உடல் வலுவாக இருக்கணுமா? தினமும் இந்த ஒரு பயிரை மட்டும் சாப்பிடுங்க

  • SHARE
  • FOLLOW
உடல் வலுவாக இருக்கணுமா? தினமும் இந்த ஒரு பயிரை மட்டும் சாப்பிடுங்க

அதே சமயம், முளைக்கட்டிய பச்சைப்பயறு வைட்டமின்கள் சி மற்றும் கே, ஃபோலேட் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் அளவை அதிகரிக்கிறது. குறிப்பாக இது சைவ உணவு உண்பவர்களுக்கு மிகுந்த நன்மைகளைத் தருகிறது. இந்த ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான முளைக்கட்டிய பச்சைப்பயறை காலை சிற்றுண்டியாக, சாலட் அல்லது சாட்டில் எடுத்துக் கொள்ளலாம். இது உணவில் சேர்க்க எளிதானதாக மட்டுமல்லாமல் இதில் நிறைந்துள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.

இந்த பதிவும் உதவலாம்: பருப்பு சாப்பிட்டால் யூரிக் அமிலம் அதிகரிக்குமா? உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்!

தினமும் முளைக்கட்டிய பச்சைப்பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

எடையிழப்புக்கு

எடையிழப்பு பயணத்தில் இருப்பவர்களுக்கு முளைக்கட்டிய பச்சைப்பயறு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் குறைந்தளவிலான கலோரிகள் உள்ளது. அதே சமயம் அதிகளவிலான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. எனவே இதை உணவில் சேர்ப்பது கூடுதல் கலோரிகளைச் சேர்க்காமல் முழுமையாக மற்றும் திருப்தியாக உணர வைக்கிறது. மேலும் முளைக்கட்டிய பச்சைப்பயற்றில் உள்ள நார்ச்சத்துக்கள் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைக்கிறது. ஆய்வு ஒன்றில், இதன் அதிக நார்ச்சத்துக்கள் திருப்தியை அதிகரிப்பதுடன், பசியைக் குறைத்து எடையிழப்புக்கு உதவுகிறது.

செரிமான ஆரோக்கியத்திற்கு

முளைக்கட்டிய பச்சைப்பயறு உட்கொள்ளல் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் முளைக்கும் செயல்முறையானது சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களை எளிய வடிவங்களாக உடைத்து, உடல் எளிதான ஜீரணிக்க வழிவகுக்கிறது. இதன் மூலம் ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கும், வீக்கம் மற்றும் வாயு ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. ஆய்வு ஒன்றில், முளைப்பதில் உள்ள அமிலேஸ் மற்றும் புரோட்டீஸ் போன்ற நொதிகளின் உள்ளடக்கம் அதிகரிப்பதால், இது புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்திற்கு உதவுகிறது. இவ்வாறு செரிமான செயல்முறையை எளிதாக்குகிறது.

நீரிழிவு நோய்க்கு

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பது மிகவும் முக்கியமாகும். இதன் குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் காரணமாக நீரிழிவு நோயாளிகள் அல்லது நிலைமையை உருவாக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும். குறைந்த கிளைசெமிக் குறியீடு உணவுகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவு மெதுவாகவும், சீரான உயர்வும் ஏற்படுகிறது. ஆய்வு ஒன்றில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட உணவுகள் கிளைசெமிக் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதுடன், வகை 2 நீரிழிவு அபாயத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. மேலும் இதன் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சுவதை குறைத்து இரத்த குளுக்கோஸ் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Moong Dal Masala Puri: குழந்தைகளுக்கு பிடித்த பாசிப்பருப்பு மசாலா பூரி செய்முறை!

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த

முளைத்த பச்சைப்பயறு ஆனது பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஆய்வு ஒன்றில், முளைக்கட்டிய பருப்பு வகைகள் ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் இதில் உள்ள மக்னீசியம் சத்துக்கள் ஒட்டுமொத்த இதய செயல்பாட்டை ஆதரிக்கிறது.

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

முளைக்கட்டிய பச்சைப்பயறைத் தினமும் உட்கொள்வது ஒரு வலுவான நோயெதிர்ப்பு அமைப்பை உருவாக்கி நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்கிறது. இதன் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவற்றின் அதிக உள்ளடக்கம் காரணமாக உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் ஏ, சி போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் முளைத்த பச்சைப்பயறு வைட்டமின் சி அளவு மற்றும் ஆக்ஸிஜனேற்ற திறனை அதிகரிக்கிறது. இவை இரண்டுமே நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும் பண்புகளுக்கு நன்கு அறியப்பட்டதாகும்.

இவ்வாறு தினமும் முளைத்த பச்சைப்பயறு உட்கொள்ளல் உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Pachai Payaru Payasam: எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகளை கொண்ட பச்சை பயறு பாயாசம் செய்முறை!!

Image Source: Freepik

Read Next

அட மல்லிகைப்பூவை நுகர்ந்து பார்த்தால் இந்த பிரச்சினை எல்லாம் சரியாகுமாம்!

Disclaimer