$
What Herbal Tea Is Good For Body: இன்றைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப்பழக்கம் போன்றவற்றால் நாம் பலரும் உடல் உபாதைகளுக்கு உள்ளாகிறோம். இதனால் சிறு வயது முதலே பெரியவர்கள் சந்திக்கும் பெரும்பாலான பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இவ்வாறு நம் வாழ்க்கை முறையில் மாற்றம் அதிகரிக்க அதிகரிக்க, நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது போன்ற நோய்களைத் தவிர்க்க நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். ஆனால், சில சமயங்களில் இவை பக்கவிளைவை ஏற்படுத்தக் கூடும்.
எனவே, பிரச்சனைகள் சிறிய அளவில் இருக்கும் போதே நாம் வீட்டிலேயே சில ஆரோக்கியமான முறைகளைக் கையாளலாம். இதன் மூலம் நாம் எளிய பிரச்சனைகளிலிருந்து விலகி, அவற்றை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அந்த வகையில், நாம் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளாக வாயு கோளாறு, மூட்டு வலி, தைராய்டு, உடல் சோர்வு, சர்க்கரை நோய், பாத எரிச்சல், கல்லீரல் நோய், கை மற்றும் கால் வலி, இடுப்பு வலி போன்றவை அமைகிறது. இந்த வகை பொதுவான உடல் பிரச்சனைகளிலிருந்து விடுபட சில மூலிகைப் பொருள்கள் வைத்து வீட்டிலேயே தயாரிக்கப்படும் கஷாயம் உதவுகிறது. இதில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மூலிகை டீ செய்முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Herbal Drinks: சமையலறை பொருட்கள் மூலமே மூலிகை பானம் தயாரிக்கலாம்.. நன்மைகள் தெரியுமா?
உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் மூலிகை டீ
உடலில் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து விடுபட மூலிகை பொருள்கள் கொண்டு தயார் செய்யப்படும் மூலிகை டீ தயாரிப்பு முறை குறித்து காணலாம்.
தேவையானவை
- வர மல்லி – ஒரு ஸ்பூன்
- மிளகு – கால் ஸ்பூன்
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- கிராம்பு - 2
- பட்டை - 1
- துளசி - 10 இலைகள்

மூலிகை டீ தயார் செய்யும் முறை
- மூலிகை டீ தயாரிக்க பாத்திரம் ஒன்றில் ஒன்றரை டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி வரமல்லி, சீரகம், மிளகு, துளசி, சோம்பு, பட்டை மற்றும் கிராம்பு போன்ற அனைத்துப் பொருள்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- இந்த ஒன்றரை டம்ளர் தண்ணீரை ஒரு டம்ளர் வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இதை இரவு நேரத்தில் தயார் செய்யலாம்.
- இது அப்படியே கொதித்த பிறகு, தண்ணீரை மூடி வைத்து விடலாம். பிறகு, காலையில் இந்த பானத்தை வடிகட்டி, வெறும் வயிற்றில் பருகவேண்டும். இந்த பானத்தை தினமும் செய்து அருந்தலாம்.
இவ்வாறு செய்து வருவதன் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து விடுபட முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கான சிறந்த மூலிகைகள்!
மூலிகை டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- இன்றைய காலத்தில் சர்க்கரை நோய் ஒரு பொதுவான நோயாகக் கருதப்பட்டாலும், அதன் தாக்கம் நாளடைவில் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
- இவை இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை போன்றவற்றைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
- வயது அதிகரிப்பு காரணத்தால் ஆண்கள், பெண்கள் என இருவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக மூட்டு வலியும் அமைகிறது. ஆனால், இந்த காலகட்டத்தில் முப்பது வயதைக் கடந்தாலே மூட்டு வலி பிரச்சனையைச் சந்திப்பதாக அமைகிறது.
இவ்வாறு உடலில் ஏற்படும் பலதரப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபட மூலிகை டீ உதவுகிறது.

எனவே இது போன்ற சிறிய உடல் உபாதைகளுக்கு, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதில்லை. நோயின் ஆரம்ப காலகட்டத்திலேயே வீட்டிலேயே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நோயிலிருந்து விடுபடலாம்.
இது தவிர, தினந்தோறும் போதிய அளவு உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதையும் வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம் உடல் மற்றும் மனம் இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். எனினும், உடல் நல பிரச்சனைகள் தீவிரமானால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Herbs For Body Detox: உடலில் இருந்து நச்சுக்களை நீக்க உதவும் சூப்பர் மூலிகைகள்
Image Source: Freepik