Expert

அட மல்லிகைப்பூவை நுகர்ந்து பார்த்தால் இந்த பிரச்சினை எல்லாம் சரியாகுமாம்!

  • SHARE
  • FOLLOW
அட மல்லிகைப்பூவை நுகர்ந்து பார்த்தால் இந்த பிரச்சினை எல்லாம் சரியாகுமாம்!

நம்மில் பலர் அடிக்கடி மல்லிகை பூவை தலையில் வைப்பதற்கு முன் நுகர்ந்து பார்ப்போம். அப்போது, வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள் பூவை எப்போதும் நுகர்ந்து பார்க்க கூடாது என. ஆனால், மல்லிகைப்பூவை நுகர்ந்து பார்த்தால் பல உடல் நல பிரச்சினைகள் தீரும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், சரியாகத்தான் படித்தீர்கள். மல்லிகைப்பூவை நுகர்ந்து பார்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Papaya leaf water benefits: பப்பாளி இலை தண்ணீர் குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?

மல்லிகைப்பூவை நுகர்ந்து பார்ப்பதன் நன்மைகள்

செரிமான ஆரோக்கியம்

மல்லிகையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள வாயு எண்சைம்களுடன் வினைபுரிந்து, செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. அதே சமயம் வயிறு உப்புசம், வலி, வயிறு எரிச்சல் போன்றவற்றை குறைக்கும். இது குடலில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாக காரணமாகிறது. இது உடலில் இருந்து கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றுவதுடன், நச்சுக்களையும் நீக்குகிறது.

சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இதய இயக்கத்திற்கு நல்லது. இதயக் கோளாறுகள் ஏற்படாமல் காக்கிறது. இதில், உள்ள ரத்த உறைவு எதிர்ப்புத்திறன் மற்றும் ரத்தத்ததில் கட்டிகள் உருவாகமல் தடுக்கும் திறன் கொண்டது. கெட்ட கொழுப்பை குறைத்து, ரத்த தமனிகளில் தேக்கம் மற்றும் உறைதல் ஏற்படாமல் காக்கிறது. இதனால் இதயம் நன்றாக இயங்கி, மாரடைப்பு போன்றவை தடுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : விரதத்தின் போது பொரித்த பொருட்களை சாப்பிடலாமா.?

உடல் எடை குறைய உதவும்

மல்லிகையை உடல் எடை குறைப்புக்கும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதில், உள்ள உட்பொருட்கள் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது. உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரிக்கிறது. இது உடலில் உள்ள ஆபத்துக்களை ஏற்படுத்தும் நச்சுக்களைப் போக்குகிறது. அதிகப்படியான கொழுப்புக்களை வேகமாக எரிக்க உதவுகிறது.

மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது

மல்லிகை, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மல்லிகையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபினால்கள் இதன் மணத்துக்கு காரணமாகின்றன. இது முளையின் நடவடிக்கையை அதிகரிக்கிறது. உங்கள் மனதை அமைதிப்படுத்தும் செரோடினின் மற்றும் டோப்பமைன் ஆகிய நரம்பியல் டிரான்ஸ்மிட்டர்களை சுரக்கச் செய்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : சமோசா முதல் வடபாவ் வரை.. நீங்கள் தவிர்க்க வேண்டிய ஸ்னாக்ஸ் வகைகள் இங்கே..

மேலும், இது மூளையின் நினைவாற்றல் திறனை அதிகரிக்கிறது. கவனிக்கும் திறன், அமைதி, எச்சரிக்கை உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இதை மூளைக்கு ஊக்கமளிக்கும் பூ என்றே கூறலாம். இது உங்கள் உளவியல் நிலைக்கு மிகவும் நல்லது. மனஅழுத்தம், உறக்கமின்மை மற்றும் மறதி நோய் ஆகியவற்றைப் போக்குகிறது.

நீரிழிவு நோய்

மல்லிகையில் உள்ள ஹைப்போகிளைசமிக் குணம், உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கணையத்தில் சுரக்கும் இன்சுலின் உற்பத்தியை மல்லிகைப் பூ தேநீர் பருகுவது அதிகரிக்கச் செய்கிறது. இதில், உள்ள கேட்சின்கள் அதற்கு காரணமாகின்றன. எனவே, மல்லிகைப் பூ தேநீர் பருகுவதை வழக்கமாகக்கொண்டால் அது உங்கள் உடலில் ஸ்டார்ச்சை குளுக்கோசாக்கி, ரத்தச்சர்க்கரை அளவை விரதத்தில் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Curd: இவங்க எல்லாம் எந்த சூழ்நிலையிலும் தயிர் சாப்பிடக்கூடாது - ஏன்?

மல்லிகை பூவின் இதர நன்மைகள்

தூக்கம்: மல்லிகைப்பூ நல்ல தூக்கத்தை பெற உதவும். மேலும், மருந்து மருந்துகளைப் போலவே பயனுள்ளதாக இருக்கும். இது தூக்கமின்மைக்கும் உதவும்.

மனநிலை: மல்லிகை உங்கள் மனநிலை, ஆற்றல் நிலைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும். இது கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற உணர்வுகளைக் குறைக்கவும் உதவும்.

சரும ஆரோக்கியம்: மல்லிகை வறண்ட சருமம், தழும்புகள் மற்றும் ஸ்ட்ரெச்மார்க்குகளுக்கு சிகிச்சையளிக்கும். இது எரிச்சலூட்டும் தோலையும் ஆற்றும், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவியாக இருக்கும்.

மன அழுத்தம்: மல்லிகைப்பூ உங்களுக்கு மன அழுத்தத்தைத் தணிக்கவும் ஓய்வெடுக்கவும் உதவும். இது தசை வலி, நெரிசல் மற்றும் பிடிப்பு ஆகியவற்றைக் குறைக்கவும் உதவும்.

இந்த பதிவும் உதவலாம் : எலும்பு மற்றும் இதயம் வலுபெற இந்த வைட்டமின் முக்கியம்

ஹார்மோன்களை சீராக்கும்: மல்லிகை ஹார்மோன்களை சீராக்க உதவும்.

பாலுணர்வை தூண்டும்: மல்லிகை பாலுணர்வை ஏற்படுத்தும் குணங்களைக் கொண்டதாக கருதப்படுகிறது. ஜாஸ்மின் நெருக்கத்தை ஊக்குவிக்கும் மற்றும் தடைகளை வெளியிடும்.

தன்னம்பிக்கை: மல்லிகைப்பூ தன்னம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும். மல்லிகை பதற்றத்தை விடுவித்து மனதை உயர்த்த உதவும்.

Pic Courtesy: Freepik

Read Next

எலும்பு மற்றும் இதயம் வலுபெற இந்த வைட்டமின் முக்கியம்

Disclaimer