Best Evening Snacks For Weight Loss: உடல் எடை அதிகரிப்பு இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இதனால் நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்படலாம். இன்றைய காலகட்டத்தில் ருசிக்காக எண்ணெய் நிறைந்த, பதப்படுத்தப்பட்ட, ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் சிற்றுண்டிகளையே எடுத்துக் கொள்கின்றனர்.
எனவே ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சிற்றுண்டி வகைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பதுடன் பல்வேறு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். இதில் எடை இழப்புக்கு உதவும் மாலை நேர சிற்றுண்டி வகைகளைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Flours For Weight Loss: எடை வேகமாக குறையணுமா? அப்ப இதுல ஒரு மாவை தினமும் சாப்பிடுங்க
எடை இழப்புக்கு மாலை சிற்றுண்டிகள்
சில பயனுள்ள மாலை நேர சிற்றுண்டி தேர்வுகள் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதில் சிலவற்றைக் காண்போம்.
முளைகட்டிய பச்சைப்பயறு
இது உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய மாலை நேர சிற்றுண்டி வகையாகும். இதில் பயறு வகைகள் ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைக்கப்பட்டு, பின் நீரை வடிகட்டி, அந்த பயறு வகைகளைப் பருத்தித் துணியில் தளர்வாகக் கட்டி தொங்க விடலாம். பின் நீரைத் தெளித்து ஈரப்பதத்தில் வைக்கும் நிலையில் முளையானது 6 முதல் 8 மணி நேரத்திற்குள் முளைப்பு தோன்றும்.
இதை மாலை மட்டுமல்லாமல் காலை, மதியம், இரவு என எந்த வேளைகளிலும் முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.அதே சமயம், ஒரு நாளைக்கு எதாவதொரு வேளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். எனினும், இதை மதிய உணவில் சாப்பிடுவது சிறந்தது.
வறுத்த கொட்டைகள்
இது ஒரு அருமையான மற்றும் சத்தான சிற்றுண்டி வகையாகும். இவற்றில் நிறைய கொழுப்புகள் இருப்பினும் இவை சத்தான சிற்றுண்டிகளின் பட்டியலில் அடங்கும். இந்த கொட்டைகளில் நிறைந்துள்ள புரதங்கள் உடல் எடை இழப்புக்கு உதவுகிறது. பாதாமில் அதிகளவிலான வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இதில் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் உள்ளது. மேலும் இவற்றில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்திற்கும், கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Roti Or Rice For Weight Loss: உடல் எடை குறைய ரொட்டி அல்லது சாதம்! எது சாப்பிடலாம்?
ஆரோக்கியமான ஓட்ஸ்
ஓட்ஸில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மற்ற தானியங்களுடன் ஒப்பிடுகையில் ஓட்ஸ் வேகமாக வயிற்றை நிரப்புகிறது. இதில் ஆரோக்கியமான நார்ச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. எடை இழப்பை விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக ஓட்ஸ் அமைகிறது. இதை சரியான முறையில் எடுத்துக் கொள்வது நல்லது. ஓட்ஸ் ஸ்மூத்தி, ஓட்ஸ் சூப், ஓட்ஸ் பேன் கேக் போன்ற வகைகளில் ஓட்ஸை மாலை நேரங்களில் எடுத்துக் கொள்ளலாம்.
வறுத்த மசாலா கொண்டைக்கடலை
இது ருசியான மற்றும் திருப்திகரமான சிற்றுண்டியாக அமைகிறது. இதில் புரதங்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வறுத்த கொண்டைக்கடலை பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது இயற்கையாகவே சத்தான தன்மையை அதிகரிக்கிறது. கலோரி நிறைந்த தின்பண்டங்களுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது.
குயினோவா உப்புமா
உடல் எடை இழப்புக்கு குயினோவா பெரிதும் உதவுகிறது. இதில் புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் இன்னும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. குயினோவா உப்புமாவில் விருப்பங்களுக்கு ஏற்ப காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருள்களைச் சேர்ப்பது சுவையை அதிகரிப்பதுடன் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
நட்ஸ்
நட்ஸ் ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டியாகக் கருதப்படுகிறது. இதில் நிறைந்துள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இவை கூடுதல் உடல் எடையைக் குறைப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அதன் படி, பாதாம் அல்லது வால்நட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த ஆரோக்கியமான மாலை நேர சிற்றுண்டி வகைகள் உடல் நல ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும், இது உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை சட்டுனு குறைக்க இஞ்சி மற்றும் மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க
Image Source: Freepik