Weight Loss Without Exercise: இன்றைய வாழ்க்கை முறையில் உடல் பருமன் என்பது சாதாரண விஷயம். இதனை குறைப்பது பலரின் கனவாக உள்ளது. ஆனால் இந்த பரபரப்பான வாழ்க்கை முறையில், எடையை குறைக்க நேரம் ஒதுக்கமுடியவில்லை. இத்தகைய நேரத்தில் உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைப்பது எப்படி என்று நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்.
உணவை நன்கு மெல்லவும்
நீங்கள் எந்த வகை உணவும் சாப்பிடும் போது அவசர அவசரமாக அப்படியே விழுங்காமல், உணவை நன்கு மென்று சாப்பிடவும். இவ்வாறு செய்யும்போது, நீங்கள் உணவை குறைவாக சாப்பிடுவீர். மேலும் இது உங்கள் செரிமானத்தை எளிதாக்கும். இதனால் மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகள் வராது. இது உங்கள் உடல் எடையை குறைக்கவும், அப்படியே பராமரிக்கவும் உதவும்.

அளவு கட்டுப்பாடு முக்கியம்
உணவுகள் உங்களை கவர்ந்து இழுத்தாலும், அதை அளவோடு உட்கொள்வது நல்லது. உணவை பொருத்த வரை பகுதி கட்டுப்பாடு அவசியம். இதற்கு நீங்கள் சிறிய தட்டுக்களை பயன்படுத்தலாம். இது உங்களை குறைந்த அளவு சாப்பிட தூண்டும். இது உங்கள் உடல் எடையை குறைக்க சிறந்த தேர்வாக இருக்கும்.
புரோட்டீன் அதிகம் சாப்பிடவும்
நீங்கள் புரோட்டீன் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கும். இதனால் நீங்கள் அடிக்கடி சாப்பிடுவது குறையும். இது உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்.
வீட்டு சாப்பாடே போதும்
நாம் அனைவருமே வீட்டை விட வெளியில் வாங்கி சாப்பிடுவதை விரும்புவோம். அது எப்போவாவது ஒரு முறை என்றால் சரி. எப்போதும் அந்த பழக்கத்தை வைத்திருப்பது, உங்கள் உடல் நலத்தை கெடுக்கும். வெளியால் வாங்கும் உணவு ஹைஜீனாக இருக்குமா என்றால் அது கேள்விகுறி தான். மேலும் அதில் சில கலப்படங்கள் இருக்கலாம். அவை உங்கள் உடல் பருமனாக காரணமாக இருக்கலாம். ஆகையால் முடிந்த வரை வீட்டில் சமைத்து சாப்பிடவும். இது உடல் எடையை பராமரிக்க உதவும்.
இதையும் படிங்க: Weight Loss Tips: பால் பொருட்களை பயன்படுத்தி எடையை குறைப்பது எப்படி?
நார்ச்சத்து உணவுகளை எடுத்துக்கோங்க
நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது, உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கும். இதனால் நீங்கள் அடிக்கடி சாப்பிடமாட்டீர்கள். மேலும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் செரிமானத்தை எளிதாக்கும். இதனால் உங்கள் எடை கூடாது.
அதிக தண்ணீர் குடிக்கவும்
நீங்கள் தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும் இது உங்கள் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும். மேலும் இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்தும். இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
சர்க்கரையை தவிர்க்கவும்
சர்க்கரை நிறைந்த பண்டங்கள் மற்றும் சர்க்கரை செறிவூட்டப்பட்ட எனர்ஜி பானங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இதில் உள்ள சர்க்கரை உள்ளடக்கம் உங்கள் எடையை அதிகரிக்கும். இதற்காக நீங்கள் இயற்கை சர்க்கரை கொண்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளவும். இது உங்கள் உடல் எடை குறைய உதவும்.
Image Source: Freepik