Sat Sep 12, 2026 | 01:49 AM IST

Herbs For Body Detox: உடலில் இருந்து நச்சுக்களை நீக்க உதவும் சூப்பர் மூலிகைகள்

Which Herbs Are Good For Detox: ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் இன்று பலரின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. அதிலும் குறிப்பாக நொறுக்குத் தீனிகள், ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றின் மீதான மோகம் அதிகரித்தே வருகிறது. இதன் காரணமாக, நம் உடலில் நச்சுக்கள் சேரத் தொடங்குகின்றன. உடல் எடை அதிகரிப்புக்கு இதுவே முக்கிய காரணமாக அமைகிறது. இதனால், பல்வேறு நோய்கள் ஏற்படும் சூழலும் அடங்குகிறது.

இந்த சூழ்நிலையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் ஆரோக்கியமான உணவைக் கடைபிடிப்பதும் அவசியமாகும். இதற்கு உதவும் விதமாக மூலிகைகள் உள்ளன. மூலிகைகளில் உள்ள அத்தியாவசியமான பண்புகள் உடலில் இருந்து நச்சுக்களை அகற்ற உதவுகிறது. உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகின்றன. எனவே உடல் நச்சுத்தன்மைக்கு உதவும் மூலிகைகள் சிலவற்றை இதில் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Cow Vs Buffalo Milk: பசும்பால் அல்லது எருமைப் பால்! எலும்பு ஆரோக்கியத்திற்கு எந்த பால் சிறந்தது?

உடலில் இருந்து நச்சுக்களை நீக்க உதவும் மூலிகைகள்

சில ஆரோக்கியமான பண்புகள் நிறைந்த மூலிகைகளை எடுத்துக் கொள்வது உடலில் இருந்து நச்சுக்களை நீக்க உதவுகிறது.

வேம்பு

பல்வேறு மருத்துவ பண்புகள் நிறைந்த வேம்பு சிறந்த மூலிகை ஆகும். இவற்றை உட்கொள்வது முகப்பரு பிரச்சனைகள் முதல் செரிமான பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் உதவுகிறது. இதன் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நச்சு நீக்கும் பண்புகள் உடலில் இருந்து நச்சுக்களை அகற்ற உதவுகிறது. இது தவிர, இதன் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது. வேம்புவை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

பச்சை கொத்தமல்லி

இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. இதனை வெதுவெதுப்பான நீரில் வெறும் வயிற்றில் உட்கொள்வது சிறந்த நன்மைகளைத் தருகிறது. இது உணவுகள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுவதன் மூலமும் உடலில் இருந்து நச்சுக்களை நீக்க முடியும்.

மஞ்சள்

மஞ்சளை உட்கொள்வதன் மூலம் சளி மற்றும் இருமலைக் குணப்படுத்தலாம். இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை பராமரிக்க உதவுகிறது. மஞ்சளில் உள்ள மருத்துவ குணங்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. இதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், குர்குமின் போன்றவை கல்லீரல் நச்சுத்தன்மைக்கு மிகவும் உதவுகிறது. உடலின் நச்சுத்தன்மையை நீக்க மஞ்சளை பால் அல்லது தண்ணீரில் கலந்து சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds Benefits: நீரிழிவு நோய் முதல் இதய ஆரோக்கியம் வரை.. குளிர்காலத்தில் பூசணி விதை தரும் நன்மைகள்.!

இஞ்சி

பெரும்பாலானோர் தேநீர் அல்லது உணவுகள் தயாரிக்க இஞ்சியை உட்கொள்கின்றனர். இவை உடலில் இருந்து நச்சுக்களை நீக்க உதவுகிறது. ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு மருந்தாக இஞ்சி கருதப்படுகிறது. இதன் நுகர்வு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், வியர்வை மூலம் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்க இஞ்சி டீயை அல்லது டிகாஷனில் கலந்து சாப்பிடலாம்.

இந்த மூலிகைகளை உட்கொள்வது உடலை நச்சுத்தன்மையற்றதாக மாற்றுகிறது. அதே சமயம், உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றவில்லை எனில் இந்த மூலிகைகளின் நன்மைகளைப் பெற முடியாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Mouth Ulcer Treatment: வாய்ப்புண்களால் அவதியா? சீக்கிரம் சரியாக இந்த 4 பொருள் போதும்.

Image Source: Freepik

Read Next

Better Sleep Tips: ஆயுர்வேத முறைப்படி நல்ல தூக்கத்தைப் பெற இந்த வழிகளை ஃபாலோப் பண்ணுங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content