Drinks During Periods: மாதவிடாய் வலி சீக்கிரம் குறைய இந்த பானங்களை குடிங்க

  • SHARE
  • FOLLOW
Drinks During Periods: மாதவிடாய் வலி சீக்கிரம் குறைய இந்த பானங்களை குடிங்க


இந்த மாதவிடாய் வலி உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்தையும் பாதிப்பதாக அமைகிறது. வலி மற்றும் அசௌகரியத்தின் தீவிரமானது உணவு, உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தம் போன்ற வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த காரணிகளைத் தவிர்ப்பதன் மூலம் மாதவிடாய் வலியைக் குறைக்கலாம். இதில் மாதவிடாய் வலி நிவாரணத்திற்கு சில ஆரோக்கியமான பானங்களை அருந்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Period Twice a Month: மாதத்தில் இருமுறை மாதவிடாய் வருவது நல்லதா.? என்னனு தெரிஞ்சிக்கோங்க.

மாதவிடாய் வலி நீங்க ஆரோக்கியமான பானங்கள்

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கான இயற்கையான செயல்முறையின் காரணமாக மாதவிடாய் பிடிப்புகள் ஏற்படுகிறது. இதைக் குறைக்க சில ஆரோக்கியமான பானங்களை உட்கொள்ளலாம். அவற்றை பற்றி இங்குக் காண்போம்.

இஞ்சி தேநீர்

மாதவிடாய் பிடிப்புக்கு இஞ்சி டீ சிறந்த தேர்வாகும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது கருப்பை சுருக்கங்களுக்கு பங்களிக்கும் புரோஸ்டாக்லாண்டின் அளவைக் குறைக்கிறது. இதன் மூலம் மாதவிடாய் வலியைப் போக்க உதவுகிறது.

மஞ்சள் பால்

மஞ்சளில் குர்குமின் நிறைந்துள்ளது. மேலும் இதில் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. மஞ்சள் கலந்த பால் அருந்துவது உடலில் வீக்கத்தைக் குறைக்கவும், மாதவிடாய் வலியைக் குறைக்கவும் உதவுகிறது.

சூடான எலுமிச்சைத் தண்ணீர்

எலுமிச்சை நீரானது உடலில் pH அளவை சமநிலைப்படுத்தவும், நீரேற்றத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இத்துடன் இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Foods During Periods: மாதவிடாயின் போது அதீத சோர்வா? இந்த உணவுகளை எடுத்துக்கோங்க

கெமோமில் டீ

கெமோமில் டீயானது இனிமையான மற்றும் அமைதியான பண்புகளைக் கொண்டுள்ளது. இது மாதவிடாய் வலிக்கு சிறந்த தேர்வாகும். மாதவிடாய் காலத்தில் கெமோமில் டீ அருந்துவது அசௌகரியத்தைக் குறைக்கவும், மாதவிடாய் வலியைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.

புதினா டீ

இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதுடன், தசைகளை தளர்த்த உதவுகிறது. புதினா டீயில் ஆன்டிஸ்பாஸ்மோடிக், அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மெந்தோல் போன்றவை நிறைந்துள்ளது. இவை இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுகிறது. இந்த தேநீர் அருந்துவதன் மூலம் மாதவிடாய் வலியைக் குறைக்கலாம்.

சூடான சாக்லேட் கலவை

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதீத வலியைக் குறைக்க சாக்லேட் கலவை சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. டார்க் சாக்லேட்டில் இரும்பு, பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றங்கள், மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன. இவை இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதுடன், கருப்பை தசைகளை தளர்த்த உதவுகிறது. சூடான சாக்லேட் கலவை தயார் செய்து அருந்துவது மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

இவை அனைத்தும் மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும் சிறந்த பானங்களாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Halim Seeds During Periods: மாதவிடாய் வலி பிரச்சனைக்கு உதவும் ஹலீம் விதைகள். எப்படி தெரியுமா?

Image Source: Freepik

Read Next

International Women's Day: சர்வதேச மகளிர் தினம் எங்கு தொடங்கியது தெரியுமா?

Disclaimer