Thu Oct 29, 2026 | 10:49 AM IST

Doctor Verified

செரிமானத்தை மேம்படுத்தும் சக்திவாய்ந்த மூலிகைகள் – மருத்துவர் பரிந்துரை!

மஞ்சள், இஞ்சி, பூண்டு, இலவங்கப்பட்டை, குங்குமப்பூ, முருங்கைக்காய் போன்ற இயற்கை மூலிகைகள் செரிமானத்தை மேம்படுத்தி, வாயு, மலச்சிக்கல், அஜீரணம், வீக்கம் போன்ற பிரச்சனைகளை குறைக்கின்றன. டாக்டர் கிரண் குப்தாவின் பரிந்துரையுடன் முழு விவரம்.
செரிமானத்தை மேம்படுத்தும் சக்திவாய்ந்த மூலிகைகள் – மருத்துவர் பரிந்துரை!செரிமானத்தை மேம்படுத்தும் சக்திவாய்ந்த மூலிகைகள் – மருத்துவர் பரிந்துரை!

இன்றைய காலத்தில் வேகமான வாழ்க்கைமுறை, ஒழுங்கற்ற உணவு நேரம், அதிக எண்ணெய் மற்றும் கார உணவுகள் – இவை எல்லாம் நம் செரிமான அமைப்பை பாதிக்கின்றன. இதனால் வீக்கம் (bloating), மலச்சிக்கல் (constipation), வாயு (gas), மற்றும் அஜீரணம் (indigestion) போன்ற பிரச்சனைகள் பொதுவாக உருவாகின்றன. அதற்கான சிறந்த தீர்வு — உங்கள் சமையலறையிலே இருக்கும் சில இயற்கை மூலிகைகள்! ஜெய்ப்பூர் பாபு நகர் இயற்கை மருத்துவமனையின் மூத்த மருத்துவரும், மேவார் பல்கலைக்கழக பேராசிரியருமான டாக்டர் கிரண் குப்தா அவர்கள் கூறும் பரிந்துரைகள் இதோ.

செரிமானத்தை மேம்படுத்தும் மூலிகைகள்

மஞ்சள் – அழற்சி எதிர்ப்பின் அதிசயம்

மஞ்சள் என்பது ஆயுர்வேதத்தில் பெரும் மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகையாக கருதப்படுகிறது. இது அழற்சி எதிர்ப்பு (anti-inflammatory) மற்றும் ஆக்ஸிஜனேற்ற (antioxidant) பண்புகளைக் கொண்டது. மஞ்சளை தினசரி உணவில் சேர்ப்பது செரிமானத்தை மேம்படுத்தி, வாயு, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் தரும்.

இஞ்சி – இயற்கையின் செரிமான நண்பன்

இஞ்சி என்பது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகையாகும். இதில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இஞ்சி உட்கொள்வதால் மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகள் குறையும்.

பூண்டு – குடல் சுத்திகரிக்கும் இயற்கை மருந்து

பூண்டில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது செரிமானத்திற்குத் தேவையான என்சைம்களை (enzymes) ஊக்குவிக்கிறது. பூண்டை தொடர்ந்து உட்கொள்வதால் குடல் சுத்தமாகி, வாயு மற்றும் அஜீரணம் குறையும்.

இந்த பதிவும் உதவலாம்: ஜீரண சக்தியை உயர்த்தும் 8 அற்புத உணவுகள்! - குடல் நிபுணர் பரிந்துரை..

இலவங்கப்பட்டை – செரிமானத்திற்க்கு உதவும் மசாலா

இலவங்கப்பட்டையில் உள்ள இயற்கை அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமானத்தை ஊக்குவிக்கின்றன. இது பசியை தூண்டி, வீக்கத்தை குறைத்து, உணவுக்குப் பிறகு செரிமானத்தை வேகமாக்கும்.

குங்குமப்பூ – குடல் நலனுக்கான அரச மூலிகை

ஆயுர்வேதத்தில் குங்குமப்பூ மிகச் சிறந்த மருத்துவ மூலிகையாக கருதப்படுகிறது. இது செரிமான அமைப்பைச் செயல்படுத்தி, வீக்கம், வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

முருங்கைக்காய் – நார்ச்சத்து நிறைந்த செரிமான துணை

முருங்கைக்காயில் நார்ச்சத்து, கால்சியம், அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது அமிலத்தன்மை, வாயு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளை குறைத்து, குடல் நச்சு நீக்கத்திற்கும் உதவுகிறது.

இறுதியாக..

செரிமானம் என்பது ஆரோக்கியத்தின் அடிப்படை. மஞ்சள், இஞ்சி, பூண்டு, இலவங்கப்பட்டை, குங்குமப்பூ, முருங்கைக்காய் போன்ற மூலிகைகள் இயற்கையான செரிமான நன்மைகளை வழங்கி, நம் உடலின் சக்தியை மேம்படுத்துகின்றன. மருத்துவர் ஆலோசனையுடன் இவை உங்கள் தினசரி உணவில் சேர்க்கப்பட்டால், உங்கள் செரிமான அமைப்பு ஆரோக்கியமாகவும் இயற்கையாகவும் இயங்கும்.

Disclaimer: இக்கட்டுரை தகவல் மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சிறப்பான உடல்நலக் கோளாறுகள் இருந்தால், மருத்துவர் ஆலோசனை பெற்ற பிறகு மட்டுமே மேற்கண்ட மூலிகைகளை பயன்படுத்தவும்.

Read Next

→ இனி தூக்கமின்மைக்கு மாத்திரை தேவையில்லை.. படுத்த உடனே தூங்குவதற்கு யோகா மற்றும் ஆயுர்வேத குறிப்புகள் இதோ

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 08, 2025 14:59 IST

    Published By : Ishvarya Gurumurthy