Expert

Cheese and cholesterol: அட சீஸ் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையுமாம் - புதிய ஆய்வு!

  • SHARE
  • FOLLOW
Cheese and cholesterol: அட சீஸ் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையுமாம் - புதிய ஆய்வு!


What kind of cheese is OK for cholesterol: சீஸ் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சான்வெஜ், பீட்சா, பர்கர் என அனைத்திலும் நாம் அதிகமாக சீஸ் போட சொல்லி சாப்பிடுவோம். ஆனால், பெரும்பாலும் சீஸ் உடலுக்கு நல்லது அல்ல என பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சீஸ் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என உங்களுக்கு தெரியுமா?

குறிப்பாக, சீஸ் சாப்பிடுவதா இதயத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இது பிபி மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் (American Journal of Clinical Nutrition) வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, முழு கொழுப்புள்ள சீஸ் சாப்பிடுவது கொலஸ்ட்ராலைக் குறைப்பதாக தெரியவந்துள்ளது. இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Low Cholesterol Fruits: உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும் பழங்கள் என்னென்ன தெரியுமா?

சீஸ் கொலஸ்ட்ராலை குறைகிறது

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளின்படி, எப்போதாவது சீஸ் சாப்பிடாதவர்களை விட, அடிக்கடி சீஸ் சாப்பிடுபவர்களுளின் கொலஸ்ட்ரால் ஆபத்து மிகவும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 50 வயதுக்கு மேற்பட்ட 164 பேரிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டதாக டப்ளின் பல்கலைக்கழகக் கல்லூரியின் உணவு மற்றும் சுகாதார நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் இமி ஃபீனி தெரிவித்தார். இந்த சோதனை 6 வாரங்கள் நீடித்தது, இதில் மக்களுக்கு 42 கிராம் பால் கொழுப்பு வழங்கப்பட்டது. இதயப் பிரச்சனைகளுடன், சீஸ் ஐ தொடர்ந்து சாப்பிடுபவர்களில் கொலஸ்ட்ரால் குறைவாக இருந்துள்ளது.

இந்த பதிவும் உதவலாம் : High Cholesterol Foods: உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருக்கா? இந்த உணவுகளை எடுக்க வேண்டாம்….

மூளையின் செயல்பாட்டிற்கு நல்லது

சீஸ் சாப்பிடுவது இதயத்திற்கு மட்டும்மல்ல, மூளை அல்லது மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஆய்வின் படி, அறிவாற்றல் ஆரோக்கியத்திற்கும் பாலாடைக்கட்டிக்கும் நேரடி தொடர்பு உள்ளது. ஆய்வின் முடிவில், சீஸ் சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடுகள் அதிகரிக்கும். குறைந்த அளவுகளில் தொடர்ந்து சாப்பிடுவது டிமென்ஷியா அல்லது அல்சைமர் நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : முந்திரி சாப்பிடுவது இரத்தக் கொழுப்பை அதிகரிக்குமா? உணவியல் நிபுணரின் கருத்தைத் தெரிந்துகொள்வோம்

சீஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • சீஸ் சாப்பிடுவது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதால் இருதய அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்.
  • சீஸ் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அபாயத்தைக் குறைக்கிறது.
  • சீஸில் கால்சியம் உள்ளது, இது எலும்புகளை பலப்படுத்துகிறது.
  • இதில் காணப்படும் கால்சியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் மிகவும் உதவியாகக் கருதப்படுகிறது.
  • இதை சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் இதய செயலிழப்பு அபாயம் குறைகிறது.
  • இதை சாப்பிடுவதால் தமனிகளில் கால்சியம் அல்லது கொழுப்பு சேரும் அபாயமும் குறைகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Blood sugar level: வெந்நீர் குடிப்பதால் சர்க்கரையின் அளவு குறையுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Disclaimer