$
How To Get Periods Immediately If Delayed: இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப்பழக்கம் காரணமாக பலரும் பல உடல் உபாதைகளைச் சந்திக்கின்றனர். இதனால் முதுமையில் சந்திக்கும் பல பிரச்சனைகளை இளம் வயதிலேயே சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இவ்வாறு நம் வாழ்க்கையில் மாற்றங்கள் அதிகரிக்க, அதிகரிக்க நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால், இவை பக்கவிளைவை ஏற்படுத்தக் கூடியதாக அமையலாம். எனவே, பிரச்சனைகள் சிறிய அளவில் இருக்கும் போது நம் வீட்டிலேயே சில முறைகளைக் கையாளலாம். இதன் மூலம் எளிய பிரச்சனைகளிலிருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அந்த வகையில் மாதக்கணக்கில் தள்ளிப் போன மாதவிடாய் பிரச்சனையை இந்த வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் எளிதில் தீர்க்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Postpone Periods Naturally: இயற்கையான முறையில் மாதவிடாய் தள்ளி போக என்ன செய்ய வேண்டும்?
மாதவிடாய் பிரச்சனை
இன்று பெண்கள் பலரும் மாதவிடாய் தள்ளிப் போகும் பிரச்சனையை ஒரு முறையாவது கட்டாயம் அனுபவித்திருப்பர். சில சமயங்களில் மாதவிடாய் தள்ளிப்போகலாம் அல்லது மாதவிடாய் இரத்தப்போக்கு வராமல் போகலாம். இந்த ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு ஏராளமான காரணங்கள் உள்ளது. மேலும் இந்த சூழ்நிலையில் பெண்களுக்கு எப்படி பிரச்சனையைக் கையாள்வது என்று தெரிவதில்லை. இதனால், நிறைய பெண்கள் இந்த மாதவிடாய் பிரச்சனையைக் கண்டு கொள்ளாமல் அப்படியே விடுகின்றனர்.

மாதவிடாய் தள்ளிப்போவதற்கான காரணங்கள்
பொதுவாக மாதவிடாய் தாமதமாகும் போது கர்ப்பமாக பார்க்கப்படுகிறது. ஆனால், கர்ப்பத்தைத் தவிர மாதவிடாய் காலங்கள் தாமதமாக வேறு சில காரணங்களும் உள்ளது. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
- உடல் எடை அதிகரிப்பு காரணமாக மாதவிடாய் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. ஏனெனில் அதிக உடல் எடை உடல் செயல்பாடுகளை மாற்றலாம். எனவே ஒழுங்கற்ற மாதவிடாயைச் சரி செய்வதற்கு உடல் எடையைக் குறைப்பது அவசியமாகிறது.
- குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் கொடுக்கும் பட்சத்திலும், சில சமயங்களில் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படலாம். இது மாதவிடாயைத் தள்ளிப் போக வாய்ப்புள்ளது.
- பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுத்துக் கொள்வதும் மாதவிடாய் சுழற்சி பாதிப்படையலாம். எனவே முடிந்த வரை கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- PCOS பிரச்சனை உள்ளவர்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது மாதவிடாய் தள்ளிப்போகும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. எனவே PCOS பிரச்சனை உள்ள பெண்கள் அதன் அறிகுறிகளைக் கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
- அதீத மன அழுத்தமும் மாதவிடாய் சுழற்சியில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. இதற்கு சமநிலையற்ற ஹார்மோன்களை உருவாக்குவதே காரணமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Periods Pain Relief Tips: இயற்கையான முறையில் மாதவிடாய் வலியை எவ்வாறு குறைப்பது?
மாதவிடாய் சீக்கிரம் வர உதவும் வீட்டு வைத்தியம்
மாதவிடாய் தள்ளிப்போக இது போன்ற காரணங்கள் இருப்பினும், மாதவிடாய் சீக்கிரம் வர சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம்.
தேவையானவை
- புதினா - 3 கைப்பிடி அளவு
- எலுமிச்சைச் சாறு - 20 மில்லி லிட்டர்
- உப்பு - சிறிதளவு அல்லது நாட்டுச்சர்க்கரை - 1 ஸ்பூன்

செய்முறை
- முதலில் புதினாவை அரைத்து, அதில் எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்க வேண்டும்.
- பின் விருப்பத்திற்கேற்ப உப்பு அல்லது நாட்டுச்சர்க்கரையைச் சேர்த்து கரைசலை உருவாக்கலாம்.
- இப்போது இந்த கலவையை ஸ்மூத்தி போல பருகலாம்.
இது மாதவிடாய் பிரச்சனைக்கு உதவுவதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக அமைகிறது.
புதினாவின் நன்மைகள்
புதினாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபைட்டோநியூட்ரியன்ட்கள் போன்றவை உள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பாக்டீரியாவுக்கு எதிரான குணங்கள் உள்ள ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும் புதினாவில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் உள்ளது. இது உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கவும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது தவிர, புதினா இலைகளில் புரதம், கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் எடையைக் குறைக்கவும் ஏற்றதாக அமைகிறது.
எனினும் சில உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் புதினா உட்கொள்வதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. அதன் படி, வாயுத்தொல்லை இருப்பவர்கள், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் போன்றோர் உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!
Image Source: Freepik