Fri Oct 16, 2026 | 05:21 AM IST

Expert

Weight loss: தொங்கும் தொப்பையை 7 நாளில் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் இதை குடியுங்க!

Weight loss: தொங்கும் தொப்பையை 7 நாளில் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் இதை குடியுங்க!Weight loss: தொங்கும் தொப்பையை 7 நாளில் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் இதை குடியுங்க!

Which drink is best for fat loss: நம்மில் பெரும்பாலானோர் தொப்பையை குறைக்க காலம் காலமாக போராடி வருகிறோம். ஒவ்வொரு முறையும் முயற்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர, ஒரு இஞ்ச் கூட குறைந்த பாடு இல்லை. ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைத்தாலும், பிடிவாதமான தொப்பை கொழுப்பு கொஞ்ச கூட அசைவதில்லை. தவறான உணவுப் பழக்கம், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல காரணங்கள் தொப்பைக்கு பின்னால் இருக்கலாம்.

பிடிவாதமான வயிற்று கொழுப்பைக் கரைக்க, சமையலறையில் இருக்கும் சில மசாலாப் பொருட்கள் உதவியாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உண்மை தான். இந்த மசாலாப் பொருட்களின் உதவியுடன் தயாரிக்கப்படும் பானத்தை குடிப்பதால், தொப்பை கொழுப்பு குறைவதுடன், பல நோய்களிலிருந்தும் உங்களை பாதுகாக்கலாம். இந்த அற்புத பானம் குறித்து டயட்டீஷியன் மன்பிரீத் அவர்கள் கூறிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : முட்டையை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடல் எடை விரைவாகக் குறையும்

உண்மையில் இந்த பணம் தொப்பையை குறைக்க உதவுமா?

  • மஞ்சளில் குர்குமின் உள்ளது, இது வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் கொழுப்பு செல்களின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
  • குர்குமின் கொழுப்பு திசுக்களை அடக்கி கொழுப்பை எரிக்க உதவுகிறது.
  • இது இன்சுலின் எதிர்ப்பையும் குறைக்கிறது மற்றும் உடலில் கொழுப்பு சேராது.
  • இஞ்சியில் ஜிஞ்சரால் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
  • எடையை குறைக்கும் பண்புகள் இஞ்சியில் காணப்படுகின்றன. இதனால், உங்கள் தொப்பையை மிக விரைவாக குறைக்கலாம்.
  • கருப்பு மிளகில் பைபரின் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொழுப்பு திரட்சியை குறைக்கிறது.
  • இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம் : ஒரே நாளில் 500 கலோரிகளை குறைக்க வேண்டுமா? இந்த 6 உணவுகளை தேர்வு செய்யுங்கள்

  • இலவங்கப்பட்டையில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது செரிமான அமைப்பு தொடர்பான தொற்றுகளை நீக்குகிறது.
  • நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன, இது லெப்டின் உணர்திறனை அதிகரிக்கிறது.

பெல்லி ஃபேட் பர்னர் பானம் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

மஞ்சள்தூள் - 1 சிட்டிகை.
இஞ்சி - அரை அங்குலம்.
நெய் - 1 டீஸ்பூன்.
கருப்பு மிளகு தூள் - 1 சிட்டிகை.
இலவங்கப்பட்டை பொடி - 1 சிட்டிகை.
தண்ணீர் - சுமார் 200 மிலி.

செய்முறை:

அனைத்து பொருட்களையும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலக்கவும்.
இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதை தொடர்ந்து குடித்து வர 7 நாட்களில் நல்ல மாற்றம் தெரியும்.

Pic Courtesy: Freepik

Read Next

→ Weight Loss Without Exercise: உடற்பயிற்சி செய்யக்கூடாது! ஆனா உடம்பு குறையுனும்? அது எப்படி?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.