Herbal Drinks: சமையலறை பொருட்கள் மூலமே மூலிகை பானம் தயாரிக்கலாம்.. நன்மைகள் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Herbal Drinks: சமையலறை பொருட்கள் மூலமே மூலிகை பானம் தயாரிக்கலாம்.. நன்மைகள் தெரியுமா?

அதிகரித்த எடையை குறைப்பது உள்ளிட்ட உடல்நல ஆரோக்கிம்

அதிகரித்த எடையைக் குறைக்க, பல்வேறு வழிகள் உள்ளன. சிலர் ஜிம்மில் இரவும் பகலும் உடற்பயிற்சி செய்கிறார்கள். மற்றவர்கள் வீட்டிலேயே யோகா மற்றும் உடற்பயிற்சி செய்து ஸ்லிம் ஆக முயற்சி செய்கிறார்கள். மூலிகை பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், விரைவில் உடல் எடை குறையும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: Ayurveda Diet For Monsoon: மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு

இன்றைய காலத்தில் அதிக எடை என்பது வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றால் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. அதிகரித்த எடையைக் குறைக்க.. பல்வேறு சூழ்நிலைகளில் விழுகின்றனர்.

சிலர் டயட் என்ற பெயரில் உணவை சாப்பிட்டு வயிற்றை மாற்றிக் கொள்கிறார்கள். இந்த அனைத்து வழிகளும், எடை இழப்புக்கு திறம்பட செயல்படுகின்றன. ருப்பினும், மூலிகை பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், விரைவில் உடல் எடை குறையும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.

எடை இழப்பு

எடை இழப்புக்கான ஆகச் சிறந்த பானங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளது. இதை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறைவதோடு ஒற்றைத் தலைவலி, முடி உதிர்தல், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

சமையலறை பொருள் மூலிகைகள்

இந்த மூலிகை பானத்தை தயாரிக்க, 7-10 இலைகள் கறிவேப்பிலை, ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள், ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள், ஒரு அங்குல துண்டு இஞ்சியை இரண்டு கிளாஸ் தண்ணீரில் (500 மிலி) சேர்க்கவும். ஐந்து நிமிடங்களுக்கு மிதமான வேகத்தில் சமைக்கவும். ஒரு நாளைக்கு 100 மில்லி குடித்தால் போதும். பாதி எலுமிச்சை சாறு பிழிந்துக் கொள்வது கூடுதல் சிறப்பு.

கறிவேப்பிலை சாறு

கறிவேப்பிலை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கறிவேப்பிலையை எந்த உணவுகளில் சேர்த்தாலும் வித்தியாசமான சுவை கிடைக்கும். கறிவேப்பிலையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். கறிவேப்பிலையில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த பானத்தை தயாரிக்க கறிவேப்பிலையையும் சேர்த்துள்ளோம். கறிவேப்பிலை மூலம் எடை இழப்பு, முடி வளர்ச்சி மற்றும் செரிமான அமைப்பை மேம்படுத்துதல் போன்ற அற்புதமான முடிவுகளைப் பெறலாம்.

கறிவேப்பிலையில் ஆல்கலாய்டுகள் அதிகம். இது உடல் பருமன் எதிர்ப்பு, கொழுப்பு-குறைக்கும் பண்புகள் மற்றும் மஹானிம்பைன் பண்புகளைக் கொண்டுள்ளது. அவை கொழுப்பைக் குறைக்கின்றன மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கின்றன. கறிவேப்பிலை இரத்தத்தை சுத்திகரித்து, சர்க்கரை நோய்க்கு மருந்தாக செயல்படுகிறது.

ஓமத்திர இலைகள்

ஓமத்திர இலைகளில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற உயிரியக்கக் கலவைகள் நிறைந்துள்ளன. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் சக்தியும் இதற்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இலைகளை சாப்பிட்டு வந்தால், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இது எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இந்த இலைக்கு மலச்சிக்கலை போக்கும் சக்தியும் உண்டு. வீக்கம், அஜீரணம், இருமல், சளி, நீரிழிவு, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளையும் இது தீர்க்கும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி இலை, ஒவ்வொரு சமையலறையிலும் இருக்க வேண்டிய ஒன்று. இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். ஒற்றைத் தலைவலி, ஹார்மோன் சமநிலை, தைராய்டு பிரச்சனை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சீரகம்

சீரகம் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. சீரான செரிமானம் மகிழ்ச்சியான ஹார்மோன்களையும், மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹார்மோன்களையும் உருவாக்குகிறது. இவற்றுடன் வாயு, வயிற்றில் ஏற்படும் அழற்சி போன்ற பிரச்சனைகளையும் தடுக்கின்றன. சீரகம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது, உடலில் கொழுப்பு கரையும், ஒற்றைத் தலைவலி பிரச்சனை நீங்கும், கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும்.

ஏலக்காய்

ஏலக்காய் குமட்டல், ஒற்றைத் தலைவலி, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு நல்லது. ஏலக்காயில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. இதன் மருத்துவ குணம் பாக்டீரியாவை எதிர்த்து போராடுகிறது. வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகிறது. வாய் துர்நாற்றத்தை குறைக்கிறது. சுவாச பிரச்சனைகளை நீக்குகிறது.

இஞ்சி

இஞ்சி வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இஞ்சி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். எடை இழப்புக்கு இஞ்சி நல்லது. தினமும் காலையில் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை குடித்து வந்தால் தேவையில்லாத கொழுப்பு கரையும்.

இதையும் படிங்க: வாயு தொல்லை இனி இல்லை! மருத்துவரின் பரிந்துரை இங்கே…

இதுபோன்ற மூலிகைகள் உடல் எடை இழப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு உதவும் என்றாலும் ஏதேனும் தீவிரத்தை உணரும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

Image Source: Freepik

Read Next

Triphala Suranam Benefits: திரிபலா சூரணம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

Disclaimer

குறிச்சொற்கள்