சரியான நேரத்துல பீரியட்ஸ் ஆகாம கஷ்டமா இருக்கா? இந்த ஹெர்பல் டீ உங்களுக்கு உதவும்

Herbal teas for healthy period cycle: பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக மாதவிடாய் அமைகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் இன்று பெண்கள் பலர் சந்திக்கின்றனர். இதில் மாதவிடாய் சரியாக வர என்ன வகையான மூலிகை டீக்கள் உதவும் என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
சரியான நேரத்துல பீரியட்ஸ் ஆகாம கஷ்டமா இருக்கா? இந்த ஹெர்பல் டீ உங்களுக்கு உதவும்

Herbal teas that may support a healthier menstrual cycle: பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மிகவும் சவாலான கட்டங்களில் ஒன்றாக மாதவிடாய் உள்ளது என்பது யாராலும் மறுக்க முடியாது. இந்த காலகட்டத்தில் பல்வேறு அசௌகரியங்களைச் சந்திக்கின்றனர். மாதவிடாய் காரணமாக சோர்வு, குமட்டல், வாந்தி போன்ற உணர்வு, கீழ் முதுகு வலி, கடுமையான வயிற்றுப் பிடிப்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். கூடுதலாக, சில பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற சிக்கல்களையும் சந்திக்கின்றனர்.

இந்த அசௌகரியங்களை நிர்வகிப்பதற்கு பலர் மருந்துகள், ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் உணவு முறை மாற்றங்களை நாடுகின்றனர். உண்மையில் உணவில் சில ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தவும் பல்வேறு அறிகுறிகளைக் குறைக்கவும் முடியும். இதில் மூலிகை தேநீர் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் மாதவிடாய் சரியாக வர எந்த மூலிகை டீக்கள் உதவும் மற்றும் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.

மாதவிடாய்க்கு மூலிகை தேநீர் நல்லதா?

பல்வேறு வகையான மூலிகை தேநீர்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளைத் தரக்கூடியதாகும். இவை பொதுவாக மாதவிடாய் அறிகுறிகளைப் போக்க உதவும் இயற்கை சேர்மங்களைக் கொண்டுள்ளது. எனவே இது மாதவிடாய் சுழற்சியின் போது ஏற்படும் அசௌகரியத்தை நிர்வகிப்பதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!

மாதவிடாய் வலிக்கு மூலிகை தேநீர் எவ்வாறு உதவுகிறது?

வீக்கத்தைக் குறைப்பதற்கு

பெரும்பாலும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது. இதனால், பலர் நாள் முழுவதும் வீங்கியிருப்பதை உணர்கின்றனர். இந்நிலையில், கார்மினேட்டிவ் பண்புகளைக் கொண்ட மூலிகை தேநீர் அருந்துவது இந்த அறிகுறிகளைக் குறைக்கவும், சிறந்த செரிமானத்தை ஆதரிக்கவும் உதவும்.

மாதவிடாய் ஓட்டத்தை ஒழுங்குபடுத்த

சில பெண்களுக்கு மாதவிடாய் ஓட்டம் அதிகமாக காணப்படலாம். சிலருக்குக் குறைவாக இருக்கலாம். இவை இரண்டுமே சோர்வு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். எனினும், சில மூலிகை தேநீர்கள் இயற்கையாகவே இந்த அறிகுறிகளைக் குறைப்பதுடன், வழக்கமான மாதவிடாய் ஓட்டத்தை ஆதரிக்கிறது.

ஹார்மோன்களை சமநிலைப்படுத்த

மாதவிடாயின் போது ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் பெரும்பாலும் எரிச்சல் மற்றும் மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இந்த ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்த மூலிகை தேநீர்கள் உதவுகின்றன. இது உணர்ச்சி நிலைத்தன்மையை ஆதரிப்பதுடன், சில தேநீர்கள் தளர்வை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. மேலும் இது உணர்ச்சி ஒழுங்குமுறைக்கு உதவுகிறது.

பிடிப்புகளைப் போக்க

மாதவிடாய் பிடிப்புகள் அல்லது டிஸ்மெனோரியா என்பது மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மிகவும் சங்கடமான அறிகுறிகளில் ஒன்றாகும். இது கருப்பை தசை சுருக்கங்கள் காரணமாக ஏற்படக்கூடியதாகும். சில மூலிகை தேநீர்கள் தசை தளர்த்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை அசௌகரியத்தைக் குறைப்பதற்கு உதவுகின்றன.

சிறந்த தூக்கத்திற்கு

மாதவிடாய் காலத்தில் சில பெண்கள் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கு சில மூலிகை தேநீர்கள் நிவாரணம் அளிக்கும். இந்த தேநீர் வகைகள் இயற்கையான நரம்பு தளர்த்திகளாகச் செயல்பட்டு, நிம்மதியான தூக்கத்தைத் தர உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் ஓட்டம் குறைவாக இருக்கா.? அப்போ இதை குடிக்கவும்.!

மாதவிடாய் சுழற்சியை இயற்கையாகவே ஒழுங்குபடுத்த உதவும் சிறந்த ஹெர்பல் தேநீர்கள்

புதினா தேநீர்

புதினாவில் ஆண்ட்ரோஜெனிக் எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை ஆண்ட்ரோஜன் அளவைக் குறைக்கவும், மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது. குறிப்பாக, PCOS உள்ள நபர்களுக்கு இது நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

வெந்தய டீ

வெந்தயத்தில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் உள்ளது. இது மாதவிடாய் பிடிப்புகளைப் போக்க உதவுகிறது. அதன் செயலில் உள்ள சேர்மமான அனெத்தோல், கருப்பையைத் தளர்த்தவும் வலிமிகுந்த சுருக்கங்களைக் குறைக்கவும் உதவும்.

இலவங்கப்பட்டை தேநீர்

இலவங்கப்பட்டையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் திறனின் உதவியுடன் வழக்கமான மாதவிடாய் ஓட்டத்தை ஆதரிக்கிறது. மேலும், லேசான மாதவிடாய்களுக்கு உதவுகிறது.

இஞ்சி தேநீர்

இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் என்ற செயலில் உள்ள கலவை ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இரண்டையும் கொண்டதாகும். இது மாதவிடாயின் போது உடலில் ஏற்படும் வீக்கம், வலி மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

குறிப்பிட்ட காலங்களில் உங்கள் உணவுமுறையில் இந்த மூலிகை தேநீர் வகைகளைச் சேர்ப்பதன் மூலம் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை நிர்வகிக்கலாம். எனினும், மிதமான அளவு அவசியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதே போல, உங்கள் உடலுக்கு எது மிகவும் பொருத்தமானது என்பதைத் தீர்மானிப்பதற்கு, சுகாதார நிபுணர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Tea For Period Cramps: மாதவிடாய் வலிக்கு இந்த 4 ஹெர்பல் டீ குடிங்க போதும்

Image Source: Freepik

Read Next

கோடை வெப்பத்தால் எரிச்சலை உணர்கிறீர்களா? எரிச்சலைத் தணித்து ஜில்லுனு வைக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் இதோ

Disclaimer