Does peppermint help with period cramps: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிடிப்புகள் பெண்கள் பலரும் அனுபவிக்கக் கூடிய ஒரு பொதுவான பிரச்சனையான மாறிவிட்டது. இது அவர்களுக்கு லேசானது முதல் கடுமையான வலி வரை காணப்படுகிறது. இந்த வலியைத் தவிர்க்க முடியாமல், அவர்கள் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாதவிடாய் வலியை நீக்க பெண்கள் பலரும் மருத்துவ ஆலோசனை பெறுகின்றனர். இன்னும் சில சமயங்களில் வலி குறைவாக இருக்கும் போது, சில வீட்டு வைத்தியங்களைக் கையாள்கின்றனர்.
அந்த வகையில், மாதவிடாய் வலியின் இயற்கையான நிவாரணியாக புதினா பெரிதும் உதவுகிறது. இதைப் பயன்படுத்துவது தசைகளை தளர்த்தவும் வலியைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த மூலிகையை குடிக்கும் தேநீராகவோ அல்லது அத்தியாவசிய எண்ணெய் வடிவிலோ எடுத்துக் கொள்ளலாம். எனினும், மாதவிடாய் பிடிப்பை அகற்ற இந்த இயற்கை மூலப்பொருளைப் பயன்படுத்த இன்னும் பல்வேறு வழிகள் உள்ளது. இதில் மாதவிடாய் வலியிலிருந்து விடுபட புதினா எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Food During Menstruation: மாதவிடாய் காலத்தில் புளிப்பு சாப்பிட்டால் அதிக ரத்தப்போக்கு ஏற்படுமா?
மாதவிடாய் பிடிப்புகள்
மாதவிடாய் பிடிப்புகள் என்பது பெண்கள் தங்கள் அடிவயிற்றில் அனுபவிக்கக் கூடிய மிதமானது முதல் கடுமையான வலியைக் குறிக்கிறது. இவை அடிவயிற்றிலிருந்து தொடங்கலாம். ஆனால், இந்த பிடிப்பானது வயிறு மட்டுமல்லாமல் இடுப்பு, கீழ் முதுகு, தொடைகள் போன்றவை வரை நீட்டிக்கப்படலாம். சில சமயங்களில் இந்த பிடிப்புகள் கூர்மையாகவோ அல்லது நிலையானதாகவோ இருக்கலாம். அதாவது மாதந்தோறும் பெண்களின் கருப்பையின் புறணியை உதிர்க்கும் போது ஏற்படும் சுருக்கத்தால் இந்நிலை ஏற்படுகிறது.
மாதவிடாய் வலிக்கு மிளகுக்கீரை எவ்வாறு உதவுகிறது?
மாதவிடாய் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெற ஒரு சிறந்த வழியாக மிளகுக்கீரையைப் பயன்படுத்தலாம். இதன் சாறு மாதவிடாய் இரத்தப்போக்கு அளவை பாதிக்காது. மாற்றாக, இந்நிலையின் போது ஏற்படும் வலி மற்றும் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் புதினா எவ்வாறு மாதவிடாய் பிடிப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்பதைக் காண்போம்.
- புதினா அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்ததாகும். இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அதிலும் குறிப்பாக, மாதவிடாய் காலங்களில் தசைப்பிடிப்பை ஏற்படும் இடுப்புப் பகுதியின் வீக்கம் குறைவதற்கு உதவுகிறது.
- புதினா மெந்தோல் நிறைந்ததாகும். இது தசை தளர்த்தியாக செயல்படுகிறது. மேலும், கருப்பையின் சுருக்கங்களை ஆற்றவும், தசைப்பிடிப்புகளின் தீவிரத்தை குறைக்கவும் உதவுகிறது.
- புதினா இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், பிடிப்புகள், அசௌகரியத்தைப் போக்கவும் உதவுகிறது. இந்த மேம்பட்ட இரத்த ஓட்டம் கருப்பையில் உள்ள தசைகளை ஓய்வெடுக்கவும், சுருக்கங்களின் தீவிரத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
- மேலும், இதில் உள்ள மெந்தோல் ஒரு இயற்கையான வலி நிவாரணியாக செயல்பட்டு, வலியிலிருந்து நிவாரணம் தருகிறது. இதனை மேற்பூச்சாக அல்லது தேநீராக உட்கொள்வது மாதவிடாய் வலி தொடர்பான அசௌகரியங்களைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Papaya During Periods: பப்பாளி சாப்பிட்டால் பீரியட்ஸ் சீக்கிரம் வருமா? உண்மை இங்கே!
மாதவிடாய் பிடிப்புக்கு புதினாவை எப்படி பயன்படுத்தலாம்?
புதினா எண்ணெய்
மிளகுக்கீரை அல்லது புதினா அத்தியாவசிய எண்ணெயை, ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற கெரியர் எண்ணெய்களுடன் நீர்த்துப் போகச் செய்து பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை, பிடிப்புகள் அதிகமாக உணரப்படும் அடிவயிற்றில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதை அடிவயிற்றில் நேரடியாகப் பயன்படுத்துவது ஒரு சிறந்த முறையாகும். ஏனெனில், இது பிடிப்புகளிலிருந்து நிவாரணத்தைத் தருகிறது. இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யும் போது வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் மேம்படுத்தப்பட்டு நிவாரணத்தைத் தருகிறது.
சூடான புதினா நீரில் அழுத்தம் செய்வது
இதற்கு, சூடான மிளகுக்கீரை தேநீரில் ஒரு துணியை சேர்த்து அல்லது வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் மிளகுக்கீரை எண்ணெயைக் கலக்கலாம். பிறகு வயிற்றில் சூடாக அழுத்தம் கொடுக்கும் வகையில் 15 முதல் 20 நிமிடங்கள் வைக்கலாம். இவ்வாறு செய்வது தசைகளை தளர்த்தவும், பிடிப்புகளை எளிதாக்கவும் உதவுகிறது. வெதுவெதுப்பான குளியல் நீரில் இந்த எண்ணெயின் சில துளிகளைச் சேர்த்து ஊறவைக்கலாம். ஏனெனில், இந்த சூடு தசை பதற்றத்தைத் தணிக்க உதவுகிறது.
புதினா தேநீர் அருந்துவது
ஒரு கப் சூடான மிளகுக்கீரை தேநீர் அருந்துவது உடலுக்கு சிறந்த நிவாரணத்தைத் தருகிறது. மாதவிடாய் பிடிப்புகளுக்கு இந்த தேநீரைப் பயன்படுத்த புதிய புதினா இலைகள் அல்லது ஒரு தேநீர் பையை சூடான நீரில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். மாதவிடாய் சமயத்தில் இந்த நீரை அருந்துவது தசைகளை தளர்த்தவும் மற்றும் மாதவிடாய் வலியைக் குறைக்கவும் உதவுகிறது.
மாதவிடாய் சமயத்தில் பெண்கள் இது போன்ற பல்வேறு வழிகளில் புதினாவை எடுத்துக் கொள்வது மாதவிடாயின் போது ஏற்படும் பிடிப்புகளிலிருந்து நிவாரணம் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Flax seeds during periods: பெண்களே தீராத மாதவிடாய் வலியால் அவதியா? இந்த ஒரு விதை போதும்
Image Source: Freepik