Fruits That Cause Stomach Bloating And How To Prevent It: பொதுவாக வீக்கம், உப்புசம் போன்றவை செரிமான பிரச்சனையாகக் கருதப்படுகிறது. இது வயிற்றில் முழுமை உணர்வால் இறுக்கம், வீக்கம் போன்றவற்றைக் குறிக்கிறது. இந்த உணர்வு வாயுவுடன் சேர்ந்து வலி அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இது செரிமான மண்டலத்தில் வாயு சேர்வதால் அடிக்கடி ஏற்படுகிறது. வீக்கத்தை உண்டாக்கும் பல காரணிகள் உள்ளன. அதில் உணவு, பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவை அடங்கும். இந்த வரிசையில் வீக்கத்தை ஏற்படுத்தும் சில பழங்களும் உள்ளன.
வயிறு நிரம்பிய உணர்வைத் தந்து, அசௌகரியத்தை ஏற்படுத்துவது வீக்கம் இருப்பதைக் குறிக்கிறது. இதில் வயிறு வழக்கத்தை விட பெரியதாகக் காணப்படும். இதனுடன் வயிற்று வலி அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்தினால், வயிறு சத்தம் எழுப்பினால் வயிறு வீங்கியிருப்பதை உணர்த்துகிறது. இதில் வயிறு வீக்கத்தை ஏற்படுத்தும் பழங்களையும், பழங்கள் உட்கொள்ளும் போது வீக்கத்தை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்தும் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Saffron Milk Benefits: தினமும் குங்குமப்பூ பால் குடிப்பதால் கிடைக்கும் அதிசய நன்மைகள்
வயிறு வீக்கத்தை உண்டாக்கும் பழங்கள்
ஆப்பிள்
ஆப்பிள் பழம் அதிகளவிலான வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது. இது ஆரோக்கியமான சிற்றுண்டியாக பரவலாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆப்பிள் பழத்தில் அதிகளவு பிரக்டோஸ் காணப்படுகிறது. இவை பெரிய குடலில் புளிக்கவைக்கப்பட்டு, வீக்கம் மற்றும் வாயுவை ஏற்படுத்தலாம்.
பீச் பழம்
பீச் பழத்தில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்து காணப்படுகிறது. ஆப்பிளைப் போலவே பீச் பழத்திலும் பிரக்டோஸ் அதிகமாக உள்ளது. இது நொதித்தல் மற்றும் இறுதியில் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. இவை வயிறு வீக்கத்தை ஏற்படுத்தலாம்.
தர்பூசணி
கோடைக்காலத்தில் இன்று பலரும் விரும்பி உண்ணும் பழம் தர்பூசணி பழமாகும். இது வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் நிறைந்ததாகவும், நீரேற்றமிக்க பழமாகவும் அமைகிறது. மேலும் இதில் அதிகளவு பிரக்டோஸ் மற்றும் பாலியால்கள் உள்ளது. இது நொதித்தலுக்கும், வாயு உற்பத்திக்கும் காரணமாகலாம்.
மாம்பழங்கள்
மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது கோடையில் அனைவரும் விரும்பி எடுத்துக் கொள்ளும் பழமாகும். மாம்பழத்தை சாறு அல்லது சாலட்களை செய்யலாம். இதில் உள்ள அதிகளவிலான பிரக்டோஸ் மோசமான உறிஞ்சுதல் மற்றும் வாயு உற்பத்திக்கு வழிவகுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Milk or Moringa: பாலை விட முருங்கையில் அதிக அளவு புரதம் உள்ளதா? உண்மை என்ன?
வாழைப்பழங்கள்
பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள வாழைப்பழங்கள் சிறந்த காலை உணவாகவும், ஸ்நாக்ஸ் ஆகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த நார்ச்சத்து குடலில் புளிக்க வைக்கப்பட்டு வாயுவை உற்பத்தி செய்கிறது. இதுவே வீக்கத்திற்குக் காரணமாகிறது.
ஆப்ரிகாட்ஸ்
இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆப்ரிகாட்ஸ் பாதாமி பழம் என அழைக்கப்படுகிறது. இது நொதித்தல் மற்றும் வாயு உற்பத்திக்கு வழிவகுக்கலாம்.
திராட்சை
புதிய மற்றும் உலர்ந்த திராட்சை இரண்டுமே பிரபலமான ஒன்றாகும். இதில் வைட்டமின் கே மற்றும் சி, ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. மேலும் திராட்சையில் பிரக்டோஸ் நிறைந்துள்ளதால் இது வீக்கத்தை ஏற்படுத்தலாம்.
பிளம்ஸ்
இது ஒரு பொதுவான பழமாகும். இதை சிறிது உப்பு சேர்த்து சாப்பிட விரும்புவர். இதில் சர்பிடால் நிறைந்துள்ளது. மேலும் இதில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இவையிரண்டுமே வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
பழங்களை சாப்பிட்டால் யாருக்கு வயிற்று உப்புசம் அதிகமாக இருக்கும்?
- பிரக்டோஸை திறம்பட உறிஞ்ச முடியாத நபர்களுக்கு வீக்கம் ஏற்படலாம்.
- உணர்திறன் செரிமான அமைப்பு கொண்டவர்களுக்கு வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
- எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி உள்ளவர்களுக்கு வாயு உற்பத்தி மற்றும் குடல் விரிவாக்கம் ஏற்படுகிறது.

பழங்கள் உட்கொள்ளலில் ஏற்படும் வயிற்று உப்புசத்தை எப்படி தடுப்பது?
- நார்ச்சத்துக்கள் மற்றும் சர்க்கரைகளை உடைக்க இந்த பழங்களை சமைத்து உண்ணுவது நல்லது. இது செரிமானத்தை எளிதாக்குகிறது.
- நார்ச்சத்து மற்றும் பிரக்டோஸ் உட்கொள்ளலைக் குறைப்பதற்கு சிறிய பகுதிகளாக எடுத்துக் கொள்ளலாம்.
- செரிமானத்தை மெதுவாக்க, வீக்கத்தை உண்டாக்கும் பழங்களை புரதம் அல்லது கொழுப்புடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த வழிகளில் பழங்களை உட்கொள்வதன் மூலம் வீக்கத்தைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cranberries Benefits: குருதிநெல்லியை சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்!
Image Source: Freepik