முந்திரி சாப்பிடுவது இரத்தக் கொழுப்பை அதிகரிக்குமா? உணவியல் நிபுணரின் கருத்தைத் தெரிந்துகொள்வோம்

  • SHARE
  • FOLLOW
முந்திரி சாப்பிடுவது இரத்தக் கொழுப்பை அதிகரிக்குமா? உணவியல் நிபுணரின் கருத்தைத் தெரிந்துகொள்வோம்


முந்திரி சாப்பிட்டால் இரத்த கொழுப்பு அதிகரிக்குமா?

முந்திரி சாப்பிடுவது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது என்று பல வதந்திகள் பரவி வருகின்றன.இதைப் பற்றி நீங்களும் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், முந்திரி சாப்பிடுவது இதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும் நல்லது என்பது உங்களுக்குத் தெரியுமா? குளிர்காலத்தில் முந்திரியை சாப்பிடுதால், உங்கள் உடலுக்குப் பல நன்மைகள் கிடைகின்றன. இதில் உள்ள ஃபோலிக் ஆசிட் மாரடைப்பின் அபாயத்தைக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!!!

முந்திரி ஊட்டச் சத்துக்களின் களஞ்சியமாகக் கருதப்படுகிறது.முந்திரியில், செம்பு, வைட்டமின்கள், புரதம், நார்ச்சத்து, மாங்கனீசு, துத்தநாகம், வைட்டமின் K, வைட்டமின் E, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் போதுமான அளவில் உள்ளன. இதை உட்கொள்வதால் உங்கள் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். பிரபல உணவியல் நிபுணர் ருஜுதா திவேகர் அவர்கள், தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் முந்திரி சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்காது என்று அவர் கூறியுள்ளார்.மேலும், முந்திரி பற்றிச் சொல்லப்படும் கட்டுக்கதைகளை உடைத்து, உண்மையைத் தெளிவு படுத்தி உள்ளார்.

முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

முந்திரியில், ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய பல பண்புகள் நிறைந்துள்ளன. இதில் போதுமான அளவுள்ள ஸீக்ஸாக்தைன் மற்றும் லுடீன், கண்களுக்கு நன்மை அளிக்கின்றன. இதனைத் தினமும் உட்கொள்வதன் மூலம் கண்பார்வை மேம்படுத்தலாம். மேலும் ஆரோக்கியமான கண்களையும் பெறலாம்.முந்திரியை உட்கொள்வது, எடை குறைப்பதற்கும் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. முந்திரியில் புரதம் நிறைந்துள்ளது, இதைத் தொடர்ந்து உட்கொள்வது இரத்தக் கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.மேலும், உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களும் குறைக்கிறது.முந்திரியை உட்கொள்வது உங்கள் நினைவாற்றலை அதிகரிப்பதாக, பல ஆராய்ச்சிகள் மற்றும் ஆய்வுகளும் உறுதிப்படுத்துகன்றன.

Image source: freepik

Read Next

வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

Disclaimer

குறிச்சொற்கள்