நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… நச்சுன்னு மூணு ஹெர்பல் டீ இந்தாங்க!

  • SHARE
  • FOLLOW
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க… நச்சுன்னு மூணு ஹெர்பல் டீ இந்தாங்க!

டீ, காபி போன்ற பானங்கள் வெறும் உற்சாகத்திற்கானதாக மட்டும் இல்லாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். எனவே மூலிகை தேநீர் பருகுவது, நமக்கு காலைப்பொழுதை உற்சாகத்துடன் ஆரம்பிக்கவும், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும்.

தினமும் ஹெர்பல் டீ குடித்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும் மூலிகை டீகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

புதினா, இஞ்சி டீ:

புதினா மற்றும் இஞ்சி சேர்க்கை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது. வாயு, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை புதினா சரி செய்கிறது. மேலும், இஞ்சியில் உள்ள ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த சுவையான டீயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமானம் சரியாகும்.

மஞ்சள் தேநீர்:

மஞ்சளுடன் மிளகு மற்றும் இஞ்சியை கலந்து மஞ்சள் தேநீர் தயாரித்து சாப்பிட்டால், அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இரட்டிப்பாகும். இந்த தேநீர் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சமநிலைப்படுத்துகிறது.

ஆபத்தான பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. மஞ்சள் தேநீரின் மருத்துவ குணங்களை அதிகரிக்கவும், சுவையாகவும் தேனை சேர்க்கலாம்.

தேன், எலுமிச்சை, இஞ்சி டீ:

தேன், இஞ்சி மற்றும் எலுமிச்சை கலவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த திறம்பட செயல்படுகிறது. எலுமிச்சை சாறு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இந்த தேநீரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

தொண்டையை சுத்தப்படுத்துகிறது மற்றும் நாசி நெரிசலைப் போக்க உதவுகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள்.தேன், எலுமிச்சை, இஞ்சி சேர்த்து செய்த டீயைக் குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

ImageSource: Freepik

Read Next

பார்த்தால் 'ச்சீ ச்சீ' என்பார்கள்… இதிலுள்ள விஷயம் தெரிந்தால் விடமாட்டீர்கள்!

Disclaimer

குறிச்சொற்கள்