Weight loss: தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை குடியுங்க…. ஒரே வாரத்தில் 5 கிலோ குறைக்கலாம்!

  • SHARE
  • FOLLOW
Weight loss: தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை குடியுங்க…. ஒரே வாரத்தில் 5 கிலோ குறைக்கலாம்!


Which food is good in empty stomach for weight loss: தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கத்தால் பலரும் எடை அதிகரிக்கும் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். உடல் எடையை குறைக்க நாம் என்ன தான் முயற்சி செய்தாலும் ஒரு பலனும் கிடைப்பதில்லை. பலர் எடை அதிகரிப்பதைத் தடுக்கவும், அதிகரித்த எடையைக் குறைக்கவும் நாம் டயட்-யை கடைபிடிப்போம். இன்னும் சிலர் ஜிம்மில் மணிக்கணக்கில் வியர்வை சிந்த சிந்த உடற்பயிற்சி செய்வார்கள்.

ஆனாலும், நாம் சிறந்த பலன்களை பெறுவதில்லை. ஏனென்றால், நாம் செய்யும் சிறிய தவறு நமது முழு முயற்சியையும் வீணாகிவிடும். சரியான உணவுப் பொருட்களுடன் உங்கள் நாளைத் தொடங்கினால், உங்கள் எடையைக் குறைக்கும் இலக்கிலும் வெற்றிபெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், உண்மைதான். உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுகள் பற்றி பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Weight Loss: உடல் எடையை குறைக்க உதவும் பட்டர்; எப்படி சாப்பிடுவது?

உடல் எடையை குறைக்க உதவும் 5 சூப்பர்ஃபுட்

வெந்தயம்

இரவு தூங்கும் முன், ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஊறவைத்த வெந்தயத் தண்ணீரைக் குடிக்கவும். நீங்கள் விரும்பினால், ஊறவைத்த வெந்தய விதைகளையும் உட்கொள்ளலாம். வெந்தயம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, பசியைக் குறைக்கும். இதனால், உடல் எடையை கட்டுப்படுத்தலாம்.

கற்றாழை ஜூஸ்

ஒரு கிளாஸ் தண்ணீரில் சுத்தம் செய்த கற்றாழை ஜெல்லை சேர்த்து பிளெண்டரின் உதவியுடன் ஜூஸ் தயாரிக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இதை குடிக்கவும். இது செரிமான பிரச்சனைகளைத் தடுப்பதோடு, உட்புற வீக்கத்தை சரி செய்யும் மற்றும் எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். கற்றாழை கிடைக்கவில்லை என்றால், சந்தையில் கிடைக்கும் கற்றாழை பொடியையும் பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Cucumber For Weight Loss: கிடுகிடுவென உடல் எடை குறைய... தினமும் 2 துண்டு வெள்ளரி போதும்!

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்ல, உடல் எடையை குறைக்க சிறந்தது. அதுவும் காலையில் சாப்பிடுவது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும். இது உடலை ஈரப்பதமாக்குகிறது மற்றும் நார்ச்சத்து நிறைந்தது. வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது. சரும ஆரோக்யத்தையும் பராமரிக்கிறது.

பப்பாளி

சத்துக்கள் நிறைந்த பப்பாளியில் பப்பைன் என்ற என்சைம் உள்ளது. இது செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் எடை இழப்பு பயணத்தில் உதவியாக உள்ளது. அதன் பலன்களைப் பெற, காலையில் எழுந்தவுடன் ஒரு கிண்ணம் பழுத்த பப்பாளியை சாப்பிடுங்கள். பப்பாளியை ஜூஸ் ஆகவும் எடுத்து கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Tips: படுத்துக்கிட்டே உடல் எடையை குறைக்கலாமாம் - இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ்

கேரட் மற்றும் பீட்ரூட் சாறுடன் உங்கள் நாளைத் தொடங்கினால், இதைவிட சிறப்பாக எதுவும் இருக்க முடியாது. ஏனெனில், இதில் போதுமான அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதை வீட்டில் சாறு தயாரிக்க முயற்சிக்கவும். கேரட் மற்றும் பீட்ரூட் சாறு ஒரு பிளெண்டர் உதவியுடன் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். இதில், நார்சத்து உட்பட பல வைட்டமின்கள் உள்ளது. இது பசியை கட்டுப்படுத்து உடல் எடையை குறைக்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

Snacks For Weight Loss: ஸ்நாக்ஸ் சாப்பிட்டாலும் வெயிட் போடாம இருக்க ஈவ்னிங் இதெல்லாம் சாப்பிடுங்க

Disclaimer