Doctor Verified

Better Sleep Tips: ஆயுர்வேத முறைப்படி நல்ல தூக்கத்தைப் பெற இந்த வழிகளை ஃபாலோப் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Better Sleep Tips: ஆயுர்வேத முறைப்படி நல்ல தூக்கத்தைப் பெற இந்த வழிகளை ஃபாலோப் பண்ணுங்க

இந்த சூழ்நிலையில் அவர்களால் காலையில் எழ முடியாத நிலையோ அல்லது தாமதமாகவோ எழுந்திருப்பது போன்றவை ஏற்படலாம். இதனால் நாள் முழுவதும் சோர்வாகவோ அல்லது சோம்பேறியாகவோ உணரலாம். இதன் மூலம் அன்றாட முக்கிய வேலைகளைச் சரியாகச் செய்ய முடிவதில்லை. இந்த சூழ்நிலையில் இந்த பிரச்சனைகளைத் தவிர்த்து, இரவில் நன்றாக தூங்க பின்பற்ற வேண்டிய ஆயுர்வேத குறிப்புகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் நித்திகா கோஹ்லி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Digestive Problem Remedies: செரிமானத்தை மேம்படுத்த இந்த ஆயுர்வேத வைத்தியங்களை ஃபாலோப் பண்ணுங்க.

நல்ல தூக்கத்திற்கு பின்பற்ற வேண்டிய ஆயுர்வேத தூக்க விதிகள்

ஆயுர்வேத முறைப்படி, இரவில் நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கு சில விதிமுறைகளைக் கையாள வேண்டும். அவற்றைப் பற்றி இதில் காண்போம்.

இரவு உணவை சீக்கிரம் சாப்பிடுவது

தூங்குவதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே இரவு உணவை உண்ண வேண்டும். இரவு நேரங்களில் தாமதமாக உண்ணுவது செரிமான ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். எனவே, இரவில் தாமதமாக சாப்பிடுவதையும், சிற்றுண்டிகளை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

சூரிய உதயத்திற்கு முன் எழுவது

நல்ல தூக்கத்திற்கு சூரிய உதயத்திற்கு முன் எழுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த தூக்க சுழற்சியை பராமரிக்க அறையில் இருண்ட ஒளி மற்றும் வெள்ளை ஒளியுடன் கூடிய அமைப்பை உருவாக்கலாம். இதன் மூலம் நேரமாக தூங்குவது மற்றும் நேரமாக எழுவதை பழக்கமாக வைத்திருக்க வேண்டும்.

சரியான தூக்க நிலை

ஆயுர்வேதத்தில் வலது பக்கத்தில் தூங்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வழியில் தூங்குவது நெஞ்செரிச்சல் மற்றும் இன்னும் பிற செரிமான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. இவ்வாறு வலது பக்கத்தில் தூங்குவது, தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை பிரச்சனையில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds Benefits: நீரிழிவு நோய் முதல் இதய ஆரோக்கியம் வரை.. குளிர்காலத்தில் பூசணி விதை தரும் நன்மைகள்.!

பகலில் தூங்குவதைத் தவிர்ப்பது

ஆயுர்வேதத்தில் கோடை காலத்தைத் தவிர வேறு எந்த காலத்திலும் பகல் அல்லது மதிய நேரத்தில் தூங்குவது பரிந்துரைக்கப்படவில்லை. ஏனெனில், இது உடலில் உள்ள சளி மற்றும் பித்தத்தின் சமநிலையை சீர்குலைக்கலாம். மேலும் மதிய நேரம் தூங்குவது இரவில் தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்கலாம்.

திரைகளில் இருந்து விலகி இருப்பது

இரவு நேரத்தில் 8.30 மணி முதல் 9 மணி வரை மொபைல், லேப்டாப் மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றில் இருந்து வெளிப்படும் ஒளி இயற்கையான தாளத்தைப் பாதிக்கிறது. இவை தூக்கத்தைப் பாதிக்கலாம். எனவே இரவு தூங்கும் முன் திரைகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.

ஆயுர்வேதத்தில் இந்த பழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் இரவில் நல்ல மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mouth Ulcer Treatment: வாய்ப்புண்களால் அவதியா? சீக்கிரம் சரியாக இந்த 4 பொருள் போதும்.

Image Source: Freepik

Read Next

Cow Vs Buffalo Milk: பசும்பால் அல்லது எருமைப் பால்! எலும்பு ஆரோக்கியத்திற்கு எந்த பால் சிறந்தது?

Disclaimer

குறிச்சொற்கள்