தினமும் இந்த பயிறு சாப்பிட்டா உடம்புல எந்த பிரச்சனையும் வராதாம்

Health benefits of eating mung beans: உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பயிறு வகைகளில் ஏராளம் உள்ளது. இதில் பச்சைப்பயிறு பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதில் பச்சைப் பயிறை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
தினமும் இந்த பயிறு சாப்பிட்டா உடம்புல எந்த பிரச்சனையும் வராதாம்


Is it good to eat mung beans everyday: அன்றாட உணவில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், பானங்கள், நட்ஸ், விதைகள், பயிறு வகைகள் போன்றவை ஏராளம் உள்ளது. இதில் பயிறு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவக்கூடியதாகும். அவ்வாறு, இந்திய உணவுகளில் முக்கிய அங்கமாக பச்சைப்பயிறு அமைகிறது. இது பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் கொண்ட பயிறு வகையாகும். இது அதிகளவு புரதம் நிறைந்த பயிறு வகையாகும். இது பாசி பருப்பு அல்லது சிறு பருப்பு என்றும் அழைக்கப்படுகிறது. அனைத்து பருப்பு வகைகளைப் போலவே இதிலும் ஊட்டச்சத்துக்கள் சமநிலையில் உள்ளது.

பச்சைப்பயிறில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

பச்சைப்பயிறில் பயிரில் தாவரம் சார்ந்த புரதம், உணவு நார்ச்சத்து, ஃபோலேட், வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் C போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளது. மேலும், இதில் இரும்புச் சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் அடங்கியுள்ளது. குறிப்பாக, இது குறைந்த அளவிலான கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலைக் கொண்டதாகும். எனவே இது சரிவிகித உணவிற்கு ஒரு ஆரோக்கியமான கூடுதலாக அமைகிறது. இத்தகைய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சைப்பயிறை சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Green Moong Dal: கெட்ட கொலஸ்ட்ரால் முதல் BP வரை அனைத்து பிரச்சினைக்கும் இந்த ஒரு பருப்பு போதும்!

தினமும் பச்சைப்பயிறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

எடையிழப்புக்கு பச்சைப்பயிறு

இது அதிகளவிலான நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்ததாகும். ஆய்வின் படி, போதுமான நார்ச்சத்து மற்றும் புரதம் உட்கொள்வது பசி ஹார்மோன்களைக் குறைக்கிறது. இது அதிகப்படியான கலோரி உட்கொள்ளலைத் தடுக்கிறது. மேலும், இதன் நார்ச்சத்துக்கள் குடல் இயக்கத்தை சீராக்கவும், ஒட்டுமொத்த செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உணர வைக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதன் மூலம் உடல் எடையிழப்பை ஆதரிக்கிறது.

இரத்த சர்க்கரையை சீராக வைப்பதற்கு

இரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாக அதிகமாக இருப்பதால் ஏற்படும் நீரிழிவு நோய், பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது. இதற்கு சிறந்த உணவாக பச்சைப்பயிறு அமைகிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் வெப்பப் பக்கவாதம், தாகம் மற்றும் பிற தொடர்புடைய நிலைமைகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், இதில் வைடெக்சின் மற்றும் ஐசோவிடெக்சின் எனப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது வெப்ப அழுத்தத்தின் போது ஏற்படும் ரேடிக்கல்களிலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுவதாக ஆய்வில் கூறப்படுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

பச்சைப்பயிற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தமனிகளை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இது LDL ஆக்சிஜனேற்றத்தைத் தவிர்ப்பதன் மூலம் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக, வீக்கத்தைக் குறைத்து, பிளேக் உருவாக்கம் உள்ளிட்ட இரத்த நாள அசாதாரணங்களை சரிசெய்கிறது. பிளேக் உருவாவது குறைக்கப்பட்டு, பக்கவாதம் போன்ற இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. கூடுதலாக, இதய நோய் அபாயத்தை உருவாக்கும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பச்சைப்பயிறு உதவுகிறது. ஆய்வின் படி, இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை உயர் இரத்த அழுத்த அபாயத்தை திறம்பட குறைக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Sprouted Moong Dal For Weight Loss: முளைக்கட்டிய பச்சைப்பயிறை இப்படி சாப்பிடுங்க; உடல் எடையை கடகடன்னு குறையும்...!

செரிமான ஆரோக்கியத்திற்கு

இதில் பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆராய்ச்சியின் படி, பெக்டின் குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உணவு பதப்படுத்தப்பட்டு வயிற்றில் நகரும் வேகத்தை விரைவுபடுத்தவும் உதவுகிறது. கூடுதலாக, இது ஒட்டுமொத்த செரிமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும், இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துடன் ஒப்பிடக்கூடிய எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் உள்ளது. இது நல்ல குடல் பாக்டீரியாவைத் தக்க வைக்கிறது. குறிப்பாக, ப்யூட்ரேட் குடல் ஆரோக்கியத்தை பல வழிகளில் மேம்படுத்துகிறது.

கண் ஆரோக்கியத்திற்கு

பச்சைப்பயிற்றில் உள்ள ஒரு அத்தியாவசிய கனிமமான துத்தநாகம், மாலைக்கண் நோய் சிகிச்சைக்கு பெரிதும் உதவுகிறது. ஆய்வு ஒன்றில், துத்தநாகம் வைட்டமின் ஏ உற்பத்திக்கு உதவும் ஒரு நொதியின் செயல்பாட்டை ஊக்குவிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் வைட்டமின் ஏ குறைபாட்டைப் போக்குவதுடன், மாலைக்கண் நோய் மற்றும் பிற பார்வை தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபட உதவுகிறது. எனவே கண் பார்வையை மேம்படுத்த பச்சைப்பயிறு ஒரு சிறந்த கூடுதலாக இருக்கும்.

சரும ஆரோக்கியத்திற்கு

பச்சைப்பயறு உட்கொள்வது சருமத்திற்கு பளபளப்பு மற்றும் பிரகாசத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் தாமிரத்தின் இருப்பு காரணமாக பல்வேறு ஃபேஸ் பேக்குகள் மற்றும் ஃபேஸ் க்ரீம்களில் இது பயன்படுத்தப்படுகிறது. பச்சைப்பயறை நேரடியாக சருமத்திற்கு பயன்படுத்துவது மற்றொரு சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது. எனவே இது சருமத்தை பளபளப்பாக்குவதற்கான மிகவும் அற்புதமான இயற்கை சுத்தப்படுத்திகளில் ஒன்றாகும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Green Moong Dal: கெட்ட கொலஸ்ட்ரால் முதல் BP வரை அனைத்து பிரச்சினைக்கும் இந்த ஒரு பருப்பு போதும்!

Image Source: Freepik

Read Next

இரவு உணவிற்கு அரிசி சாப்பிடக்கூடாது? இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

Disclaimer