Weight Loss: நீங்களும் ஜப்பானியர்களை போல சிக்குன்னு இருக்கணுமா? அவங்க பிட்னஸ் ரகசியம் இதுதான்!

  • SHARE
  • FOLLOW
Weight Loss: நீங்களும் ஜப்பானியர்களை போல சிக்குன்னு இருக்கணுமா? அவங்க பிட்னஸ் ரகசியம் இதுதான்!

நம்மில் பலர் யோசித்திருப்போம்… “எப்படி இந்த ஜப்பானியர்கள் அனைவருமே சைஸ் ஸிரோவாக இருக்கிறார்கள். அவர்களின் ரகசியம் தான் என்ன?” என்று. உடல் எடையை குறைக்க அவர்கள் பல முறைகளை பயன்படுத்துகின்றனர். அவற்றில் ஒன்று ஹரா ஹச்சி பு (Hara hachi bun me). எடை இழப்புக்காக ஜப்பானியர்கள் பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்று. இந்த முறையில் எவ்வளவு பசிக்கிறதோ, அவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Ginger Water Benefits: குளிர்கால நோய்களில் இருந்து விடுபட தினமும் ஒரு கிளாஸ் இஞ்சி தண்ணீர் குடியுங்க!

இந்த முறையால் 100 சதவிகித எடையைக் குறைக்க முடியும் என்று நாங்கள் கூறவில்லை. இருப்பினும், பல நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் இந்த முறையை எடை இழப்புக்கு பயனுள்ளதாக கருதுகின்றனர். உடற்பயிற்சி செய்தும், டயட்டைப் பின்பற்றிய பின்னரும் உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியவில்லை என்றால், ஜப்பானிய எடையைக் குறைக்கும் முறையை முயற்சிக்கலாம். ஹரா ஹச்சி பு என்றால் என்ன? அதை எப்படி பின்பற்ற வேண்டும், அதன் பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஹரா ஹச்சி பு என்றால் என்ன?

Hara Hachi Bu என்பது எடையைக் குறைக்கும் ஒரு ஜப்பானிய முறை. இந்த முறையில் கவனத்துடன் சாப்பிடுவது பற்றி விவாதிக்கப்படுகிறது. இதன் மூலம் உடலை நோய்களில் இருந்து பாதுகாத்து உடல் எடையையும் குறைக்கலாம். ஹரா ஹச்சி பு விதியின்படி, 80 சதவீதம் மட்டுமே வயிற்றை நிரப்ப வேண்டும். ஹரா ஹச்சி புவில் சிறிய பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வழியில் நீங்கள் குறைந்த உணவை உட்கொள்வதோடு, அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். ஹரா ஹச்சி புவின் கூற்றுப்படி, உங்கள் பசிக்கு ஏற்ப சாப்பிட வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம் : இரே வாரத்தில் 2 கிலோ குறைய இது மட்டும் போதும்!

ஹரா ஹச்சி பு விதிகள் என்ன?

  • உணவின் அளவைக் கவனியுங்கள், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எந்த அளவு சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
  • ஹரா ஹச்சி பு விதியின்படி, அதிக அளவில் சாப்பிடக்கூடாது.
  • இந்த விதியின்படி, சிறிய பாத்திரங்களில் உணவை உண்ணவும், உணவை நன்கு மென்று சாப்பிடவும்.

ஹரா ஹச்சி பு முறையின் நன்மைகள்

  • இந்த விதியைப் பின்பற்றுவதன் மூலம் செரிமான அமைப்பு நன்றாக இருக்கும்.
  • உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.
  • ஹரா ஹச்சி பு விதியின் உதவியுடன் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது.
  • நீங்கள் ஹரா ஹச்சி பு விதியைப் பின்பற்றினால், அதிகப்படியான உணவு மற்றும் உணவுக் கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

Pic Courtesy: Freepik

Read Next

Weight Loss: உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீங்களா?… அப்போ இந்த உணவுகளை கட்டாயம் தவிருங்கள்!

Disclaimer