Benefits of aloe vera for period pain: பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாயின் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதனால், அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், மாதவிடாய்க்கு முன்போ அல்லது மாதவிடாய் காலத்திலோ லேசானது முதல் கடுமையானது வரையிலான மாதவிடாய் வலியைச் சந்திக்கின்றனர். மாதவிடாயின் போது வயிற்று வலி மட்டுமல்லாமல், முதுகு வலி, இடுப்பு வலி கால்வலி போன்ற பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படலாம்.
இந்நிலையில், சிலர் மாதவிடாய் வலியைக் குணமாக்கவும், மாதவிடாய் பிடிப்புகளிலிருந்து விடுபடவும் மருத்துவர்களை நாடி மாத்திரைகளைப் பெறுகின்றனர். எனினும், சில இயற்கையான வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் மாதவிடாய் வலி மற்றும் பிடிப்பிலிருந்து விடுபட முடியும். இதற்கு கற்றாழை ஒரு சிறந்த ஆரோக்கியமான தேர்வாகும். இதில் இனிமையான மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த கற்றாழை எவ்வாறு மாதவிடாய் பிரச்சனைக்கு உதவுகிறது என்பதைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Menstrual Cramps: மாதவிடாய் வலியை போக்க இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க!!
மாதவிடாய் வலி
மாதவிடாய் வலியானது மருத்துவ ரீதியாக டிஸ்மெனோரியா என்றும் அழைக்கப்படுகிறது. இது மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் ஏற்படும் வலி உணர்வுகளைக் குறிக்கிறது. ஆய்வில், இது மாதவிடாய் சுழற்சியின் போது பல்வேறு நபர்களால் அனுபவிக்கப்படும் பொதுவான அறிகுறியாகக் கருதப்படுகிறது. இந்த வலியானது லேசான அசௌகரியம் முதல் கடுமையானதாக வரை உணரப்படுகிறது. மேலும் இது கீழ் முதுகு, இடுப்பு, தொடைகள் போன்ற அனைத்திலும் பரவக்கூடும்.
மாதவிடாய் வலிக்கு கற்றாழை எவ்வாறு உதவுகிறது?
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த
கற்றாழையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ, மெக்னீசியம், துத்தநாகம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. ஆய்வில் இந்த ஊட்டச்சத்துக்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை ஆதரிக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், பல்வேறு உடல் செயல்பாடுகளுக்குத் தேவையான சக்தியை வழங்குவதற்கும், மாதவிடாய் பிடிப்புகளின் தீவிரத்தை குறைக்கவும் உதவுகிறது.
நீரேற்றத்தைத் தர
மாதவிடாயின் போது உடலை நன்கு நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், இதன் மூலம் வீக்கம் மற்றும் மாதவிடாய் தொடர்பான அசௌகரியங்களைப் போக்கலாம். ஆனால், நீரிழப்பு காரணமாக இதன் அறிகுறிகள் மேலும் மோசமாகலாம். இந்நிலையில் கற்றாழை சாறு உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். ஏனெனில், இது நீரேற்றத்துடன் அத்தியாவசிய திரவங்களையும் வழங்குகிறது. அதே சமயம், மாதவிடாய் ஆரோக்கியத்திற்கான நன்மைகளையும் வழங்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Drinks During Periods: மாதவிடாய் வலி சீக்கிரம் குறைய இந்த பானங்களை குடிங்க
வீக்கத்தைக் குறைப்பதற்கு
கற்றாழையில் குளுக்கோமன்னன் மற்றும் ஆந்த்ராக்வினோன்கள் போன்ற சேர்மங்கள் உள்ளது. இவை இரண்டுமே அதன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றவையாகும். ஆய்வு ஒன்றில், இந்தக் கலவைகள் கருப்பையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் வீக்கம் ஏற்படுவது மாதவிடாய் பிடிப்புகளின் வளர்ச்சியில் முக்கிய காரணியாகும். வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் மாதவிடாய் காலத்துடன் தொடர்புடைய வலி மற்றும் அசௌகரியத்தைத் தணிக்கலாம்.
தசைகளைத் தளர்த்துவதற்கு
கருப்பையின் மென்மையான தசைகளை தளர்த்த உதவும் பண்புகளைக் கற்றாழை கொண்டுள்ளது. தசை தளர்வானது மாதவிடாய் பிடிப்புகளுக்கு பங்களிக்கும் சுருக்கங்களைத் தணிக்க உதவுகிறது. இது மாதவிடாய் காலத்தில் அனுபவிக்கும் ஒட்டுமொத்த வலியைக் குறைக்கிறது. ஆய்வு ஒன்றில், மாதவிடாய் செயல்பாட்டில் ஈடுபடும் தசைகளைக் குறி வைப்பதன் மூலம், மாதவிடாய் வலியை நிர்வகிக்க இயற்கையான மற்றும் பயனுள்ள வழியாக அமைகிறது.
செரிமான ஆரோக்கியத்திற்கு
செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவும் சாத்தியமான நன்மைகளைத் தரும் வகையில் அலோவேரா உதவுகிறது. இது குமட்டல் மற்றும் வீக்கம் போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளைப் போக்கவும், செரிமான ஆரோக்கியத்திற்கு உதவவும் கற்றாழை உதவுகிறது. செரிமானம் சார்ந்த பிரச்சனைகளைக் குறைக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. இது மாதவிடாய் பராமரிப்பு வழக்கத்திற்கு மதிப்புமிக்கதாக அமைகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Period Cramps: மாதவிடாய் வலியை குறைக்க எளிய வீட்டு வைத்தியம் இங்கே…
மாதவிடாய் வலியைத் தீர்க்க கற்றாழையைப் பயன்படுத்துவது எப்படி?
கற்றாழை சாறு
தினமும் 1-2 தேக்கரண்டி அளவிலான புதிய, சுத்தமான கற்றாழைச் சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். குறிப்பாக, இது மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
கற்றாழை டீ
புதிய கற்றாழை இலைகளை, சுமார் 10 நிமிடங்கள் சூடான நீரில் வைக்க வேண்டும். இதை வடிகட்டி சூடாக குடிக்கலாம். இந்த தேநீரானது நீரேற்றத்தைத் தருவதுடன், பிடிப்புகளை எளிதாக்கவும் உதவுகிறது.
கற்றாழை, தேங்காய் எண்ணெய் மசாஜ்
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயுடன் கற்றாழை ஜெல்லைச் சேர்த்து, அதை வயிற்றில் மென்மையாக மசாஜ் செய்யலாம். இந்த கலவையானது தளர்வை அளிப்பதுடன், தசை பதற்றத்தில் இருந்து நிவாரணம் தருகிறது.
இவ்வாறு பல்வேறு வழிகளில் கற்றாழையைப் பயன்படுத்துவது மாதவிடாய் வலி மற்றும் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Peppermint for period cramps: மாதவிடாய் வலியை நொடியில் குணமாக்கும் பெப்பர்மின்ட்! எப்படி யூஸ் பண்ணலாம்
Image Source: Freepik