$
Digestive Problems Ayurvedic Treatment: செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நோய் அபாயங்களிலிருந்து விடுபடலாம். ஆனால், சில சமயங்களில் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருள்களின் அதிகப்படியான நுகர்வு, மோசமான வாழ்க்கை முறை, மன அழுத்தம், இரவில் அதிக நேரம் விழித்திருப்பது போன்ற காரணங்களால் வயிறு சரியாக சுத்தம் செய்யப்படாமல் மலச்சிக்கல்லை ஏற்படுத்தலாம். இந்த அறிகுறிகள் மோசமான செரிமான அமைப்பைக் குறிக்கிறது. இதில் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இல்லை என்பதைக் குறிக்கிறது.
நீண்ட கால மோசமான செரிமான அமைப்பால் வயிற்றுப்புண், வீக்கம், பெருங்குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களின் ஆபத்தை அதிகரிக்கலாம். மேலும் பலவீனமான செரிமான அமைப்பால் பலராலும் அவர்களுக்கு விருப்பமான பொருள்களை உட்கொள்ள முடிவதில்லை. இந்த சூழ்நிலையில் செரிமானத்தை பாதுகாக்க சில ஆரோக்கியமான இயற்கை வைத்தியங்களைக் கையாள வேண்டும். அந்த வகையில் ஆயுர்வேத நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இயற்கையான முறையில் வயிற்றைக் குணப்படுத்தி செரிமானத்தை ஆரோக்கியமாக்கலாம். இது குறித்து சுதா கிளினிக்கின் ஆயுர்வேத மருத்துவர் அல்கா சர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Mouth Ulcer Treatment: வாய்ப்புண்களால் அவதியா? சீக்கிரம் சரியாக இந்த 4 பொருள் போதும்.
செரிமான பிரச்சனையைத் தீர்க்கும் ஆயுர்வேத வைத்தியம்
மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியம்ற்ற பழக்க வழக்கங்களால் ஏற்படும் செரிமான பிரச்சனையை நீக்க நாம் கையாள வேண்டிய சில ஆயுர்வேத வைத்தியங்களைக் காணலாம்.
பெருஞ்சீரகம்
செரிமான பிரச்சனைகளைப் போக்குவதற்கு பெருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளலாம். இவை உணவை செரிமானம் செய்ய உதவுகிறது. வீக்கம், வயிற்றுப்பிடிப்புகள் மற்றும் வாயு பிரச்சனைகளை நீக்க பெருஞ்சீரகம் உதவுகிறது. மேலும் இது வயிற்றை குளிர்ச்சியாக வைத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது. இவற்றை உட்கொள்ள உணவுக்குப் பின் 1 டீஸ்பூன் அளவிலான பெருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளலாம்.

சியவன்பிரஷ்
செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சியவன்பிரஷ்ஷை எடுத்துக் கொள்ளலாம். இதைத் தயாரிக்க பல வகையான மூலிகைகள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை உட்கொள்வது உணவை ஜீரணிக்கும் மற்றும் வயிற்று வலி, அஜீரணம் மற்றும் வீக்கம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Pumpkin Seeds Benefits: நீரிழிவு நோய் முதல் இதய ஆரோக்கியம் வரை.. குளிர்காலத்தில் பூசணி விதை தரும் நன்மைகள்.!
திரிபலா
திரிபலா எடுத்துக் கொள்வது செரிமானத்தை நீண்ட நேரம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. திரிபலாவை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தவும், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. திரிபலா உணவைச் செரிமானம் செய்யவும், வயிற்றைச் சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இதற்கு 1 ஸ்பூன் திரிபலாவை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, காலையில் சாப்பிட்டு வர மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
கிராம்பு
கிராம்புகளை உணவில் சேர்த்துக் கொள்வது இயற்கையாகவே உணவை எளிதாக செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும் இது வாய் துர்நாற்றம் நீங்க உதவுகிறது. இவை வயிறு சம்பந்தமான நோய்த்தொற்றை அகற்றுவதுடன், வீக்கம் அல்லது மோசமான செரிமானத்தையும் குணப்படுத்துகிறது. உணவில் கிராம்புகளைச் சேர்க்கலாம் அல்லது உணவுக்குப் பிறகு 2 கிராம்புகளை மென்று சாப்பிடலாம்.

இஞ்சி
குளிர்காலத்தில் செரிமானம் அடைவது மிகவும் கஷ்டமாக இருக்கலாம். இந்த கால கட்டத்தில் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்ளலாம். இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை உணவை எளிதாக ஜீரணிக்க உதவுகிறது. மேலும், குடல் அலர்ஜியை நீக்குகிறது. உணவில் இஞ்சியை நேரடியாகவோ அல்லது இஞ்சி கலந்த தேநீரை எடுத்துக் கொள்ளலாம்.
செரிமான ஆரோக்கியத்திற்கு இந்த ஆயுர்வேத நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். எனினும், வேறு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை பிரச்சனை கொண்டிருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு இவற்றை உட்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mulethi Benefits: சளி, இருமல் காணாமல் போக அதிமதுரத்தை இப்படி பயன்படுத்தி பாருங்க.
Image Source: Freepik