இப்படி குளிச்சா உடல் எடை குறையுமாம்! அட உண்மை தாங்க.. நீங்களும் ட்ரை பண்ணுங்க!

  • SHARE
  • FOLLOW
இப்படி குளிச்சா உடல் எடை குறையுமாம்! அட உண்மை தாங்க.. நீங்களும் ட்ரை பண்ணுங்க!

ஆம், குளிர்க்காலத்தில் வெந்நீரில் குளிப்பதை காட்டிலும் குளிர்ந்த நீரில் குளிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என பல ஆய்வுகள் கூறுகின்றனர். இது உங்கள் மனதை அமைதிப்படுத்தும், உடலை அமைதியாக வைக்கும், சேர்வை நீக்கும். 70 டிகிரி பாரன்ஹீட் அல்லது 21 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான வெப்பநிலை கொண்ட நீரில் குளிப்பது நல்லது. இதன் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Tips: 4 மாசத்துல 20 கிலோ குறைக்கலாம்.! எப்படி தெரியுமா?

மூளை ஆரோக்கியம் அதிகரிக்கும்

இப்போதெல்லாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில், குளிர்ந்த நீரில் குளிப்பது மூளையில் எலக்ட்ரோஷாக் சிகிச்சை போன்ற விளைவை ஏற்படுத்துகிறது, இது எண்டோர்பின்களை அதிகரிக்கிறது. எண்டோர்பின் ஒருவரை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் உணர வைக்கிறது. இந்த உணர்வு அவரது நினைவாற்றல், மன திறன் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை அதிகரிக்க உதவுகிறது.

வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்

உடல் பருமனை குறைக்க உடலில் வேகமான வளர்சிதை மாற்றம் அவசியம். குளிர்ந்த நீரின் வெளிப்பாடு வளர்சிதை மாற்ற விகிதத்தை பன்மடங்கு அதிகரிக்கும் என்று NCBI ஆராய்ச்சி கூறுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் இந்த தீர்வை முயற்சிப்பதன் மூலம், நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Weight loss: தொங்கும் தொப்பையை 7 நாளில் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் இதை குடியுங்க!

இரத்த ஓட்டம் சீராகும்

குளிர்ந்த நீரில் குளித்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்க்கும். எனவே, இது தசை வீக்கம் மற்றும் வலிக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது. வலியின் உணர்வைக் குறைப்பதன் மூலம் தசை செயல்பாட்டை அதிகரிக்க இது செயல்படுகிறது. பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் இந்த முறையை முயற்சி செய்கிறார்கள்.

நோய்கள் தொற்றை குறைக்கும்

நமது உடலின் திறனை எந்த அளவிற்கு வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். குளிர்காலம் நெருங்கி வருவதால் குளிர்ந்த நீரில் குளித்தால், உடல் குளிருக்குப் பழகி விடும். இது சளியால் ஏற்படும் நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். ஆனால், இதை கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்யவும்.

இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Tips: கல்யாணத்துக்கு அப்புறம் உடம்பு போடுதா? இத ஃபாளோ பண்ணுங்க!

எவ்வளவு நேரம் குளிக்க வேண்டும்?

குளிர்ந்த நீரில் குளிப்பதன் நன்மைகளை முழுமையாக பெற, சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இது பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தும். உங்கள் தண்ணீர் மிகவும் குளிராக இருக்கக்கூடாது மற்றும் வாரத்திற்கு 2 முதல் 3 முறை 5 நிமிடங்களுக்கு மேல் குளிக்கக்கூடாது. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால், குளிப்பதைத் தவிர்க்கவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Weight Gain Cause: TV & ஃபோன் பார்த்தபடி உணவு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமாம்!!

Disclaimer

குறிச்சொற்கள்