய தேநீர் பற்றி பேசவில்லை. இதற்கு இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி, தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.
குறிப்பு
ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு சிகிச்சையளிப்பதற்கு இஞ்சி ஒரு மாற்று கிடையாது. இது வாழ்க்கை முறை மற்றும் சரியான சிகிச்சையின் மூலம் ஹார்மோன் பிரச்சனைகளை சமாளிக்க மட்டுமே உதவுகிறது. எனவே இதற்கு முதலில் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Remedy for Periods: மாதக்கணக்கில் வராத பீரியட்ஸூம் உடனே வர இந்த ஒரு ட்ரிங்க் குடிங்க போதும்
Image Source: Freepik