Foods that help with bloating fast: அன்றாட வாழ்க்கையில் பலரும் சிறிய முதல் பெரிய அளவிலான உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். குறிப்பாக, அசாதாரணச் செயல்கள் அல்லது செய்யக்கூடாத சில செயல்களைச் செய்வதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இந்த வரிசையில், வயிறு வீக்கமும் அடங்கும். பொதுவாக, பெரும்பாலான நேரங்களில் பிடித்த உணவை அதிகம் உட்கொள்கிறோம். இந்நிலையில் வயிறு வீக்கம் ஏற்பட்டு மிகவும் அசௌகரியத்தை உணரும் நிலை ஏற்படலாம். வயிறு வீக்கம் என்பது வயிற்றில் ஏற்படக்கூடிய ஒரு சங்கடமான, வீங்கிய உணர்வு மிகுந்த, வயிறு திடீரென வீங்குவதைக் குறிப்பதாகும்.
இது பொதுவானது மற்றும் பெரும்பாலும் அதிகம் சாப்பிடுவது, வாயு அல்லது சில உணவுகளால் ஏற்படக்கூடியதாகும். இது பாதிப்பில்லாதது என்றாலும், வீக்கம் நம்மை சோம்பலாக உணர வைக்கலாம். இதில் நல்ல செய்தி என்னவெனில், சில உணவுகள் செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலமும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. அதன் படி, ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "இயற்கை செரிமான நொதிகள்" நிறைந்த உணவுகளைப் பகிர்ந்துள்ளார். மேலும், இது "மென்மையான மற்றும் இலகுவான” செரிமானத்திற்கு உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Stomach Bloating: இந்த பழங்களை சாப்பிட்டா வயிறு உப்புசமா இருக்குமாம்! வயிறு வீக்கத்தைத் தடுக்க என்ன செய்வது?
வயிறு வீக்கத்தைக் குறைக்க உதவும் உணவுகள்
பப்பாளி
பப்பாளியில் உள்ள பாப்பைன் என்ற நொதியானது உணவுக்குப் பிறகு புரதங்களின் முறிவை ஊக்குவிக்க உதவுகிறது. இது வயிறு உப்புசத்திற்கு உதவுவதாகக் கூறியுள்ளார். பப்பாளி புரதங்களை உடைக்க உதவுவதன் மூலம், வயிற்றில் செரிக்கப்படாத உணவு நொதித்து வீக்கம் மற்றும் வாயுவை உருவாக்குவதைத் தடுக்க உதவுகிறது.
மேலும் பப்பாளி ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். இது ஆரோக்கியமான செரிமானத்தையும், வழக்கமான குடல் இயக்கத்தையும் ஊக்குவிக்க உதவுகிறது. உணவுக்குப் பின், சில மணிநேரங்களுக்குப் பிறகு பப்பாளி உட்கொள்வது செரிமானப் பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது.
முக்கிய கட்டுரைகள்
கிவி
ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ராவின் கூற்றுப்படி, கிவியில் உள்ள ஆக்டினிடின் நொதியானது இறைச்சி மற்றும் பால் உணவுகளின் செரிமானத்தை எளிதாக்க உதவுகிறது. மேலும் இது புரதங்களை உடைக்க உதவுகிறது. இவை செரிமானத்தை எளிதாக்கவும், வீக்கம் மற்றும் பிற செரிமானப் பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகுக்கிறது.
கிவி பழத்தில் காணப்படும் கரையக்கூடிய மற்றும் கரையாத அதிக நார்ச்சத்துக்கள், செரிமான அமைப்பை மேம்படுத்தவும், குடல் இயக்கங்களை ஆதரிக்கவும் உதவுகிறது.
தேன்
நிபுணரின் கூற்றுப்படி, தேனில் அமிலேஸ் மற்றும் புரோட்டீஸ் போன்ற நொதிகள் உள்ளது. இவை வீக்கத்தைக் கையாள பெரிதும் உதவுகின்றன. தேனில் காணப்படும் ப்ரீபயாடிக்குகள் வீக்கத்தைக் குறைக்கவும், ஆரோக்கியமான குடல் தாவரங்களை ஆதரிக்கவும் உதவுகின்றன.
தேன் உட்கொள்வது செரிமானத்திற்கு உதவுவதுடன், வயிற்றை அமைதிப்படுத்துகிறது. இதை வெதுவெதுப்பான நீருடன் சேர்த்து எடுத்துக் கொள்வதன் மூலம் சாப்பிட்ட பிறகு ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் கனமான உணர்வைப் போக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசமா இருக்கா? இதைத் தவிர்க்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?
அன்னாசி
இதில் காணப்படக்கூடிய ப்ரோமெலைன் என்ற நொதி, உணவுக்குப் பிறகு ஏற்படும் வீக்கம் மற்றும் முழுமையின் உணர்வைக் குறைக்க உதவுகிறது. இந்த ப்ரோமெலைன் புரதங்களின் முறிவில் பங்கு வகிக்கிறது. இவை செரிமானத்தை எளிதாக்கவும், வாயு, அஜீரணம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை செரிமான அமைப்பு எரிச்சலால் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் அதிக நீர் உள்ளடக்கம் இருப்பதால் வீக்கம் மற்றும் நீர் தேக்கத்திற்கும் நன்மை பயக்கும்.
இஞ்சி
இஞ்சியில் உள்ள ஜிங்கிபைன், ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் புரத செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது கனமான உணவுக்குப் பிறகு வரக்கூடிய வீக்கம் மற்றும் கனத்தன்மைக்கு உதவுகிறது. மேலும் இவை சிறிய பெப்டைடுகள் மற்றும் அமினோ அமிலங்களாக உடைப்பதன் மூலம் செரிமானம் மற்றும் உறிஞ்சுதலை எளிதாக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: உங்கள் வயிற்றை சுத்தம் செய்ய.. இந்த பொருட்களை தினமும் காலையில் தண்ணீரில் கலந்து குடிக்கவும்..
Image Source: Freepik