Benefits of eating soaked moong dal on an empty stomach in the morning: உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், பானங்கள், நட்ஸ், விதைகள் மற்றும் பயறு வகைகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். குறிப்பாக, பயறு வகைகள் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். பொதுவாக, அனைத்து வகையான பருப்பு வகைகளுமே புரத ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். அதிலும் பச்சைப்பயறு ஆனது மற்ற பருப்பு வகைகளை விட அதிக நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது. நம் அன்றாட உணவில் பச்சைபயறை சேர்த்துக்கொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
பச்சைப்பயறில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, தாமிரம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட், ரிபோஃப்ளேவின், மெக்னீசியம், நியாசின் மற்றும் தியாமின் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. உண்மையில், இந்தப் பருப்பை பல்வேறு ஆரோக்கியமான வழிகளில் உட்கொள்ளலாம். அவ்வாறு இரவில் ஊறவைத்த பச்சைப்பயிறை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது உடலுக்குப் பல நன்மைகளைத் தருகிறது. காலையில் ஊறவைத்த பச்சைப்பயிறை சாப்பிடுவது நாள் முழுவதும் உடலை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. இதில் காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த பச்சைப்பயிறை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து டயட்ஃபிட் உணவியல் நிபுணர் அபர்ணா மேத்யூனன் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Pachai Payaru Laddu: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பச்சை பயறு லட்டு! எப்படி செய்யணும்?
வெறும் வயிற்றில் ஊறவைத்த பச்சைப்பயிறை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
எடை இழப்புக்கு ஆதரவாக
எடையிழப்புக்கு காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த பச்சைப்பயிறை சாப்பிடுவது நல்லது. இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், இவை நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவுகிறது. இது அதிக கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது. மேலும் இதன் நுகர்வு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், எடையைக் குறைக்கவும் வழிவகுக்கிறது.
முக்கிய கட்டுரைகள்
செரிமானத்தை மேம்படுத்த
ஊறவைத்த பச்சைப்பயிறை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது வயிறு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதன் நுகர்வு குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதன் மூலம் வயிறு எளிதில் சுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு தொடர்ந்து ஊறவைத்த பச்சைப்பயிறை சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் வாயு போன்ற செரிமான பிரச்சனைகளைக் குணப்படுத்தலாம்.
இரத்தக் குறைபாட்டை நீக்குவதற்கு
ஊறவைத்த பச்சைப்பயிறை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகையை குணப்படுத்தலாம். ஏனெனில், இதில் அதிகளவிலான இரும்புச்சத்துக்கள் உள்ளது. இவை இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. பச்சைப்பயிறைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் இரத்தக் குறைபாட்டைக் குணப்படுத்தலாம். இதன் மூலம் பலவீனம் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளை எதிர்த்துப் போராட முடியும்.
உடலுக்கு ஆற்றலைத் தர
தினமும் காலையில் ஊறவைத்த பச்சைப்பயிறைத் தொடர்ந்து சாப்பிடுவது உடலில் ஏற்படும் பலவீனம் மற்றும் சோர்வு பிரச்சனையை நீக்க உதவுகிறது. இதற்கு இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதே காரணமாகும். இவை உடலில் ஆற்றலைப் பராமரிக்க உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த பச்சைப்பயிறைச் சாப்பிடுவது நாள் முழுவதும் உங்களை உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் உணர வைக்கிறது. அதே சமயம், இதில் உள்ள புரதம் தசைகளை வலுப்படுத்தவும் அவற்றின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Green Moong Dal: கெட்ட கொலஸ்ட்ரால் முதல் BP வரை அனைத்து பிரச்சினைக்கும் இந்த ஒரு பருப்பு போதும்!
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது மிகவும் முக்கியமாகும். ஊறவைத்த பச்சைப்பயிறை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஏனெனில் இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் காணப்படுகின்றன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதை சாப்பிடுவதன் மூலம் பல வகையான நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு ஆளாகாமல் தவிர்க்கலாம்.
ஊறவைத்த பச்சைப்பயிறை சாப்பிடும் முறை
முதலில் பச்சைப்பயிறை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். பிறகு, இதை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். காலையில் இதன் தண்ணீரை வடிகட்டலாம். இதில் பச்சையாகப் பாசிப்பருப்பைச் சாப்பிட விரும்பாதவர்கள், அதை வேகவைத்தும் சாப்பிடலாம். பின்னர் அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கலந்து சாப்பிடலாம். தினமும் காலையில் இவ்வாறு தயார் செய்த ஊறவைத்த பச்சைப்பயிறு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது.
காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த பச்சைப்பயிறை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளைத் தருகிறது. எனினும் ஏதேனும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டிருந்தால், நிபுணரின் ஆலோசனையின் பேரில் மட்டும் இதை உட்கொள்வது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: தினமும் இந்த பயிறு சாப்பிட்டா உடம்புல எந்த பிரச்சனையும் வராதாம்
Image Source: Freepik