Sat Sep 12, 2026 | 12:47 AM IST

Cranberries Benefits: குருதிநெல்லியை சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்!

Is It Good To Eat Cranberries: நாம் பல வகையான பழ வகைகளை உண்டு ரசித்திருப்போம். இதில் பெர்ரி பழ வகைகள் ஏராளம் உள்ளது. அந்த வகையில் கிரான்பெர்ரி பழம் மிகவும் சிறப்பு வாய்ந்த துடிப்பான சிவப்பு நிறம் மற்றும் தனித்துவமான புளிப்பு சுவை கொண்ட பழமாகும். இந்த சிறிய பெர்ரி பழம் சுவையானது மட்டுமல்லாமல், பல்வேறு சிறப்பு வாய்ந்த நன்மைகளைத் தருகிறது. இது சிறுநீர் பாதை ஆரோக்கியத்தை ஆதரிப்பதுடன் மதிப்பு மிக்க கூடுதல் பயன்களைத் தருகிறது.

கிரான்பெர்ரி பழத்தின் ஊட்டச்சத்துக்கள்

கிரான்பெர்ரி பழம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான மிகவும் அத்தியாவசியமான பழமாகும். இதில் அதிகளவிலான தாதுக்கள், வைட்டமின்கள் , பைட்டோ நியூட்ரியன்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன.

கிரான்பெர்ரி பழங்கள் சாப்பிடுவதன் நன்மைகள்

சிறுநீர் பாதை ஆரோக்கியம்

குருதி நெல்லியில் உள்ள ஆரோக்கியமிக்க பண்புகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை (UTIs) தடுக்கும் திறனைக் கொண்டுள்ளது. குருதிநெல்லியில் உள்ள கலவைகள் சிறுநீர் பாதை சுவர்களில் பாக்டீரியா ஒட்டாமல் தடுக்க உதவுகிறது. இதனை வழக்கமாக எடுத்துக் கொள்வது UTI அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இவ்வாறு சிறுநீரக ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Saffron Milk Benefits: தினமும் குங்குமப்பூ பால் குடிப்பதால் கிடைக்கும் அதிசய நன்மைகள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த

கிரான்பெர்ரிகள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சிறந்த வளமான மூலமாகும். இது உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இதில் நிறைந்துள்ள பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் பல்வேறு நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடைய ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராகப் போராட உதவுகிறது. மேலும் இது செல்லுலார் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்திற்கு

கிராபெர்ரிகள் நார்ச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்துக்கள் குடலியக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. மேலும், இது ஆரோக்கியமான குடல் வளர்ச்சியை ஆதரித்து மலச்சிக்கல்லைத் தடுக்க உதவுகிறது. உணவில் கிரான்பெர்ரிகளைச் சேர்த்துக் கொள்வது சீரான மற்றும் திறமையாக செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதய ஆரோக்கியத்திற்கு

கிரான்பெர்ரிகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சிறுநீர் பாதை ஆரோக்கியத்துடன், இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதனை அடிக்கடி உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது. இவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதிலுள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.

கொழுப்பு கரைய

கிரான்பெர்ரியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள கடுமையான கொழுப்புகளைக் கரைக்க உதவுகிறது. குருதி நெல்லி பழச்சாறுகளை தினமும் ஒரு கப் தண்ணீரில் கலந்து அருந்தி வரலாம். மேலும் இதை சரியான அளவில் எடுத்துக் கொள்வது நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்க உதவுகிறது. கிரான்பெர்ரியில் நிறைந்துள்ள பாலிபினோலிக் கலவைகள் ட்ரைகிளிசரைடுகள் மற்றும் எச்.டி.எல் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Soaked Vs Unsoaked Almonds: பாதாமை எப்படி சாப்பிடுவதால் ஆரோக்கிய நன்மைகள் அதிகம்.!

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

குருதிநெல்லியில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதிலுள்ள போதுமான அளவிலான வைட்டமின் சி சத்துக்கள் உடல் நோய்த்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரித்து, காய்ச்சல், ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது. எனவே உணவில் குருதிநெல்லியைச் சேர்த்துக் கொள்வது நோயெதிர்ப்பு அமைப்புக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்க உதவும் சிறந்த வழியாகும்.

நீரிழிவு நோய்க்கு குருதிநெல்லி

குருதிநெல்லியை உட்கொள்வது நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அதன் படி, ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ் அளவிலான குருதிநெல்லி சாறு டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள பாலிபினால்கள், செல்கள் சேதம் மற்றும் நோயிலிருந்து பாதுகாக்கிறது.

இவ்வாறு கிரான்பெர்ரி பழம் உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Over Boiling Tea: டீயை அதிகமாக சூடுபடுத்தி குடிச்சிகிட்டே இருந்தா என்ன பிரச்சனை வரும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Vaikasi Visakam Viratham: வைகாசி விசாகம் அன்று சாப்பிட வேண்டிய உணவுகள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content